search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police enquiry"

    • ஆடலூர் செல்லும் சாலையில் தலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
    • முனீஸ்வரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள பச்சமலையான்கோட்டையை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 32). இவர் கேபிள் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை தருமத்துப்பட்டி அருகே ஆடலூர் செல்லும் சாலையில் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முனீஸ்வரனுக்கு 2 முறை திருமணம் நடந்து மனைவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இவருக்கு வேறு சில பெண்களுடனும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவரை தாக்கி இங்கே வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று ேபாலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே தெரியவரும்.

    ஆடலூர் பகுதியில் இவருக்கு தெரிந்தவர்கள் யாரேனும் உள்ளனரா என்றும் இவர் யார் யாரிடம் செல்போனில் பேசினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பிறகே இவர் இறப்பில் ஏற்பட்ட மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முனீஸ்வரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியரை அருகே வனப்பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள புளியரை அருகில் தமிழக-கேரளா எல்லை பகுதியில் இருக்கும் எஸ் வளைவு பகுதியில் சுமார் 60 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் வனத்துறைக்கு சொந்தமான மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். 

    இவர் நேற்று தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த வழியாக சென்றோர் பார்த்து புளியரை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து  இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என புளியரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர் மாவட்டத்தில் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் திருடியதாக சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Karur
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதாக மர்ம நபர்கள் அவனிடம் விசாரிக்க வீட்டுக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் சிறுவன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் சிறுவன் தனது வீட்டின் வாசலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தின் போது மர்ம நபர்களின் கொடூர தாக்குதலுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பிச்சென்ற சிறுவனின் தாயார் இலஞ்சியம், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தாக்கிய நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சாதாரண செல்போனை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Karur
    உத்தனப்பள்ளி அருகே 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தன பள்ளி அருகே சானமாவு வனபகுதியில் வண்ணான் ஏரி ஆழமரத்தில் 30 வயது மதிக்கதக்க ஒரு வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை அந்த வழியாக ஆடு மேய்க்க சென்ற கூலி தொழிலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து ஊர் மக்களிடம் அவர் கூறினார். அங்கு அவர்கள் திரண்டு வந்து உடலை பார்த்தனர். 

    இந்த சம்பவம் குறித்து உத்தனபள்ளி போலீசுக்கும், வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து அந்த வாலி பரின் உடலை மரத்தில் இருந்து இறக்கி கைப்பற்றி பார்வையிட்டனர். விசாரணையில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் சிகப்பு கலர் சட்டையும், கிளி பச்சை கால் சட்டையும் அணிந்து இருந்தார். அந்த வாலிபர் தூக்கில் தொங்கி சுமார் 1 மாதம் இருக்கும். இதனால் அவரது உடல் மிகவும் மோசமாக அழுகிய நிலையில் இருந்தது. அந்த வாலிபர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இறந்தவர் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சு விசாரணை நடத்தி வருகின்றார்.
    ஈரோடு ரெயில்வே காலனியில் இன்று காலை மர்ம ‘பேக்’ ஒன்று கிடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனியில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ரெயில்வே மிஸ்ட் ஸ்கூல் அருகே கருப்பு கலர் டிராவல் ’பேக்’ ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதை பார்த்து அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் அதில் ஏதாவது மர்ம பொருட்கள் இருக்குமோ என பயந்தனர்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கும் சூரம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ‘பேக்’கை திறந்து அதில் உள்ள பொருட்களை சோதனையிட்டனர்.

    அப்போது அந்தப் ‘பேக்’குக்குள் தினேஷ் குமார் ராமமூர்த்தி நகர், ஈரோடு என்று எழுதப்பட்ட அடையாள அட்டை இருந்தது. மேலும் கணேஷ் ஈரோடு என்ற பெயரும் இருந்தது. இதையடுத்து அந்த அடையாள அட்டையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.

    அப்போது அந்த பேக் ஈரோடு ஜோசியர் கணேஷ் உடையது என்பது தெரியவந்தது. கணேஷ் சென்னைக்கு கூரியர் பார்சல் அனுப்புவதற்காக தினேஷ்குமார் என்பவரிடம் இந்த பேக்கை கொடுத்துள்ளார்.

    அவர் பார்சல் அனுப்பு வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்த போது அந்த பேக்கை மர்ம நபர் யாரோ திருடிச் சென்று விட்டனர். இது குறித்து அவர் ஈரோடு ரெயில்வே நிலையபோலீசில் புகார் கொடுத்து சென்று விட்டார்.

    இந்நிலையில்தான் அந்த பேக் இன்று காலை ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே மிஸ்டு ஸ்கூல் அருகே கிடந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அந்த ‘பேக்’கை கணேஷிடம் ஒப்படைத்தனர், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேதராப்பட்டு:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழ் வெள்ளைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வைரசாமி. இவரது மகள் நீலவேணி (வயது 19). இவர், புதுவை நெட்டப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப ஊழியராக கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வந்தார்.

    அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் பணிக்கு சென்று வந்தார். இன்று காலை முதல் ஷிப்டு பணிக்கு காலை 5.30 மணிக்கு சென்றார். அங்குள்ள கேண்டீனில் காலை சிற்றுண்டி சாப்பிட சென்ற நீலவேணி திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நீலவேணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நீலவேணியின் மர்ம சாவு குறித்து அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்துக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    மீஞ்சூர் அருகே வெடிகுண்டு மற்றும் கத்திகளுடன் 12 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கேசவபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் கூலிப்படையினர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்து புகுந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 12 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, 6 பட்டா கத்திகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் பிடி பட்டவர்கள் பிரபல ரவுடியான சேது மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரிந்தது. குற்றச் செயலில் ஈடுபட்ட அவர்கள் திட்டமிட்டு பதுங்கி கண்டுபிடிக்கப்பட்டது. கைதான சேது மீது 2 கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் அருகே திருவெள்ளவாயலில் மனைவியிடம் நகை பறித்ததை தடுத்த ஜெயராமன் என்பவர் கொள்ளை கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் சேது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். பிடிபட்ட ரவுடி கும்பல் வேறு எந்த குற்றச் செயலிலாவது ஈடுபட திட்டமிட்டனரா? அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்-யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

    திருவள்ளூரில் ஆடிட்டர்-மனைவியை கட்டிப்போட்டு 200 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், ராஜாஜி புரம் பத்மாவதி நகரில் வசித்து வருபவர் ராமச்சந்திரன், ஆடிட்டர். இவரது மனைவி ரஜிதா. இவர்களது மகன் லோகேஷ்.

    நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு கீழ்தளத்தில் உள்ள அறையில் ராமச்சந்திரனும், அவரது மனைவி ரஜிதாவும் தூங்கினர். மேல் தளத்தில் உள்ள அறையில் லோகேஷ் இருந்தார்.

    நள்ளிரவு ஒரு மணி அளவில் முகமூடி அணிந்த 5 பேர் கும்பல் திடீரென ராமச்சந்திரன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து புகுந்தனர். சத்தம் கேட்டு எழுந்த ராமச்சந்திரனும், ரஜிதாவும் கொள்ளையர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொள்ளையர்கள் மிரட்டினர். கூச்சலிட்டால் வெட்டி கொன்று விடுவதாக மிரட்டினர்.

    இதனால் பயந்து போன ராமச்சந்திரனும், ரஜிதாவும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் துணியால் கட்டிப் போட்டனர்.

    பின்னர் பீரோவில் இருந்த 200 பவுன் நகை, ரூ. 1 லட்சம் மதிப்பிலான தங்கத்தால் ஆன மூக்கு கண்ணாடி, 2 செல்போன்களையும் கொள்ளையடித்தனர். மேலும் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த ராமச்சந்திரனின் காரையும் திருடிவிட்டு முகமூடி கும்பல் தப்பி சென்று விட்டனர்.

    கொள்ளை சம்பவம் நடந்து கொண்டு இருந்த போது மேல்தளத்தில் உள்ள அறையில் லோகேஷ் தூங்கிக் கொண்டு இருந்தார். அறைக் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் பெற்றோரின் அலறல் சத்தம் அவருக்கு கேட்கவில்லை.

    நீண்ட நேரத்துக்கு பின்னர் லோகேஷ், சத்தம் கேட்டு எழுந்து கீழ்தளத்துக்கு வந்தார். அப்போது பெற்றோர் கட்டப்பட்டு கிடப்பதையும், வீட்டில் கொள்ளை நடந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பெற்றோரை மீட்டார்.


    இது குறித்து திருவள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி.சக்கரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, இன்ஸ்பெக்டர் சர்தார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    முகமூடி கும்பல் திருடிச் சென்ற காரின் பதிவு எண் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசர் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமிரா இல்லை. அப்பகுதியில் உள்ள வேறு கண்காணிப்பு கேமிராக்களில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராமச்சந்திரன் வீட்டில் இருந்த 200 பவுன் நகைகளை சென்னையில் உள்ள தனியார் வங்கியின் லாக்கரில் வைத்து இருந்தார். கடந்த வாரம் வங்கியில் லாக்கர்கள் மாற்றி அமைக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் நகைகளை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தார். இதனை அறிந்த கொள்ளை கும்பல் நகையை கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள்.

    கொள்ளை கும்பல் திட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே ராமச்சந்திரனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. #tamilnews

    ×