என் மலர்
நீங்கள் தேடியது "Poultry shops"
- பறவை காய்ச்சல் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கோழி இறைச்சி கடைகளில் சுகாதாரத்துறை சார்பில் கிரிமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கி உள்ளது.
- இதேபோல் மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் இறைச்சி கடைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லை:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது. இதையடுத்து தமிழக அரசு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருமிநாசினி தெளிக்கும் பணி
பறவை காய்ச்சல் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கோழி இறைச்சி கடைகளில் சுகாதாரத்துறை சார்பில் கிரிமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கி உள்ளது.
நெல்லை மாநகர பகுதியில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் தச்சை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி அந்த பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் பகுதியில் உள்ள கறிக்கோழி விற்பனை நிலையத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
இதேபோல் மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் இறைச்சி கடைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள கறிக்கோழி கடைகளிலும் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.