என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police request"
- சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.
- குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்தனர்.
திருவனந்தபுரம்:
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு வருகின்றனர். இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு தரிசன நேரம் அதிகரிப்பு, வரிசை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது. இருந்த போதிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காத வகையில் இருப்பதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வெகுநேரம் காத்திருப்பது தொடர் கதையாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கும் கேரள ஐகோர்ட்டு, சபரிமலையில் ஏற்படும் நெரிசல் குறித்து ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய சட்டக்குழுவை நியமிக்க பரிசீலித்து வருகிறது. மேலும் பக்தர்களின் குறைகளை ஆய்வு செய்யவும், பக்தர்களுக்கான வசதிகளை மதிப்பீடு செய்யவும் சட்டக்குழு நியமிக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிகவும் கட்டுக் கடங்காத வகையில் இருந்தது. இதன் காரணமாக பம்பையிலேயே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மலையேற வேண்டிய நிலை நிலவியது. மலைப்பாதை எங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
கோவிலில் நடைப்பந்தல், சன்னிதான பகுதி என அனைத்து பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பதினெட்டாம் வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 முதல் 85 பேர் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்தனர்.
கோவில் நடை திறக்கப்பட்ட 25 நாட்களில் 16 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே தினமும் 90ஆயிரம் பக்தர்கள் மெய்நிகர் வரிசை வழியாக வந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அந்த எண்ணிக்கையை நீதிமன்றம் 80 ஆயிரமாக குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் உடனடி முன்பதிவு செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இதன்காரணமாகவே பக்தர்கள் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காத வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவை நிறுத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
- வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம்.
- அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசில் புகார் அளிக்கவேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
சென்னை:
ஆன்லைனில் பெண்களின் புகைப்படங்களை காட்டி வலைவிரித்து பின்னர் பணம் பறிக்கும் கும்பலின் மோசடி லீலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அந்த வகையில் வியட்னாம், மொராக்கோ, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் அடிக்கடி அழைப்புகள் வருகின்றன.
இதனால் சென்னையில் வசிக்கும் வாலிபர்கள் முதல் வயதான நபர்கள் வரை பெரும்பாலானவர்கள் தவித்துப்போய் உள்ளனர்.
இது போன்ற அழைப்புகளை எடுத்து பேசினால் சில நேரங்களில் செல்போன்கள் செயல் இழந்து விடுகின்றன. எதிர்முனையில் பேசுபவர்கள் சில நேரங்களில் மவுனமாக உள்ளனர். சிலர் பெண் குரலில் பேசுவதையும் கேட்க முடிகிறது. இந்த அழைப்புகள் எதற்காக வருகின்றன? என்பதை யூகிக்க முடியவில்லை என போன் அழைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இந்த அழைப்புகள் சில நேரங்களில் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று போலீசார் எச்சரிக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் அது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தி விடும். குறிப்பாக வெளிநாட்டு அழைப்புகள் வரும்போது திடீரென ஆடையின்றி பெண்கள் தோன்றி விடுவார்கள். அதனை நீங்கள் ஒரு கணம் பார்த்து விட்டாலே உங்கள் போட்டோ அவர்களின் செல்போனில் பதிவாகிவிடும். இதை வைத்து எதிர்முனையில் போன் செய்தவர்கள் உங்களிடம் பணத்தை பறிக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கும் போலீசார் இது போன்ற போன் அழைப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசில் புகார் அளிக்கவேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
- காரைக்காலில் கல்லூரி மாணவி மாயமானார்.
- 04368222402 என்ற போனில் தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திருநள்ளாறு மாரியம்மன் கோவில் தெருவை ச்சேர்ந்தவர் ஆரவமுதன். இவரது மகள் ஈஸ்வரி தெய்வநாயகி(வயது19). இவர் கடந்த 21-ந் தேதி, வழக்கம் போல், வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றார். அன்று இரவு வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக உறவினர்கள், தோழிகள் வீட்டில் தேடியும் கிடைக்கா ததால், தந்தை ஆரவமுதன், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில், மகளை தேடி கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர். மேலும், ஈஸ்வரி தெய்வநாயகி கல்லூரி சென்ற அன்று, கருநீலம் மற்றும் வெள்ளை கலரில் சுடிதார் அணிந்தி ருந்ததாகவும், இடது கை மணிகட்டில் ஏ.இ.எஸ்எச்யு. என பச்சை குத்தியிருப்பார்., இவரை பற்றி தகவல் தெரிந்தால், காரைக்கால் நகர காவல்நிலையம அல்லது, 04368228007, 04368222402 என்ற போனில் தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்