என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "port"

    • கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    • நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஷ்கர் மாநிலம் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் .

    கடலூர்:

    தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையோரம் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு சுமார் 20 கி.மீ. தூரததில் உள்ளது. இந்த புயல் சின்னம் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வடக்கு சத்தீஷ்கர் மாநிலம் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 

    இலங்கையில் துறைமுகங்களை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இலங்கை மற்றும் சீனா இடையே துறைமுகத் திட்ட ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தானது. #SriLankaPort

    கொழும்பு:

    இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது சீனாவுடன் நட்புறவு கொண்டிருந்தார்.

    துறைமுகங்களை சீன நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தார். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

    எனவே இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அங்கு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்து மைத்ரியபால சிறிசேனா வெற்றி பெற்றார். அதையடுத்து அங்கு சீனாவின் ஆதிக்கம் தடுக்கப்பட்டது. அதிபர் சிறிசேனாவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் இந்தியாவுடன் நட்புறவாக இருந்தனர்.

    தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து இலங்கையில் மீண்டும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்க தொடங்கி விட்டது.

    தற்போது துறைமுகங்களை மேம்படுத்தும் திட்ட பணிகள் மீண்டும் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான 2 ஒப்பந்தங்கள் கடந்த வாரம் கையெழுத்தானது.

    இலங்கை அரசுக்கு சொந்தமான ஜெயா கண்டெய்னர் டெர்மினல் நிறுவனம் சீன துறைமுக என்ஜினீயரிங் நிறுவனத்துடன் இணைந்து ரூ.236 கோடி (32 மில்லியன் டாலர்) காண்டிராக்ட் கையெழுத்தாகியுள்ளது.

    சீனாவின் ஷாங்காய் ஷேன்குவா கனரக தொழிற்சாலை நிறுவனத்திடம் இருந்து ரூ.190 கோடிக்கு (25.7 மில்லியன் டாலர்) மதிப்பில் 3 கிரேன் எந்தி ரங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை துறைமுக கழகம் வெளியிட்டுள்ளது. #SriLankaPort

    வடகிழக்கு மாநிலங்களுக்கு எளிதாக சரக்குகளை கொண்டு செல்வதற்காக வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங், மோங்லா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #Bangladesh #India
    டாக்கா:

    நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள 7 மாநிலங்களை இணைக்க ஒரே ஒரு தரை வழி மட்டுமே உள்ளது. இதனால், அங்குள்ள திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.

    இந்த நிலையில், வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங், மோங்லா துறைமுகங்களை வணிக ரீதியாக பயன்படுத்த அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம், இந்திய துறைமுகங்களில் இருந்து மேற்கண்ட இரண்டு துறைமுகங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சாலைகள், நீர்வழி மூலம் எளிதாக இந்திய பகுதிக்கு எடுத்துச் செல்லப்படும்.

    இந்த ஒப்பந்தத்தின் வரைவுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுக்கும் இந்த துறைமுகம் மூலம் சரக்குகள் அனுப்பலாம் எனவும் வரைவில் கூறப்பட்டுள்ளது. 
    ×