என் மலர்
நீங்கள் தேடியது "Police ADSP"
- கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவு ஏடிஎஸ்பி பிரேமானந்தன் கோவை மாவட்ட ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- நீலகிரி மாவட்ட காவல்துறை தலைமையக ஏடிஎஸ்பி தங்கவேல் காஞ்சி மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் 4 ஏடிஎஸ்பி-க்களை இடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவின் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட காவல்துறையின் தலைமையக பிரிவு ஏடிஎஸ்பி பிரேமானந்தன் கோவை மாவட்ட ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட காவல்துறை தலைமையக ஏடிஎஸ்பி தங்கவேல் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பி சவுந்தரராஜன் நீலகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- சிவகிரியில் மதுரை - கொல்லம் செல்லும் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.
- இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசாருக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை ஏ.டி.எஸ்.பி. கூறினார்.
சிவகிரி:
சிவகிரி காவல் நிலைய சரகம் சிவகிரியில் மதுரை - கொல்லம் செல்லும் நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து நடைபெற்று வருகின்ற மொட்டை மலை பகுதி, பழைய காவல் நிலையம் அருகே, தொட்டிச்சிமலை ஆற்றுப் பாலம் அருகே, நெல் கொள்முதல் நிலையம் அருகே மற்றும் உள்ளார் பகுதியில் உள்ள இடங்களை தென்காசி தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலை மையிலான போலீ சாருக்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.