என் மலர்
நீங்கள் தேடியது "Police rushed and arrested him"
- கள்ளச்சந்தை தடுப்பு சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை
- புகார்கள் 18005995950 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்
திருவண்ணாமலை:
செய்யாறு பெரும்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவரை ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் செய்யாறு பகுதியில் குமார் பதுங்கி இருப்ப தாக இன்ஸ்பெக்டர் சுதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் ஏட்டுகள் குமார், சுந்தரபாண்டியன், நாகமுத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று குமாரை கைது செய்தனர்.
மேலும் இன்ஸ்பெக்டர் சுதா கூறுகையில், பொது வினி யோக திட்ட பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும், பதுக்குவதும் குற்ற மாகும். இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது வினியோக திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.