என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police Womens Day"

    • மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பெண் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசளித்தார்.
    • இனிமேல் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவேன் என்று அந்த பெண் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்

    நெல்லை:

    மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நெல்லை மாநகர காவல் துறை சார்பில் பெண் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கும் நிகழ்ச்சி பாளை காந்தி மார்க்கெட் அருகில் நடைபெற்றது. இதில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் ( கிழக்கு) சீனிவாசன் கலந்துகொண்டு அந்த வழியாக வந்த பெண் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசளித்து அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதற்காக பெண்கள் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

    அப்போது அங்கு வந்த பெண் வாகன ஓட்டி ஒருவர் தலையில் ஹெல்மெட் அணியாமல் இருந்தார். அவரை தடுத்து நிறுத்திய துணை கமிஷனர் சீனிவாசன் திருக்குறள் புத்தகம் வழங்கியது மட்டும் இல்லாமல் இனிமேல் ஹெல்மெட் அணிந்து வருவேன் என்று பேப்பரில் எழுதி தரும்படி நூதன முறையில் எச்சரிக்கையும் விடுத்தார். அந்த பெண்ணும் பேப்பரில் இனிமேல் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்

    ×