search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police missing"

    தப்பி ஓடிய சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வெட்டாறு செல்கிறது. அங்கு உள்ள சுடுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் மாலை கீழ்வேளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ்காரர் மாஸ்கோ (வயது 32) உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் சாராய வியாபாரி தனராஜ் (21) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள வெட்டாற்றில் குதித்துள்ளார்.

    இதை கண்ட போலீஸ்காரர் மாஸ்கோ, தனராஜை பிடிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். அப்போது கனமழையால் ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் போலீஸ்காரர் அடித்து செல்லப்பட்டு, முட்புதருக்குள் சிக்கி கொண்டார். இதை கண்ட மற்ற போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், கீழ்வேளூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் போலீஸ்காரர் உயிருடன் மீட்கப்பட்டார்.
    கோவை மத்திய சிறையில் வேலை பார்த்த ஆயுதப்படை ஏட்டு திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 46).

    மத்திய ஆயுதப்படை தலைமை காவலரான (சி.ஆர்.பி.எப்.) இவர் கடந்த 2 வருடங்களாக கோவை மத்திய சிறையில் வேலை பார்த்து வருகிறார்.

    சிறை வளாகத்தில் உள்ள பட்டாலியன் முகாமில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்ததும் குளிப்பதற்காக சென்ற அண்ணாதுரை அதன் பிறகு முகாமுக்கு திரும்ப வில்லை.

    வெகுநேரமாகியும் அண்ணாதுரையை காணாததால் சந்தேகமடைந்த சகஊழியர்கள் அவரை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அண்ணாதுரையை தேடி வருகின்றனர்.

    ஐகோர்ட்டில் பாதுகாப்புக்கு சென்ற மத்திய பாதுகாப்பு படை வீரர் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள சென்னை துறைமுக பொறுப்பு கழக குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபேஸ். ஜெய்ப்பூரை சேர்ந்த இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக உள்ளார். சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று முன்தினம் பாதுகாப்பு பணிக்கு சென்ற பிரபேஸ் பின்னர் திரும்பிவரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×