என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Portugal"

    • அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
    • எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக.. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம்.

    ஜெர்மனியில் 2024 ஆம் ஆண்டுகான யூரோ கால்பந்து கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கால்பந்துலகின் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகள் அணி நேற்று முன் தினம் பிரான்ஸுடன் காலிறுதியில் மோதியது. இந்த போட்டியில் 120 நிமிடங்கள் வரை யாரும் கோல் அடிக்காததால் பெனால்டி மூலம் வெற்றியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

    பெனால்டியில் ரொனால்டோவின் 1 கோலையும் சேர்த்து மொத்தம் 3 கோல்களை மட்டுமே போர்ச்சுகல் அடித்த நிலையில் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மைதானத்தில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்ட ரொனால்டோ தோல்வியால் அழுத்த பெபேவை தேற்றினார். முன்னதாக காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் சுற்றில் ஸ்லோவேனியாவுடன் போர்ச்சுகல் மோதும் போட்டியில் கோல் ஒன்றை தவறவிட்டதற்காக ரொனால்டோ கதறி அழுத வீடியோ அனைவரையும் கண்கலங்க செய்தது.

    இந்த வருட தொடருடன் யூரோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து விலகுவதாக ரொனால்டோ அறிவித்திருந்த நிலையில் அணியின் தோல்வியுடன் ரொனால்டோ வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தோல்வி குறித்து ரொனால்டோ தற்போது மனம் திறந்துளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'போர்ச்சுகலின் பெருமையை வருங்காலங்களில் உயர்த்தும் பணி தொடரும். [இந்த தொடரை பொறுத்தவரை] நாங்கள் அதிகமாக எதிர்பார்த்தோம், நாங்கள் இன்னும் அதிகமானவைக்கு தகுதியுடவர்கள்.

    எங்களுக்காக , நம் ஒவ்வொருவருக்காக, போர்ச்சுகளுக்காக. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அனைத்துக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். நாங்கள் இதுவரை செய்த சாதனைகள் அனைத்துக்கும் நீங்கள் அளித்த ஆதரவு தான் காரணம் மைதானத்துக்கும் உள்ளேயும், வெளியேயும் இந்த பெருமை தொடரும். ஒன்றாக இணைந்து தொடர்ந்து அதைக் கட்டி  எழுப்புவோம்' என்று தெரிவித்துள்ளார். 

    • அதிக அளவில் காபி குடித்தால் நமது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.
    • தினமும் காபி குடிப்பவர்களுக்கு சிறப்பான இருதய, மனநலன் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் இருக்கும்.

    காலையில் எழுந்தவுடன் சூடா... ஒரு காபியை குடித்தால்தான் அன்றைய பொழுதே சுறுசுறுப்பாக இருக்கும் என்பர் பலர். அந்த அளவுக்கு காபி குடிக்கும் பழக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையுமே ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

    இந்நிலையில், அதிக அளவில் காபி குடித்தால் நமது ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.

    போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோயிம்ப்ரா பல்கலைக்கழகத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    தினமும் மூன்று கப் காபி குடிப்பவர்களின் ஆயுட்காலம் 1.84 ஆண்டுகள் அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    தினமும் காபி குடிப்பவர்களுக்கு சிறப்பான தசை, இருதய, மனநலன் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    மேலும், அதிக அளவில் காபி குடிப்பவர்களுக்கு, வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான இருதய நோய்கள், பக்கவாதம், சில புற்றுநோய்கள், நீரிழிவு நோய், மறதி நோய் (டிமென்ஷியா) ,மனச்சோர்வு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • முறையான மருத்துவ சேவை வழங்காமல் அலட்சியமாக இருந்ததே கர்ப்பிணி மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு.
    • புதிய மந்திரி நியமிக்கப்படும் வரை, மார்ட்டா டெமிடோ பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லிஸ்பன்:

    போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுலா வந்திருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக லிஸ்பனில் உள்ள சான்டா மரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குறை மாதத்தில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை. எனவே, அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளனர்.

    இதையடுத்து தாயையும் குழந்தையையும், சாவ் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் தாயின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. வாகனத்திலேயே அவரை மயக்க நிலையில் இருந்து மீட்பதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சாவ் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    முறையான மருத்துவ சேவை வழங்காமல் அலட்சியமாக இருந்ததே கர்ப்பிணி மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நிர்வாக ரீதியாக நடந்த தவறுக்கு பொறுப்பேற்று நாட்டின் சுகாதாரத் துறை மந்திரி மார்ட்டா டெமிடோ பதவி விலகினார். அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எனினும், புதிய மந்திரி நியமிக்கப்படும் வரை, மார்ட்டா டெமிடோ பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுகாதாரத்துறை மந்திரியை தேர்ந்து எடுப்பதற்காக வரும் 15ம் தேதி அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இதேபோல், சுகாதாரத் துறையில் இருந்து செயலாளர்கள் அன்டோனியோ லசெர்டா சேல்ஸ் மற்றும் மரியா டி பாத்திமா பொன்சேகா ஆகியோரும் பதவி விலகி உள்ளனர்.

    போர்ச்சுகலில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பெண்கள் உள்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். #Portugal #BusAccident #GermanTourist
    லிஸ்போன்:

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகலின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவு மடெய்ரா. பிரபல சுற்றுலா தலமான இங்கு அயல்நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் மடெய்ராவின் தலைநகர் புஞ்சாலில் இருந்து, கடற்கரை நகரமான கனிகோவுக்கு ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. கனிகோவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.



    இதனால் தறிகெட்டு ஓடிய பஸ், சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 18 பெண்கள் உள்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.   #Portugal #BusAccident #GermanTourist
    உருகுவே அணியிடம் 1-2 என தோல்வியடைந்ததும், மைதானத்தில் இருந்து நேரடியாக சோச்சி விமான நிலையம் சென்று சொந்த நாடு புறப்பட்டது போர்ச்சுச்கல் அணி. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரணடு நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்றன. 2-வது நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி உருகுவேவை எதிர்கொண்டது.



    மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் உருகுவே 2-1 என போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தியது. இந்த தோல்வியை சகித்துக் கொள்ள முடியாத போர்ச்சுக்கல் அணியால் தோல்விக்குப்பின் ஓட்டல் திரும்ப விரும்பவில்லை. நேரடியாக மைதானத்தில் இருந்த சோச்சி விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து போர்ச்சுக்கல் புறப்பட்டுச் சென்றது.
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்ற இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் போர்ச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வீழ்த்தியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. நேற்று நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ், அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

    இந்நிலையில், இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், முன்னாள் சாம்பியனான உருகுவேவை எதிர்கொண்டது. இதில் தோல்வியடையும் அணி தொடரைவிட்டு வெளியேறும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.  



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் போர்ட்டுகல் வீரர் பெப்பே கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.



    அதன்பின் 62-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இது இந்த ஆட்டத்தில் அவர் அடித்த இரண்டாவது கோலாகும். இதனால் உருகுவே அணி மீண்டும் 2-1 என முன்னிலை பெற்றது.



    அதைத்தொடர்ந்து இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்கப்படாததால் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ் அணி, அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்றுவரும் இரண்டாவது நாக்-அவுட் போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. நேற்று நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ், அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

    இந்நிலையில், இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், முன்னாள் சாம்பியனான உருகுவேவை எதிர்கொண்டது. இதில் தோல்வியடையும் அணி தொடரைவிட்டு வெளியேறும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

    தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.  #FIFAWorldCup2018 #FIFA2018 #URUPOR
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாளை நடைபெறும் 2-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ், உருகுவே-போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன. #FIFA2018 #WorldCupfootball2018
    கசான்:

    21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த 14-ந்தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கி யது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. ‘லீக்’ சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறைமோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்’, பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஜப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    சவுதிஅரேபியா, எகிப்து (‘ஏ’ பிரிவு), ஈரான், மொராக்கோ (பி), பெரு, ஆஸ்திரேலியா (சி), நைஜீரியா, ஐஸ்லாந்து(டி), செர்பியா, கோஸ் டாரிகா (இ), தென் கொரியா, ஜெர்மனி (எப்), துனிசியா, பனாமா (ஜி), செனகல், போலந்து (எச்), ஆகிய 16 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

    இன்று ஓய்வு நாளாகும் 2-வது சுற்று ஆட்டங்கள் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. ‘சி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த பிரான்ஸ்- ‘டி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அர்ஜன்டீனா அணிகள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30-க்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

    இரண்டு அணிகளும் முன்னாள் சாம்பியன் ஆகும். அர்ஜென்டீனா 1978, 1986-ம் ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998-ம் ஆண்டி லும் உலககோப்பையை வென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெளியேற்றப்பட்டுவிடும்.

    நாளை நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த உருகுவே -‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.

    3-ந்தேதி வரை, 2-வது சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் 6 மற்றும் 7-ந்தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ந்தேதிகளிலும், 3-வது இடத்திற்கான போட்டி 14-ந்தேதியயும் நடைபெறுகிறது. இறுதி போட்டி 15-ந்தேதி நடக்கிறது. #FIFA2018 #WorldCupfootball2018
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் லியோனஸ் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ. அர்ஜென்டினா கேப்டனான மெஸ்சி பார்சிலோனா கிஸ்டிக்காவும், போர்ச்சுக்கல் கேப்டனான ரொனால்டோ ரியல் மாட்ரீட் அணிக்காகவும் ஆடுகிறார்.

    இந்த உலகக்கோப்பையில் இருவரும் நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. அர்ஜென்டினா 2-வது சுற்றில் பிரான்சுடனும், போர்ச்சுக்கல் அணி உருகுவேயுடனும் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் 30-ந்தேதி நடக்கிறது.

    3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். பிரான்ஸ் அணி மிகவும் வலுவாக இருப்பதால் அர்ஜென்டினாவுக்கு மிகவும் கடினமே. ஆனால் மெஸ்சி தனது அபாரமான ஆட்டத்திறமையை வெளிப்படுத்தினால் பிரான்சால் தடுக்க முடியாது. #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா அணிக்கு போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். #CristianoRonaldo #NGAARG #WorldCup2018
    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து மூன்றாவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜெண்டினா, நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இரு அணிகளும் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின.

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா வீரர்கள் பந்தை முடிந்த அளவு தங்கள் வசமே வைத்திருந்தனர். 14-வது நிமிடத்தில்
    அர்ஜெண்டினா அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மெஸ்சி சிறப்பான முறையில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.



    அதன்பின் 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.
    அதன்பின் எந்த கோலும் அடிக்கப்படாததால் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் குரோசியா அணி ஐஸ்லாந்தை வீழ்த்தியது. இதனால் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த அர்ஜெண்டினா அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.

    அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் இரண்டு லீக் போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்த போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.


    இந்நிலையில், வெற்றி பெற்ற அர்ஜெண்டினா அணிக்கு போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், 'நோக்கம் நிறைவேறி விட்டது. மிகுந்த கவனத்துடனும், ஒற்றுமையுடன் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. செல்லலாம் அர்ஜெண்டினா' என டுவிட் செய்திருந்தார்.  #CristianoRonaldo #NGAARG #WorldCup2018
    மற்றவர்களுக்கென்றால் பேசும் விதிமுறை, ரொனால்டோ மெஸ்சி என்றால் பேசாது என ரெட் கார்டு சர்ச்சையில் ஈரான் பயிற்சியாளர் பதில் அளித்துள்ளார். #WorldCup
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. உச்சக்கட்டமாக நேற்று நடைபெற்ற போர்ச்சுக்கல் - ஈரான் இடையிலான போட்டியில் அதிக சர்ச்சை ஏற்பட்டது. ஏற்கனவே சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் VAR, இந்த போட்டியின்போது உச்சக்கட்டத்தை எட்டியது.

    குரூப் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்த இரண்டு அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அது நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.

    இதனால் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடிக்க முயற்சி செய்தார். ஈரான் தடுப்பாட்டக்காரர் அவரை தடுக்க முயற்சி செய்யும்போது ரொனால்டோ கீழே விழுந்தார். ஆனால் நடுவர் பெனால்டி வாய்ப்பு கொடுக்கவில்லை. பின்னர், நடுவர் ரிவியூ (VAR) கேட்க பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ரொனால்டோ அதில் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் மைதானத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. ரொனால்டோ தனது முழங்கையால் ஈரான் வீரர் மோர்டேசா போராலிகான்ஜியை தள்ளிவிட்டார். இதற்கு ஈரான் வீரர்கள் ரிவியூ (VAR) கேட்டனர். அப்போது ரொனால்டோ முழங்கையால் தாக்கியது தெளிவாக தெரிந்தது. பலமுறை டிவியை பார்த்து ஆராய்ந்த பராகுவே நடுவர், மஞ்சள் அட்டையை காண்பித்தார். இதனால் ரெனால்டோ மஞ்சள் அட்டை பெற்றார்.



    இது ஈரான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. முழங்கையால் தாக்கினால் தானாகவே ரெட் கார்டு வழங்கப்பட வேண்டும். ஆனால், பலமுறை டிவியில் போட்டு தெளிப்படுத்திய பின்னரும் ரொனால்டோவிற்கு ரெட் கார்டு கொடுக்காதது அந்த அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 81-வது நிமிடத்திற்குப் பிறகு சுமார் 16 நிமிட ஆட்டம் நடைபெற்றது. ஒருவேளை ரொனால்டோ வெளியேறியிருந்தால் 10 பேருடன் விளையாடும் போர்ச்சுக்கலை வென்று ஈரான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும்.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த கோபத்தில் போட்டிக்குப்பின் ஈரான் பயிற்சியாளர் கார்லஸ் குய்ரோஸ் கூறுகையில் ‘‘நீங்கள் VAR-விற்காக போட்டியை நிரூத்தினீர்கள். அங்கே ரொனால்டோ முழங்கையால் தாக்கியது தெளிவாகத் தெரிந்தது. பிபா விதிமுறைப்படி முழங்கை என்றாலேயே, ரெட் கார்டுதான். ஆனால், மெஸ்சி அல்லது ரொனால்டோ என்றால் விதிமுறை ஒன்றும் சொல்லாது’’ என்று தெரிவித்தார்.
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறிவிட்டதால் போர்ச்சுகல் வெற்றி வாய்ப்பு பரிதாபமாக பறிபோனது. #WorldCup #RonaldoCR7
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் நேற்றிரவு மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை தவற விட்டார். அவர் அடித்த பந்தை ஈரான் கோல் கீப்பர் அருமையாக தடுத்தார். அவர் கோல் அடித்து இருந்தால் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து ஹாரி கேனை (இங்கிலாந்து) தொட்டு இருப்பார்.

    ஏற்கனவே அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர வீரர் மெஸ்சி பெனால்டியை தவற விட்டு இருந்தார்.

    நேற்றைய ஆட்டத்தில் ரொனால்டோ முரட்டுத் தனத்தில் ஈடபட்டார். ஈரான் வீரரின் முகத்தை கையால் குத்தியதற்காக அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. #WorldCup #WorldCupRussia2018 #Portugal #RonaldoCR7
    ×