search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poonamallee bus stand"

    பூந்தமல்லி பஸ்நிலையத்தில் நீண்ட நேரமாக தவித்த 2 குழந்தைகளை போலீசார் மீட்டு செனாய் நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    பூந்தமல்லி:

    சென்னை பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் 2 ஆண் குழந்தைகள் தனியாக நின்று தவித்துக் கொண்டிருந்தன.

    இதுபற்றி பஸ்நிலையத்தில் நின்றவர்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    பூந்தமல்லி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குழந்தைகளிடம் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை கேட்டனர். அவர்கள் 2 மற்றும் 3 வயதுடைய குழந்தைகள் என்பதால் அவர்களால் விவரம் சொல்லத் தெரியவில்லை. தொடர்ந்து அழுது கொண்டே இருந்தனர்.

    குழந்தைகளை தேடி நீண்ட நேரமாகியும் யாரும் வரவில்லை. இதையடுத்து 2 குழந்தைகளையும் 108 ஆம்புலன்சில் ஏற்றி பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் அவர்களை பரிசோதித்தனர். பின்னர் குழந்தைகள் இருவரும் செனாய் நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    அவர்களை விட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×