search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "practice match"

    • வங்காள தேசத்துடனான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • சாஹிப் அல் ஹசன் - மஹமதுல்லா ஜோடி சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்

     டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நேற்று (ஜூன் 1) தொடங்கியது. நேற்றைய தினம் அமெரிக்கா - கனடா மற்றும் இந்தியா- வங்காள தேச அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. வங்காள தேசத்துடனான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

     

    ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 6 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் எம்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்தில் 53 ரன்கள் (தலா நான்கு பவுண்டரி, சிக்ஸ்) எடுத்து ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார்.

    அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். ஷிவம் டுபே 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 40 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடிக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

     

    இதைதொடர்ந்து பேட்டிங் இறங்கிய வங்காள தேச அணிக்கு வலுவான பந்துவீச்சின் மூலம் டஃப் கொடுக்கும் வகையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இதனால் வங்காள தேச அணி பேட்டிங்கில் திணறியது. களமிறங்கிய முதல் ஓவரிலேயே சவுமியா சர்கார் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தார்.

    தவ்ஹித் ஹரிதோய் சற்று அதிக நேரம் களத்தில் நீடித்தாலும் அது அணிக்கு பெரிதாக பலனளிக்கவில்லை. சாஹிப் அல் ஹசன் - மஹமதுல்லா ஜோடி சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புதான் 122 ரன்களை மட்டுமே வங்காளதேசத்தால் எட்ட முடிந்த நிலையில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 

    • முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

    பிரிஸ்பேன்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

    அதற்கு முன்னதாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. நேற்றைய முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

    2-வது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேன் மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நியூலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாட முடியும் என கருதப்படுகிறது.

    முன்னதாக குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் மற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

    • இந்த போட்டியில் ரோகித் சர்மா, அர்தீப்சிங் ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    2022 டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தற்போது பெர்த் நகரில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், 2வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் விராட் கோலிக்கும், சூர்யகுமார் யாதவுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டனாக ராகுல் செயல்பட்டார்.

    ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அர்தீப்சிங் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பவர்பிளேவில் ஹர்திக் பாண்டியா பந்தவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் அவர் அதிவேகமாக பவுண்சர்களை வீசி நெருக்கடி அளித்தாலும், வெஸ்ட்டர்ன் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்களை குவித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    இறுதியில் வெஸ்ட்டர்ன் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், ஹர்சல் 2 விக்கெட்டும்,ஆர்ஸ்தீப் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - ரிஷப் பண்ட் ஆடினர். ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் தீபக் ஹூடா 6 ரன்னிலும் வெளியேறினர். இந்நிலையில் கேஎல் ராகுலுடன் பாண்ட்யா ஜோடி சேர்ந்து ஆடினார்.

    17 ரன்கள் எடுத்த நிலையில் பாண்ட்யாவும் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார். அடுத்த வந்த அக்சர் படேல் 2 ரன்னிலும் தினேஷ் கார்த்திக் 10 ரன்னிலும் நடையை கட்டினர். நிலைத்து ஆடிய கேஎல் ராகுல் 74 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட்டர்ன் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, அர்தீப்சிங் ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை.

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
    லண்டன்:

    10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், லண்டனில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நியூசிலாந்து அணியினரின் அசத்தலான பந்து வீச்சால் ரோகித் சர்மா 2 ரன்னிலும், ஷிகர் தவான் 2 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்னில்லும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 18 ரன்னில் அவுட்டானார்.

    ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும், டோனி 17 ரன்னும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னும் எடுத்து வெளியேறினர். இந்திய அணி 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.

    இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ஆல்- ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் இணைந்து அணியை சற்றே உயர்த்தினர். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா அரை சதமடித்தார். அவர் 54 ரன்னிலும், குல்தீப் யாதவ் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் இறுதியில் இந்தியா 179 ரன்னில் ஆல் அவுட்டானது.



    நியூசிலாந்து சார்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் 71 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னும் எடுத்து அசத்தினர். 

    இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.

    நேற்றைய ஆட்டத்தில் டோனிக்கு பதிலாக இந்திய அணி விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார்.
    ×