search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power leakage"

    • அட்டை பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது.
    • சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது.

    திருப்பூர்:

    திருப்பூர் அனு ப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் கலைவாணி தியேட்டர் அருகில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். 3 மாடி கொண்ட கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த பின்னலாடை நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை பின்னலாடை நிறு வனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் அட்டை பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது.

    இதனைப பார்த்து அதிர்ச்சி அடைந்த பனியன் நிறுவன ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    பின்னர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் 2 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இருந்த போதிலும் பின்னலாடை நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்பி லான 3ஆயிரம் கிலோ பனியன் துணிகள், 100-க்கும் மேற்பட்ட தையல் எந்திர ங்கள் மற்றும் அட்டைப்பெட்டிகள் எரிந்து நாசமானது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார்.
    • மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    கடலூர் ஓட்டேரி சேர்ந்தவர் மதன் (வயது 36). இவரது மனைவி வீரலட்சுமி (35). இவர்கள் 2 பேரும் ஓட்டேரி பகுதியில் உள்ள மாட்டு பண்ணையில் கூலி வேலை செய்து வந்தனர். இன்று காலை வீரலட்சுமி அங்குள்ள ஸ்விட்ச் போடும் போது மின் கசிவு ஏற்பட்டதில் வீரலட்சுமி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வீரலட்சுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் வீரலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எறிந்தது.
    • தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்துஎறிந்தது.தீமளமளவென பரவிஅடுத்தடுத்து ரவிச்சந்திரன், மங்கலட்சுமி ஆகியோர் வீடுகளுக்கும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலு வலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெ க்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    • வீட்டில் அனைவரும் விவசாய விளைநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
    • வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று தீபாவளியை வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து கொண்டாடி விட்டு மாலை நேரத்தில் வீட்டில் இருந்து அனைவரும் அதே பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு சென்றுள்ளனர். 

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருநாவலூர் தீயணைப்பு நிலை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்தது ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ அருகில் இருந்த வீட்டிற்கு பரவாமல் போராடி அணைத்தனர். ஆனால் இந்த விபத்தில் வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இதில் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் எலக்ட்ரானிக் பொருள்கள் துணிமணிகள் உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் அனை வரும் உயிர் தப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீக்கரையான வீட்டை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் காமராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வீட்டில் உரிமையாளர் ரங்கநாதனுக்கு பணம் மற்றும் உணவுப் பொரு ள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் செய்தது குறிப்பி டத்தக்கது.

    • டிரான்பார்மரில் பசுமாடு மின் கசிவால் இறந்தது.
    • வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் செல்வம் (40). இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று கடலூர் ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. அப்போது சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாமல் இருந்ததே டிரான்ஸ்பார்மில் ஏற்ப்பட்ட மின் கசிவின் காரணமாக பசுமாடு உயிரிழக்க காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்

    ×