என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Porsche"

    • நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம் உடன் வருகிறது.
    • கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான போர்ஷே தனது ஐந்தாவது தலைமுறை மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

     இந்த கிராஸ் (Cross) இ-பைக் சைக்கிள் மொத்தம் நான்கு வகைகளில் வருகிறது.

    ஆரம்ப நிலை மாடலான, கிராஸ் ( £4,994), கிராஸ் பெர்பார்மன்ஸ் (£7,471), கிராஸ் பெர்பார்மன்ஸ் EXC மற்றும் பிரீமியம் மாடலான ஸ்போர்ட் ( £8309) விலையுடன் முறையே அறிமுகமாகியுள்ளன.

    4 கிராஸ் மாடல்களும் மிகவும் ஒத்தவையாகவே உள்ளன. அனைத்தும் ஒரே மாதிரியான ஷிமானோ (SHIMANO) EP801 மோட்டாரைக் கொண்டுள்ளன. 62lb அடி முறுக்குவிசை, நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம், 12-ஸ்பீட் கியர்ஷிஃப்ட், சைக்கிளின் முன்னாள் மற்றும் பின்னால் சூப்பர்-ப்ரைட் விளக்குகள் மற்றும் இலகுரக கார்பன் வீல் செட்கள் இடம்பெற்றுள்ளன.

    கிராஸ் அடிப்படை மாடலில் டிரெயில் டிஸ்க் பிரேக்குகள், ஒரு சிறிய 504Wh பேட்டரி மற்றும் ஒரு டெலஸ்கோபிக் சீட் போஸ்ட் ஆகியவை உள்ளன. கிராஸ் பெர்பார்மென்ஸ் மாடலில் நான்கு-பிஸ்டன் மகுரா டிஸ்க் பிரேக்குகள், கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரீமியம் மாடலான ஸ்போர்ட் வேரியண்டில் கிராஸ் பெர்பார்மென்ஸ் அம்சங்களுடன் சேர்ந்து, 21.6 கிலோகிராமே எடை கொண்ட அல்ட்ரா-லைட் கார்பன் பிரேம் இடம்பெற்றுள்ளது.

    இந்த பிரீமியம் ஸ்போர்ட் வேரியண்டில் உள்ள அதிக முறுக்கு-எதிர்ப்பு கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் 120 மில்லிமீட்டர் டிராவலுடன் கூடிய சூப்பர் ஃபேன்ஸி சஸ்பென்ஷன் ஃபோர்க் உள்ளது. பயணிக்கும்போது கை மற்றும் கால் வலியை குறைக்கும் வடிவமைப்புடன் ஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. 

    • போர்ஷே நிறுவனம் இந்திய சதையில் மூன்று புது ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • மூன்று ஸ்போர்ட்ஸ் கார்களில் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 கோடியே 80 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷே இந்திய சந்தையில் 911 கரெரா T, 718 கேமென் ஸ்டைல் எடிஷன் மற்றும் 718 பாக்ஸ்டர் ஸ்டைல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் போர்ஷே 718 கேமென் மற்றும் பாக்ஸ்டர் ரக மாட்களின் விலை முறையே ரூ. 1 கோடியே 44 லட்சம் மற்றும் ரூ. 1 கோடியே 48 லட்சம், ஆகும். போர்ஷே கரெரா 911 T மாடலின் விலை ரூ. 1 கோடியே 80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    போர்ஷே 718 கேமென் மற்றும் 718 பாக்ஸ்டர் ஸ்டைல் எடிஷன் மாடல்கள் அவற்றின் பேஸ் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிதாக ரூபி ஸ்டார் நியோ பெயிண்ட் ஸ்கீம் மற்றும் ஹைலைட்கள் பிளாக் அல்லது வைட் நிறத்தில் செய்யப்பட்டுள்ளன. இரு மாடல்களிலும் 2.0 லிட்டர், ஃபிளாட்-4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 295 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு PDK டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் PDK மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும். மேனுவல் கியர்பாக்ஸ் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டும். இந்த கார் மணிக்கு 275 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    போர்ஷே கரெரா 911 T மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ஃபிளாட்-6 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 380 ஹெச்பி பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு 911 கரெரா மாடலை விட 35 கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் உள்ள என்ஜினுடன் 7 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்பீடு PDK ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இதன் மேனுவல் கியர்பாக்ஸ் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளிலும், PDK மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.2 நொடிகளிலும் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 291 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    • போர்ஷே நிறுவனத்தின் புதிய கயென் மாடல் ஏராளமான டெக் அம்சங்களை கொண்டிருக்கிறது.
    • புதிய போர்ஷே கயென் மாடலின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 கோடியே 42 லட்சம் ஆகும்.

    போர்ஷே இந்தியா நிறுவனம் தனது கயென் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி 2024 போர்ஷே கயென் மாடல் விலை ரூ. 1 கோடியே 36 லட்சம் என்று துவங்குகிறது. புதிய போர்ஷே கயென் கூப் மாடல் விலை ரூ. 1 கோடியே 42 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இரு கார்களில் எந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய போர்ஷே கயென் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் இந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்குகிறது. 2024 போர்ஷே கயென் மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

     

    இதன் பொனெட் டிசைன் மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டெயில்கேட் முழுக்க லைட் பார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்டு சிறப்பான ஏரோடைனமிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 20 இன்ச் மற்றும் 22 இன்ச் என இருவித அளவுகளில் அலாய் வீல் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    புதிய போர்ஷே கயென் மாடலில் 3.0 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 353 பிஎஸ் பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் கூப் மாடலிலும் இதே பவர்டிரெயின் வழங்கப்படுகிறது. எனினும், இதன் டர்போ வேரியண்டில் 4.0 லிட்டர் வி8 யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 659 பிஎஸ் பவர் வெளிப்படுத்துகிறது. 

    • போர்ஷே மற்றும் ஆடி நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் வாகன ஆர்கிடெக்ச்சரை உருவாக்கி இருக்கின்றன.
    • போர்ஷே உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் 718 கிமீ ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    போர்ஷே நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மக்கன் EV மாடல் எப்படி காட்சியளிக்கும் என்பதை தெரிவிக்கும் வரைபடங்களை வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் தான், ஆஸ்த்ரிய பிராஷர் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இணைந்து எலெக்ட்ரிக் படகw உற்பத்தி செய்வதாக போர்ஷே அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தான் மக்கன் எலெக்ட்ரிக் வரைபடங்கள் வெளியாகி இருக்கிறது.

    புதிய மக்கன் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் பவர்டிரெயின் தான் போர்ஷே நிறுவனத்தின் அதிவேக படகிலும் வழங்கப்பட இருக்கிறது. டீசர்களின் படி புதிய மக்கன் மாடல் தோற்றத்தில் டக்கன் போன்றே காட்சியளிக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் கூப் போன்ற ரூஃப் மற்றும் ஃபுலோயிங் பாடிலைன்கள் உள்ளது.

     

    பின்புறம் லைட்பார் டிசைன் உள்ளது. இந்த காரின் டெஸ்டிங் சர்வதேச சந்தையில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களின் படி போர்ஷே மக்கன் எலெக்ட்ரிக் மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், பம்ப்பரில் இரண்டாவது லைட் கிளஸ்டர் உள்ளது.

    விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆடி Q6 இ டிரான் மாடலை தழுவி உருவாகும் புதிய மக்கன் மாடல் முற்றிலும் புதிய PPE EV ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆர்கிடெக்ச்சர் ஆடி மற்றும் போர்ஷே இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இதே ஆர்கிடெக்ச்சர் எதிர்காலத்தில் போக்ஸ்வேகன் அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    புதிய மக்கன் எலெக்ட்ரிக் மாடல் தற்போது விற்பனைக்கு கிடைக்கும் இன்டர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட மாடல்களுடன் சேர்த்தே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் தவிர போர்ஷே உருவாக்கி வரும் புதிய ஆல்-எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் முழு சார்ஜ் செய்தால் 718 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கப்படும் என்று தெரிகிறது. 

    Photo Courtesy - Motor1

    • மக்கான் டர்போ மாடலுக்கான முன்பதிவு துவங்கியது.
    • எலெக்ட்ரிக் வடிவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

    போர்ஷே நிறுவனம் தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் - மக்கான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போர்ஷே மக்கான் EV இரண்டு 4-வீல் டிரைவ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஒன்று 408 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் மக்கான் 4, மற்றொன்று 639 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் மக்கான் டர்போ ஆகும்.

    புதிய போர்ஷே மக்கான் டர்போ மாடலுக்கான முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கியுள்ளது. இதன் விலை ரூ. 1 கோடியே 65 லட்சம் ஆகும். வினியோகம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என்று தெரிகிறது.


     

    புதிய மக்கான் 4 மாடலின் விலை மற்றும் இதர விவரங்களை போர்ஷே இதுவரை அறிவிக்கவில்லை. அடுத்த ஆண்டு இறுதி வரை மக்கான் எலெக்ட்ரிக் மாடல் அதன் பெட்ரோல் வெர்ஷனுடன் விற்பனை செய்யப்படும். அதன்பிறகு இந்த சீரிஸ் முழுமையாக எலெக்ட்ரிக் வடிவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

    எலெக்ட்ரிக் திறன் கொண்ட மக்கான் மாடல் தற்போதைய பெட்ரோல் வெர்ஷனுடன் ஒப்பிடும் போது 103mm நீளமாகவும், 15mm அகலமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆடி Q6 இ-டிரான் மாடலுடன் உருவாக்கப்பட்டது. இரு கார்களும் பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டுள்ளன.


     

    வெளிப்புறத்தில் புதிய மக்கான் எலெக்ட்ரிக் மாடலின் ஸ்டைலிங் ஒரிஜினல் மக்கான் மாடலை தழுவியும், டிசைனிங் அம்சங்கள் டேகேன் மாடலை தழுவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் ஹெட்லைட்கள் செவ்வக வடிவிலும், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. லைட் பார் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய போர்ஷே மக்கான் எலெக்ட்ரிக் மாடல்களில் டூயல் பெர்மனன்ட் சின்க்ரோனஸ் மோட்டார்களும், ஒவ்வொரு ஆக்சில்களிலும் சிங்கில் ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மக்கான் 4 மாடலில் 408 ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

     


    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 220 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மக்கான் டர்போ மாடலில் இவை 639 ஹெச்.பி. பவர், 1130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 260 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    மக்கான் எலெக்ட்ரிக் கார்களில் உள்ள 95 கிலோவாட் ஹவர் பேட்டரியை 800 வோல்ட் டி.சி. சிஸ்டம் மூலம் 270 கிலோவாட் மூலம் சார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 21 நிமிடங்களே ஆகும். இத்துன் பிரேக்கிங் மற்றும் காரின் வேகத்தை குறைக்கும் போது 240 கிலோவாட் வரையிலான திறன் பெற முடியும்.

    போர்ஷே மக்கான் 4 மாடல் முழு சார்ஜ் செய்தால் 613 கிலோமீட்டர்களும், மக்கான் டர்போ மாடல் 591 கிலோமீட்டர்களும் செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளன.

    • சென்னையில் இருந்து பொழுது "ஃபியட்" நிறுவனத்தின் "பேலியோ" காரைத் தான் முதலில் ஓட்டி பழகியதாக கூறினார்.
    • நாக சைதன்யா போர்ஸ்ர் சி 911 ஜிடி3 ஆர்எர் ஸ் என்ற காரை வாங்கியுள்ளார்.

    பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் தான் நடிகர் நாக சைதன்யா, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், தனது இளமை பருவத்தை பெரிதளவும் சென்னையில் கழித்தவர் அவர். நடிகர் நாக சைதன்யா 2009ம் ஆண்டு வெளியான ஜோஷ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

    சமீபத்தில் இவர் நடித்த படம் 'கஸ்டடி'. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார்.


    பிரபல தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கார்கள் மீது தனக்குள்ள ஈடுபாடு குறித்தும் சென்னையில் தான் தனக்கு கார்கள் மீதான ஒரு ஈர்ப்பு துவங்கியது என்றும் கூறி மனம் திறந்து உள்ளார். கார்கள் தான் தனக்கு முதல் காதலி என்று கூறிய நாக சைதன்யா சென்னையில் இருந்து பொழுது "ஃபியட்" நிறுவனத்தின் "பேலியோ" காரைத் தான் முதலில் ஓட்டி பழகியதாக கூறினார்.

    அதன் பிறகு தனது 19 வது வயதில் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்த அவர் பல சூப்பர் பைக்குகளை ஓட்டி பழகிய பின், "மிட்சுபிஷி" நிறுவனத்தின் "லான்சர்" என்ற காரைத் தான் வாங்கி ஒட்டியதாக கூறியிருக்கிறார். இன்றளவும் இந்த கார்களுக்கு மவுசு உள்ளது குறிப்பிடத்தக்கது.


    நாக சைதன்யாவிடம் பெராரி முதல் பிஎம்டபிள்யூ வரையிலான ஈர்க்கக்கூடிய சொகுசு கார்களின் சேகரிப்பு உள்ளது. தற்போது அந்த சேகரிப்பில் புதிய கார் ஒன்றை சேர்த்துள்ளார். தற்போது நாக சைதன்யா போர்ஸ்ர் சி 911 ஜிடி3 ஆர்எர் ஸ் என்ற காரை வாங்கியுள்ளார்.

    கார்ட்ரேட் படி, இந்தியாவில் காரின் முந்தைய ஷோரூம் விலை ₹3.51 கோடி. இது மே 17 அன்று பதிவு செய்யப்பட்டது மற்றும் ஹைதராபாத்தில் முதல் போர்ஷே 911 GT3RS என்று கூறப்படுகிறது. சென்னை போர்ஸ் சென்டர் சைதன்யா காருடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

    இதனை நாக சைதன்யா ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.



    • குடிபோதையில் 150 கி.மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தினான் 17 வயது சிறுவன்.
    • 15 மணி நேரத்தில் ஜாமின் வழங்கப்பட்டதுடன், 300 வார்த்தைகள் கட்டுரை எழுத உத்தரவிடப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை (Porsche car) அதிவேகமாக (150 கி.மீட்டர் வேகத்தில்) ஓட்டி வந்தபோது, அந்த கார் இரு சக்கர வாகனத்தில் மோதி இரணடு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குடிபோதையில் கார் ஓட்டிய அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 15 மணி நேரத்தில் சிறார் நீதி வாரியம் அவருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், சாலை விபத்து குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத உத்தரவிட்டது.

    இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமினா? என கடும் விமர்சனம் எழுந்தது. இதனால் சிறார் நீதி வாரியம் அந்த சிறுவனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்துள்ளார். மேலும், சிறார் காண்காணிப்பு மையத்தில் ஜூன் 5-ந்தேதி வரை அடைக்க உத்தரவிட்டுள்ளது.

    வாரியத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யுமாறும், குற்றம் கொடூரமானதால் குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை வயது வந்தவராகக் கருதுவதற்கும் அனுமதி கோரி போலீசார் மீண்டும் வாரியத்தை அணுகினர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் 25-வது வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பிமான்வார் பிறப்பித்துள்ளார்.

    அந்த சிறுவன் ஓட்டி வந்த சொகுசு காரான 'Porsche Taycan'-க்கான நிரந்தர வாகனப் பதிவு கடந்த மார்ச் மாதம் முதல் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கான பதிவுக் கட்டணம் ரூ.1,758 உரிமையாளர் தரப்பில் செலுத்தப்படவில்லை என்றும் மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, 150 கிலோ மீட்டர் வேகம், தற்காலிக வாகனப் பதிவு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த சொகுசு காரை அடுத்த 12 மாதங்களுக்கு எந்தவொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியாது.

    விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

    • போர்ஷே 911 மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    • இந்த மாடலில் 3.0 லிட்டர் டுவின் டர்போ பாக்சர் எஞ்சின் உள்ளது.

    போர்ஷே நிறுவனத்தின் புதிய 911 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த சூப்பர் கார் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இந்திய சந்தையில் போர்ஷே 911 பேஸ்லிப்ட் மாடல் கரெரா மற்றும் கரெரா 4 GTS என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    2024 போர்ஷே 911 கரெரா மாடலின் விலை ரூ. 1 கோடியே 99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூப்பர் கார் மாடலில் 3.0 லிட்டர் டுவின் டர்போ பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 394 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு PDK ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     


    இந்த வேரியண்டில் போர்ஷே ஆக்டிவ் சஸ்பென்ஷன் மேனேஜ்மென்ட், 4 விதங்களில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்போர்ட் சீட்கள், ஹீட்டிங் வசதி, 6 பிஸ்டன்கள் கொண்ட அலுமினியம் மோனோ-பிலாக் பிரேக் கேலிப்பர்கள், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ரிவர்ஸ் கேமரா, 2-ஜோன் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    2024 போர்ஷே 911 கரெரா 4 GTS வேரியண்டின் விலை ரூ. 2 கோடியே 75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் புதிய T-ஹைப்ரிட் பவர்டிரெயிடன் அதாவது 3.6 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் டர்போசார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 541 ஹெச்.பி. பவர், 610 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு PDK ஆட்டோ டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்த காரில் ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இதில் அனலாக், டிஜிட்டல் ஸ்டாப் வாட்ச், ஸ்போர்ட் க்ரோனோ கிளாக், பிளாக் ஷிப்ட் பேடில்கள், ஸ்போர்ட் பிளஸ் மோட், PSM ஸ்போர்ட் மோட், போர்ஷே டிராக் பிரெசிஷன் ஆப், டயர் டெம்ப்பரேச்சர் டிஸ்ப்ளே, ஸ்போர்ட் ரெஸ்பான்ஸ் பட்டன் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    • அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார்.
    • நடிகர் அஜித் புது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    நடிப்பதை தவிர்த்து நடிகர் அஜித் கார் ரேஸில் மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். பைக்கில் பல ஊர்கள் சென்று தன்னுடைய நேரத்தை செலவிட அதிகம் விரும்பவர்.

    இந்நிலையில் நடிகர் அஜித் புது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். போர்ச் GT3 RS ரக காரை அஜித் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 4 கோடி ரூபாய் ஆகும். இதற்கு முன் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரி காரை வாங்கினார். இந்த காரின் புகைப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உலகம் முழுக்க மொத்தத்தில் 1974 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
    • இந்த மாடலில் 3.7 லிட்டர் டுவின் டர்போ ஃபிலாட் 6 பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

    போர்ஷே நிறுவனத்தின் முற்றிலும் புதிய 911 டர்போ 50 ஆண்டுகளை கொண்டாடும் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலின் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இந்திய சந்தையில் புதிய போர்ஷே 911 (50 Years) மாடலின் விலை ரூ. 4.05 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடல் போர்ஷேவின் முதன்முதல் 911 டர்போ மாடல் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் உலகம் முழுக்க மொத்தத்தில் 1974 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

     


    இந்திய சந்தையில் போர்ஷே 911 டர்போ எஸ் மாடலின் விலையை விட புதிய மாடல் விலை ரூ. 7 லட்சம் வரை அதிகம் ஆகும். இதே போன்று 911 கரெரா மாடலை விட ரூ. 2 கோடியும், கரெரா 4 GTS மாடலை விட ரூ. 1.26 கோடியும் அதிகம் ஆகும். முந்தய 911 டர்போ எஸ் மாடலை போன்றே புதிய 911 டர்போ (போ 911 ) மாடலிலும் 3.7 லிட்டர் டுவின் டர்போ ஃபிலாட் 6 பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

    இந்த யூனிட் 650 ஹெச்பி பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.7 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 330 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    முன்னணி ஆடம்பர கார் உற்பத்தியாளரான போர்ஷே இந்தியாவில் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்க முடிவு செய்து உள்ளது.


    ஆடம்பர கார் உற்பத்தியாளர்களில் முன்னணி நிறுவனம் போர்ஷே. இந்தியாவில் போர்ஷே நிறுவனம் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்குகிறது. போர்ஷே நிறுவனத்தின் முதல் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் மையம் ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் திறக்கப்பட இருக்கிறது. இந்த விற்பனை மையங்கள் ‘Porsche Approved' பெயரின் கீழ் இயங்க இருக்கின்றன.

    போக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக போர்ஷே அப்ரூவ்டு செண்டர், போக்வ்கேன் தாஸ் வெல்ட் ஆட்டோ மற்றும் ஆடி அப்ரூவ்டு பிளஸ் திட்டங்களின் வரிசையில் இணைகிறது. இதன் மூலம் சான்றளிக்கப்பட்ட பயன்படுத்திய கார்களை விற்பனை, வாங்குவது அல்லது எக்சேன்ஜ் செய்ய ஒற்றை தளமாக இவை மாறும். 

     போர்ஷே கார்

    போர்ஷே அப்ரூவ்டு மையங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது, விற்பனை செய்வது மற்றும் எக்சேன்ஜ் செய்வது போன்ற பணிகள் நடைபெறும். இதன் மூலம் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் வழங்குவதோடு, ஒரிஜினல் அக்சஸரீ, இன்சூரன்ஸ் மற்றும் நிதியுதவி உள்ளிட்டவைகளை வழங்கவும் போர்ஷே முடிவு செய்துள்ளது.

    போர்ஷே கார்களை புதிய முறையில் அனுபவிக்க வழி வகுக்கும் படி இந்த விற்பனை மையங்கள் செயல்படும் என போர்ஷே நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்த மற்ற தகவல்கள் விற்பனை மையம் துவங்கப்படும் போது அறிவிக்கப்படும் என போர்ஷே தெரிவித்துள்ளது.  
    • போர்ஷே நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் 7 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கிறது.

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷே புதிய 911 கரெரா டி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போர்ஷே 911 கரெரா டி மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ஃபிளாட் சிக்ஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 380 ஹெச்பி பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியர் வீல் டிரைவ் கொண்ட போர்ஷே 911 கரெரா டி மாடலில் போர்ஷேவின் டார்க் வெக்டாரிங் சிஸ்டம் மற்றும் மெக்கானிக்கல் லாக்கிங் ரியர் டிப்ரென்ஷியல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் காரின் கார்னெரிங் திறன் சிறப்பானதாக இருக்கும். புதிய கரெரா டி மாடல் முந்தைய கரெரா ஸ்டாண்டு எடிஷனை விட 35 கிலோ வரை எடை குறைவு ஆகும். இத்துடன் கரெரா டி மாடலுக்கென 20 மற்றும் 21 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய போர்ஷே கரெரா டி மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 291 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய கரெரா டி மாடலில் போர்ஷேவின் ஸ்போர்ட்ஸ் எக்சாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர இந்த காருடன் ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இண்டீரியரை பொருத்தவரை புதிய கரெரா டி மாடலில் ஜிடி ஸ்போர்ட்ஸ் ஸ்டீரிங் வீல், ஆப்ஷனல் காண்டிராஸ்ட் நிற சீட் பெல்ட்கள், ஸ்டிட்ச், ஹெட்ரெஸ்ட் லோகோ மற்றும் ஃபுளோர் மேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இருக்கைகளை எலெக்ட்ரிக் முறையில் 18 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய போர்ஷே கரெரா டி மாடல்- பிளாக், வைட், கார்ட்ஸ் ரெட் மற்றும் ரேசிங் எல்லோ என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

    இத்துடன் டீப் பிளாக், ஜெண்டியன் புளூ, ஐஸ் கிரே மற்றும் ஜிடி சில்வர் என நான்கு வித மெட்டாலிக் பெயிண்ட் பினிஷ்களில் கிடைக்கிறது. மேலும் சால்க், ரூபி ஸ்டார் நியோ, கார்மைன் ரெட், ஷார்க் புளூ மற்றும் பைத்தான் கிரீன் போன்ற சிறப்பு நிறங்களிலும் கிடைக்கிறது.

    ×