என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "popcorn"

    • இப்படி செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.
    • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.

    சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இப்படி செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்

    பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    பிரட் - 4

    முட்டை - 1

    பால் - 1 டேபிள் ஸ்பூன்

    மைதா - 1/2 கப்

    செய்முறை:

    * முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய சிக்கனை ஒரு பெளலில் போட்டு, அத்துடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


    * பின்பு பிரட் துண்டுகளை நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் பிரட் தூளுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    * பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    * பின் ஒரு தட்டில் மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும்.

    * இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.

    * பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி பின்னர் அதனை எண்ணெயில் போட வேண்டும்.

    * இப்படி அனைத்து சிக்கனையும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் ரெடி.

    • பாப்கார்ன் சிறந்த நொறுக்குத்தீனியாக விளங்குகிறது.
    • உடலில் உள்ள ப்ரீரேடிக்கல்சை அழிக்க உதவுகிறது.

    பாப்கார்ன் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். சோளத்தை அதிக வெப்பத்திற்கு உட்படுத்தும் போது, அதில் உள்ள தண்ணீர் நீராவியாக விரிவடைந்து, வெடித்து பாப்கார்னாக மாறுகிறது.

    இதில் குறைந்த கலோரிகள், குறைந்த கொழுப்பு. அதிக நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த நொறுக்குத்தீனியாக விளங்குகிறது. ஒரு கப் பாப்கார்னில் 31 கலோரிகள், 1 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம். 6 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இது 55 என்ற மிதமான கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளது.

    மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி3, 6, ஈ மற்றும் இரும்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

    பாப்கார்னில் உள்ள பீட்டா கரோட்டின், லூட்டின், ஜியோசாந்தின் போன்றவை கண்களுக்கு நன்மை தரக்கூடியவை. இதில் உள்ள அதிகமான பாலிபெனால்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகளை பெற்றுள் ளது. இது உடலில் உள்ள ப்ரீரேடிக்கல்சை அழிக்க உதவுகிறது.

    சர்க்கரை நோயாளிகள் பாப்கார்னை வெண்ணெய், உப்பு சேர்க்காமல் வெறுமனே சாப்பிடுவது நல்லது. மசாலா, எண்ணெய், கேராமல் போன்றவற்றை பாப்கார்னில் சேர்க்கும்போது இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகி கெடுதலை ஏற்படுத்தும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன.
    • அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்

     இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர் ஒருவரின் ரெட்டிட் சமூக வலைதள பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்தியாவில் தொழில்முனைவோருக்கு இருக்கும் சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கான தடைகளை மேற்கோள் காட்டி அதிக சம்பளம் வாங்கும் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரை இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

    தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத இந்த நிறுவனர் u/anonymous_batm_an என்ற ப்ரொபைலில் இந்த பதிவை இட்டுள்ளார். அதில், தான் புகழ்பெற்ற இந்திய பொறியியல் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகவும், பின்னர் அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

     

    2018 இல் இந்தியாவுக்குத் திரும்பி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சராசரியாக ரூ. 15 லட்சம் சம்பளத்தில் கிட்டத்தட்ட 30 பேர் பணிபுரியும் அவரது ஸ்டார்ட்அப் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

    ஆனால் நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன. எதையும் செய்ய அதிகாரம், அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களுடன் தொடர்பு தேவை என்று தனது தற்போதைய பதிவில் ஆதங்கப்பட்டுள்ளார்.

    அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

    இந்தியாவின் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வை விமர்சித்துள்ள அவர், மக்கள் சமூக நிலையை செல்வம் மற்றும் தோற்றத்துடன் இணைத்து அதன் அடிப்படையிலேயே ஒருவருக்கு மதிப்பளிக்கும் போக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் பயங்கரமான பொருளாதாரச் சரிவு மற்றும் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்று கணித்துள்ள இந்த நிறுவனர் இந்தியாவுக்கு மாற்றாக தொழில்முனைவோர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல பரிந்துரைத்துள்ளார்.

    சுருக்கமாக சொன்னால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் எண்ணம் இல்லாததால், ஆட்சியாளர்கள் உங்கள் பாப்கார்னுக்கு வரி விதிக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்! என்று புலம்பித் தீர்த்துள்ளார்.

     

    கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கான வரியை 5 முதல்18 சதவீதம் வரை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 55-வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தானில் வைத்து நடைபெற்றது.
    • குடிநீருக்கு ஜிஎஸ்டி - நீங்கள் பருகினால் 5%, நீங்கள் விழுங்கினால் 12%, நீங்கள் சிந்தினால் 18% என்று ஒருவர் கேலி செய்துள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 55-வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தானில் வைத்து நடைபெற்றது.

    இதில் உப்பு மற்றும் மசாலா கலந்த பிராண்டட் அல்லாத பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி, முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் பிராண்டட் பாப்கார்னுக்கு 12% ஜிஎஸ்டி. சர்க்கரை கலந்த கேரமல் பாப்கார்னுக்கு 18%.ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் ஒன்றையும் கொடுத்தார்.

    அதாவது, பாப்கார்னை [கேரமல் பாப்கார்ன்] சர்க்கரையுடன் கலக்கும்போது, அதன் மூலக்கூறு தன்மை சர்க்கரை மிட்டாயாக மாறுகிறது. எனவே சர்க்கரை மிட்டாய்க்கு ஒப்பாக பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தினார்.

    இந்த விளக்கம் நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி கிண்டல் கேலிக்கு உள்ளாகி வருகிறது. நிர்மலா சீதாராமன் விளக்கம் குறித்த இணையவாசிகளின் நகைச்சுவையான பதவிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு இணையவாசி, அடுத்து என்ன? குடிநீருக்கு ஜிஎஸ்டி - நீங்கள் பருகினால் 5%, நீங்கள் விழுங்கினால் 12%, நீங்கள் சிந்தினால் 18% என்று கேலி செய்துள்ளார்.

    மற்றொருவர், ஒரு தேசம், ஒரே தேர்தல் என்று வாதிடுபவர்கள் பாப்கார்னுக்கு ஒரே வரி விகிதத்தை அமல்படுத்த முடியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மற்றொரு பயனர் பாப்கார்ன் வரிவிதிப்பை பயன்படுத்திய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டியுடன் ஒப்பிட்டு, 18% ஜிஎஸ்டியுடன் கூடிய பாப்கார்ன் ஒரு ஆடம்பர உணவுப்பொருள் என்றால் சரிதான், ஆனால் குறைந்த பணம் கொண்டவர்கள் வாங்கும் பழைய கார்களுக்கு ஏன் அதே விகிதம்? என்று கேட்டுள்ளார். பழைய மற்றும் பயன்படுத்திய வாகனங்கள் மீதான வரியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளதை அந்த பயனர் கிண்டல் செய்துள்ளார்.

    மற்றொருவர் நிலுவையில் உள்ள சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் ஜிஎஸ்டியை குறைப்பதற்கு கவுன்சில் முன்னுரிமை அளித்து அகற்றுவதை விட அல்லது குறைப்பதை விட பாப்கார்ன் மீதான ஜிஎஸ்டி அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.    

    ×