search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police security at major Hindu temples"

    • கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் எதிெராலி
    • கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

    திருவண்ணாமலை:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதி யில் கிறிஸ்துவ மதவழிபாட்டு கூட்டத்தில் நேற்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து திரு வண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் உத்தரவின் பேரில் நேற்று மாவட்டத்தில் முக்கிய தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மேலும் முக்கிய இந்து கோவில்களிலும் பாது காப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதி காரிகள் கூறுகையில் கேரளா சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய தேவாலயங்களாக கண்டறி யப்பட்ட சுமார் 135 தேவால யங்களுக்கு தலா ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட போலீசார் மூலம் தொடர்ந்து ரோந்து பணி தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதுமட்டு மின்றி முக்கிய இந்து கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது என்றனர்.

    ×