என் மலர்
நீங்கள் தேடியது "Poomadevi"
- சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
- பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் பூஜைகளை செய்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி சித்தர் பீட ஆலயத்தில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி மற்றும் காலை பூஜையும், 9 மணிக்கு கும்ப பூஜையும், 9.35-க்கு பூமாதேவி அம்பாளுக்கு 21 வகையான மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தேன், குங்குமம், சந்தனம் மற்றும் 21 குடங்கள் தீர்த்தம் பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் பூஜைகளை செய்தார்.இதில் சுப்பாராஜ், மாரிய ப்பன், ஆறுமுகம், கோபால கிருஷ்ணன், மாரீஸ்வரன், கதிர்காம சுப்பிரமணியன், திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்த னர். முடிவில் அன்னபிரசாதம் வழங்க ப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பூமாதேவி ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.