search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Possessions"

    • கொள்ளிடம் ஆற்றில் படுகை உள்ளே உள்ள 4 கிராமங்களில் வெள்ளநீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது.
    • கிராம மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் வெளியேறி வருகின்றனர்.

    சீர்காழி:

    கர்நாடகா மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கொள்ளிடம் ஆற்று திறக்கப்பட்டுள்ள வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது.

    இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் சென்று வரும் நிலையில் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட 4 கிராமங்களில் வெள்ள நீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது

    இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்த தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    திட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் முழுவதும் வெள்ள நீரால் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் மேடான பகுதிக்கு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

    கிராமங்களில் இருந்து வெளியேறிய மக்களுக்கு கரைகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மூன்றாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாததால் அன்றாட தேவைக்காக பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் படகுகளின் மூலமாகவே வெளியேறி வருகின்றனர்.

    ×