search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pradhan mantri kisan"

    • திண்டுக்கல் சாணார்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த ஒரு வருடமாக பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி தொகை கிடைக்கவில்லை
    • வேளாண் அதிகாரிகளும் உரிய பதில் அளிக்காததால் விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி காப்பீட்டு தொகையாக வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை ஜனவரி, மே, செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயி களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 1 வருடமாக இந்த தொகை கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கி ன்றனர். இது குறித்து கம்பிளியம்பட்டியில் உள்ள கனரா வங்கி கிளை அலுவலகத்துக்கு சென்று கேட்ட போது, ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என தெரி வித்துள்ளனர்.

    ஆனால் அதனை இணைத்தபிறகும் மத்திய அரசின் நிவாரண தொகை கிடைக்கவில்லை. இது குறித்து மீண்டும் சென்று கேட்ட போது உங்கள் பகுதியில் வட்டார வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொண்டு முறை யிடுமாறு கூறியுள்ளனர்.

    வேளாண் அதிகாரிகளும் உரிய பதில் அளிக்காததால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசு வழங்கும் விவசாயிகளுக்கான நிவாரண தொகை பல்வேறு குடும்பங்களுக்கு உதவியாக இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக பெரும்பாலான விவசாயி களுக்கு இது கிடைக்காமல் இத்திட்டம் கண் துடைப்பு போல இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×