search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "practice pitches"

    • இந்திய அணி பயிற்சி செய்ய பவுன்ஸ் குறைவான மிகவும் டயர்டு பிட்ச் கொடுக்கப்பட்டிருந்தது.
    • ஆஸ்திரேலியா அணிக்கு நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் உள்ள ஆடுகளம் கொடுக்கப்பட்டிருந்தது.

    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இன்னும் 2 போட்டிகளே உள்ள நிலையில் இரண்டிலும் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வெற்றி பெற்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறும்.

    இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணிக்கு பழைய ஆடுகளமும் ஆஸ்திரேலியாவுக்கு புதிய ஆடுகளமும் கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய அணி பயிற்சி செய்ய பவுன்ஸ் குறைவான மிகவும் டயர்டு பிட்ச் அதாவது பழைய ஆடுகளம் கொடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் பயிற்சியின்போது காயமடைந்தனர்.

    ஆஸ்திரேலியா அணிக்கு நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் உள்ள ஆடுகளம் கொடுக்கப்பட்டிருந்தது. இது போட்டிக்கு கொடுக்கப்படும் ஆடுகளம் போலவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்திய அணிக்கு கொடுக்கப்பட்ட பழைய ஆடுகளம் குறித்து ஆடுகள பராமரிப்பாளர் ஒரு வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத்தான் இரு அணிகளுக்குமே புதிய பயிற்சி ஆறு காலங்களை கொடுப்போம். ஆஸ்திரேலியா இன்று தான் பயிற்சிக்கு வருகிறது. எனவே அவர்களுக்கு புதிய பயிற்சி ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டது.

    இந்திய அணி முன்கூட்டியே பயிற்சியை ஆரம்பித்து விட்டதால் அவர்களுக்கு பழைய ஆடுகளங்கள் பயிற்சிக்கு கொடுக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கும் புதிய ஆடுகளம் கொடுக்கப்படும்.

    என்று ஆடுகள் பராமரிப்பாளர் கூறினார். 

    ×