என் மலர்
நீங்கள் தேடியது "pongal gift"
- வருகிற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்கி விடலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.
- வழக்கமாக வழங்கப்படும் பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு ரூ.1000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாமா? அல்லது ரேசன் கடைகளில் அதையும் கொடுக்க சொல்லலாமா? என்று ஆலோசனை நடந்து வருகிறது.
சென்னை:
பொங்கல் பரிசாக இந்த ஆண்டு 1000 ரூபாய் வழங்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்தது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பணத்திற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை முழு கரும்புடன் வழங்கப்பட்டது.
இதில் உருண்டை வெல்லம் வழங்கியதில் பல இடங்களில் தரமான வெல்லம் வழங்கப்படாததால் புகார்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சனம் செய்தன.
இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்கி விடலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.
வழக்கமாக வழங்கப்படும் பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு ரூ.1000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாமா? அல்லது ரேசன் கடைகளில் அதையும் கொடுக்க சொல்லலாமா? என்று ஆலோசனை நடந்து வருகிறது.
ஏனென்றால் இந்த பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்க பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இதுவரை கொள்முதல் செய்ய தற்போது வரை டெண்டர் விடப்படவில்லை.
இதன் காரணமாக இந்த ஆண்டு பண்டிகைக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் வழக்கமாக வழங்கப்படக்கூடிய பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பரிசுத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
- பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- பொங்கல் பரிசு தொகுப்பு பெற ‘ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக 1,129 ரேஷன் கடைகள், மகளிர் குழுக்கள் மூலமாக 14 ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் 22 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,129 ரேஷன் கடைகள் உள்ளன. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது என்றும், இதற்காக ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு வங்கி கணக்கு இணைக்கப்பட உள்ளதாகவும் திருப்பூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இவ்வாறு வங்கிக்கணக்கு இணைக்காமல் உள்ள கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு சென்று கார்டில் உள்ள யாராவது ஒருவரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறுஞ்செய்தியில் வேகமாக தகவல் பரவியது. அதுவும் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, பொங்கல் பரிசு தொகுப்பு பெற 'ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை. அது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்–றார்.
- பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் நடவடிக்கை
- வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தல்
வேலூர்:
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை வாயிலாக பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையொட்டி வழங்கப்படும் பரிசு தொகுப்பு பொருட்களும் கூட்டுறவுத்துறை மூலம் தான் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களில் வங்கி கணக்கு குறித்த விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் கார்டுதாரர்கள் வங்கி கணக்கு சேகரித்து பதிவு செய்து வருகின்றனர்.ஏற்கனவே வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் அவர்கள் விவரம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.ஆனால் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காதவர்களிடம் ஆதார் எண் இணைக்க வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்களது வங்கி கணக்கில் உடனடியாக சென்று ஆதார் இணைத்துக் கொள்ள வேண்டும்.
வங்கி கணக்கு எதுவும் இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் பணம் இல்லா வங்கி கணக்கு தொடங்குவது தொடர்பான பணிகளை ரேசன் கடை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக நேற்று உணவுத்துறை அதிகாரிகளுக்கு அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் எந்த காரணத்தைக் கொண்டும் ரேசன் அட்டைதாரர்களிடம் ஆதார் நம்பரை கேட்கக்கூடாது.
வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் அவர்களை உடனடியாக வங்கிக்கு சென்று ஆதார் நம்பரை இணைக்க அறிவுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு தொடங்கி ஆதார் நம்பரை இணைத்து விவரங்களை ரேஷன் கடையில் தெரிவிக்கும்படி அறிவுறுத்த வேண்டும் எந்த காரணத்தைக் கொண்டும் துறை அலுவலர்கள் ரேசன் கார்டுதாரர்களிடம் ஆதார் அட்டை நகலை பெறக்கூடாது என அறிவித்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ரேசன் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்கு பதில் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ரூ.1000-யை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
- பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது.
- அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது.
கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது. பணம் வழங்கப்படவில்லை
அப்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பல ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட வெல்லம் மோசமாக இருந்ததாக எதிர்க்கட்சியினர் அரசு மீது குறை கூறினார்கள். மற்ற பொருட்களின் எடையும் குறைவாக இருந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது.
இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரையுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பொங்கலுக்கு பொதுமக்களுக்கு பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை தெரிவித்த கருத்து முன் வைக்கப்பட்டது.
ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் இன்னும் சில ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கும் தகவலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை கொடுப்பதின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் அதை அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.
எனவே அதன் அடிப்படையில் பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு செய்து விரைவில் வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அனேகமாக இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பொங்கல் தொகுப்பு வழங்குவது என்பது முதன் முதலாக கலைஞர் ஆட்சி காலத்தில் 2008-ல் துவங்கப்பட்டது.
- கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சென்னை:
கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை பதிலாளர்கள், கூடுதல் பதிலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. 33571 நியாய விலைக் கடைகளில் அரசு மூலம் வழங்கப்படும் பொருட்கள் முறையாக மக்களிடம் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் லாபகரமாக இயங்கி கொண்டிருக்கிறது.
கே: பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது அறிவிக்கப்படும்?
ப: அதுபற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது உண்மை. அதுபற்றிய முடிவை முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். இந்த அறிவிப்பு வந்ததும் எங்களது துறை செயல் படுத்தும்.
பொங்கல் தொகுப்பு வழங்குவது என்பது முதன் முதலாக கலைஞர் ஆட்சி காலத்தில் 2008-ல் துவங்கப்பட்டது. அப்போது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
2011-க்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பொருட்கள் வழங்கப்பட்டாலும் இடையில் 1 வருடம் தர வில்லை. அதுமட்டுமல்ல இடையில் 4 ஆண்டுக்கு எதுவும் அவர்கள் வழங்கவில்லை.
இப்போது தி.மு.க. ஆட்சியில் நாங்கள் வழங்குகிறோம். இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார். விரைவில் அவர் அறிவித்ததும் அதை செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
- இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்
புதுச்சேரி:
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 மதிப்புள்ள இலவச பொங்கல் தொகுப்பை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பச்சரிசி, வெல்லம், உளுந்து, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசி பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதுபற்றி பேசிய புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் ரொக்கமாக ரூ.1000 வழங்க முடிவு செய்யப்பட்டது.
- ரொக்கப் பரிசுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பணத்திற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை முழு கரும்புடன் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையில் நடைபெறும். அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைக்க உள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
- தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பரிசு தொகுப்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் பரிசு தொகுப்புடன் அளித்து வந்த கரும்பு இம்முறை இடம்பெறவில்லை. இதனால் விவசாயிகள் உள்ளிட்டோர் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவும் தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
- அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் ரொக்கப் பணத்தை வழங்குகிறார்கள்.
சென்னை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டன.
இந்த வருடம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் 2 கோடியே 19 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்றும் இதற்காக அரசுக்கு சுமார் ரூ.2,356 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொது மக்களுக்கு வழங்குகிறார்கள்.
பொங்கல் ரொக்கப் பணம் தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நாளை (26-ந்தேதி) முதல் நடைபெறுகிறது.
ரேஷன் கடைகளில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மூலம் ரேஷன் பொருட்களை பெற முடியும்.
அது போல பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெறவும் ஸ்மார்ட் கார்டுடன் கைரேகையும் பதிவு செய்ய வேண்டும்.
ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு இந்த முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவரின் கைரேகைப் பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும்.
பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவதில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே 2-ந்தேதி முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்குகிறது.
13-ந்தேதி போகிப் பண்டிகை தொடங்குவதற்கு முன்பு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இவை வழங்கப்பட வேண்டும் என பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்கு ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வழக்கம் போல டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது.
தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் வினியோகம் செய்ய திட்டமிடப்படுகிறது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில் பெற வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டு வீடுகளுக்கு வழங்கப்படும்.
பொங்கல் பரிசு தொகை பெறும் நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு வீடாக இதனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள். அந்த நாளில் கடைகளில் நெரிசல் இல்லாமல் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. வருகிற 27, 28-ந்தேதிகளில் வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பொங்கலுக்குள் அரசு அறிவித்துள்ள ரூ.1000 ரொக்கம் குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும். கையெழுத்து போட்டு பெற இயலாது. இதில் எவ்வித தவறுக்கும் இடம் அளிக்காமல் முறையாக பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
வெளியூர் சென்று இருந்தாலோ, வீடு பூட்டி இருந்தாலோ அவர்கள் ரொக்கப் பணம் பெற அவகாசம் கொடுக்கப்படும். குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் பணம், பொருட்களை பெற முடியாது.
ரேஷன் கடை பணியாளர்கள் எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் பொங்கலுக்கான பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் சேர்த்தால், அதற்கான கரும்பை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தால் விவசாயிகள் பயன் அடைவார்கள்.
- பொது மக்களுக்கும் வெளிச்சந்தையில் கரும்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு அறிவித்திருக்கும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு போதுமானதல்ல. தமிழர்களின் தலையாய பண்பாட்டுப் பண்டிகை பொங்கல் பண்டிகை. குறிப்பாக விவசாயிகளுக்குத் தான் பொங்கல் பண்டிகை பெருமகிழ்ச்சியை தரும், ஊக்கமளிக்கும், பயன் தரும் பண்டிகையாக அமையும். தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க அறிவித்திருந்தாலும் இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அரசின் பரிசு மக்களுக்கு இனிக்கவில்லை.
தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் சேர்த்தால், அதற்கான கரும்பை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தால் விவசாயிகள் பயன் அடைவார்கள். மேலும் பொது மக்களுக்கும் வெளிச்சந்தையில் கரும்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது.
குறிப்பாக ரொக்கமாக அறிவித்திருக்கும் ஆயிரம் ரூபாயும் போதுமானதல்ல. குறைந்த பட்சம் 2,500 ரூபாயை பொங்கல் பரிசுத் தொகையாக வழங்க முன்வர வேண்டும். எனவே தமிழக அரசு, பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2,500 மற்றும் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 21 பொருட்களுடன் ரூ.2,500 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.
- தற்போது பொங்கல் பொருட்கள் குறைக்கப்பட்டதுடன், ரொக்கமும் குறைவாக அறிவித்திருப்பது ஏழை, எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2021-ல் அ.தி.மு.க. ஆட்சியின் போது அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்களுடன் ரூ.2,500 பரிசு வழங்கப்பட்டது. ஆனால் 2022-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் இல்லை.
பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து விமர்சனங்களும் அப்போது எழுந்தன. இந்த நிலையில் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பரிசில் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறவில்லை.
அறிவிக்கப்பட்ட ரொக்கப் பணமும் குறைவாக உள்ளது. ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம், விலைவாசி உயர்வால் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வரும் நிலையில் பொங்கல் பரிசாக ரூ.1000 மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 21 பொருட்களுடன் ரூ.2,500 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பொருட்கள் குறைக்கப்பட்டதுடன், ரொக்கமும் குறைவாக அறிவித்திருப்பது ஏழை, எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே தமிழக அரசு மறு பரிசீலனை செய்து, தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மனநிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த ஆட்சியில் வழங்கிய குறைந்தபட்சம் ரூ.2,500 உயர்த்தி வழங்கிட வேண்டும்.
பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாததை கண்டித்து தமிழக விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இந்த பொங்கல் தித்திக்கும் பொங்கலாக அமைய இந்த அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பொதுமக்களுக்கு சென்ற ஆண்டு 21 பொருட்களுடன் கரும்பையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.
- சில குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டினார்கள்.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் விளக்கி கூறினார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கே:- பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாததால் அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்களே? என்ன காரணத்தால் கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை?
ப:- பொதுமக்களுக்கு சென்ற ஆண்டு 21 பொருட்களுடன் கரும்பையும் முதல்-அமைச்சர் வழங்கினார். அதில் சில குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டினார்கள். பல கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பை கொடுக்கும் போது ஒரு சில இடங்களில் எங்காவது தவறு நடந்திருந்தால் அதை மிகைப்படுத்தி காட்டும் காரணங்களால் இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த முடிவு எடுத்திருக்கலாம்.
கே:- பொங்கல் பணம் ரூ.1000 மக்களுக்கு எப்படி கொடுக்க போகிறீர்கள்? டோக்கன் வழங்கப்படுமா?
ப:- அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. அதுதொடர்பாக ஆலோசனை நடத்தி முறையான அறிவிப்பு வெளியிடுவோம். எனவே மக்களை குழப்பிவிட வேண்டாம். நாளை மாலை 3 மணிக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறோம்.
கே:- தவறுகள் நடைபெறாத அளவுக்கு பொங்கல் தொகுப்பை வழங்க முடியாதா?
ப:- அதுபற்றி முதல்-அமைச்சர் சிந்தித்து கொண்டு இருக்கிறார். இதுபற்றி முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.