என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prasaram"

    • தூய அரசியல் அமைய 14 ஆண்டுகளாக போராடி வருகின்றோம்.
    • இளைஞர்கள் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீண்ட நாட்களாக இந்த நிலத்தில் நிலவி வரக்கூடிய தீய அரசியலை மாற்றி தூய அரசியல் அமைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தமிழர் கட்சி 14 ஆண்டுகளாக போராடி வருகின்றோம்.

    குன்றக்குடி அடிகாளர் மக்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அந்த நாடு குற்றம் சமூகமாக மாறும், அப்படி குற்ற சமூகமாக இல்லாத வகையில் இருக்க மாற்ற துடிக்கக் கூடியவர்கள் நாம் தமிழர் பிள்ளைகள்.

    இந்த ஆட்சியாளர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் வராமல் இருப்பது, மக்களை பற்றி கவலை படாமல் இருப்பது, தேர்தல் வரும் போது ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்கு பெறுவது, ஓட்டை விற்றுக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் ஓட்டை வாங்கி கொண்டு நாட்டை விற்கிறார்கள்.

    அடுத்த தேர்தல் வரும் போது சிந்திப்பார்கள். ஆனால் மக்களை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பது கட்சி அரசியல். தேர்தல் அரசியலில் பெண்கள் ஓட்டை வாங்குவது என தி.மு.க. நினைத்தது, பெண்கள் ஓட்டை தி.மு.க. வுக்கு போடுவது இல்லை என்றும் அதனை எப்படி வாங்குவது என்று சிந்தித்து குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்று நினைத்தது தான் தேர்தல் அரசியல்.

    அதே போன்று மாணவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள். இளைஞர்கள் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஏன் என்றால் எங்கு பார்த்தாலும் ஊழல், சுற்றுச்சூழல் பாதிப்பு, இதையெல்லாம் பார்த்து இளைஞர்கள் சீமான் பின்னால் செல்கிறார்கள்.

    சீமான் பின்னால் இருப்பவர்கள் எந்த அரசியல் பின்னணி கொண்டவர்கள் இல்லை. 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தாய்மார்கள் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தி நிற்கிறார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பெண்கள் கையேந்தினால் அது புரட்சி பெண்ணா வறட்சி பெண்ணா.

    திராவிடம் என்று எந்த வழியில் பொருள் கொண்டாலும் திருடன் என்று தான் பொருள் வருகிறது. திராவிடம் தீராத கொடிய விஷம். நூறு ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுப்பது தான் தேர்தல் அரசியல்.

    45 ஆயிரம் கோடி சாராய விற்பனை தேர்தல் அரசியல், தாலிக்கு தங்கம் தேர்தல் அரசியல், இந்த தேர்தல் அரசியலை தீ வைத்து கொளுத்தி விட்டு கட்சி அரசியல் நோக்கி மக்கள் செல்வது தான் இந்த மண்ணுக்கு தேவையான தூய்மையான அரசியல்.

    அண்ணா பல்கலைக்கழகம் மாணவி எப்படியெல்லாம் பாலியல் கொடுமை குறித்து அளித்த வாக்கு மூலம் மாணவி எப்.ஐ.ஆர் குறித்து வெளியிட்டது தான் திருட்டு திராவிடம். இத்தனை எப்.ஐ.ஆர் இருக்கும் நிலையில் மாணவி நகல் மட்டும் இணையதளத்தில் இருந்து கசிந்து வெளியானது எப்படி?

    அந்த சார், எந்த சார் என்று ஏதாவது விசாரித்து இந்த அரசு வெளியிட்டுள்ள தா? போராட வந்த பா.ம.க சுற்றுச்சூழல் அமைப்பாளர் சவுமியா, பா.ஜ.க குஷ்பு ஆகிய பெண்கள் கைது செய்யப்பட்டது ஏன்? அப்போது ஞானசேகரன் குற்றவாளியா? அரசு குற்ற வாளியா? என் வீட்டை 15 நாட்களுக்கு முற்றுகை செய்ய அனுமதி அளித்தது ஏன்? பெரியாரை வேண்டு மென்று விமர்சனம் செய்ய வில்லை. பெரியார் வேண்டாம் என்று தான் விமர்சனம் செய்கின்றேன்.

    பெரியார் பெரியார் என்று பேசுகிறார்கள். ஆனால் பெரியார் பேசியதை பேச மறுக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் தென் மாநில கிளையை பெரியார் தலை மையில் உருவாக்கியது. சிறையில் இருந்த முத்துராமலிங்கத் தேவர், நல்லகண்ணு போன்ற தலைவர்கள் போல பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், பெரியார் ஆகியோர் சிறையில் இல்லை.

    என்னை ஒன்று தான் செய்ய முடியும். வழக்கை போடலாம். சிறையில் போடலாம் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. கூட்டத்தில் தொடர்ந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்த்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதிக்க ப்பட்டவன் போறானா? பணம் போகிறதா என்று தெரியவில்லை.

    இப்போது தமிழகத்தில் பணம் இப்படி தான் போகி றது. இன்னும் ஒன்றை ஆண்டுகளில் 2026-ம்ஆண்டு புதிய அரசியல் படைப்போம். இனி என்னி டம் இருந்து தப்பிக்க முடியாது. சட்ட நகல் எரித்த பெரியார் நவம்பர் 26-ம் தேதி தி.மு.க சட்ட நகல் எரிப்பு நாள் என்று கொண்டாடி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடு வதை திசை மாற்றுகிறார்கள்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என வரும் போது தி.மு.க. குதிப்பது என்ன? இந்த நடைமுறையை ஆதரித்து பேசியது தி.மு.க.வின் தலை வராக இருந்த 1971ம் ஆண்டு கருணாநிதி தான் ஓரே நாடு ஓரே தேர்தல் வரவேற்று பேசினார். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஓரே மதம், கட்சி ஆகிய கோட்டுப்பாடுகளை வரவேற்று பேசியவர் பெரியார்.

    ஓரே நாடு, ஓரே கட்சி, ஓரே மதம், வேண்டும் என்று பெரியார் எழுதியது இருக்கிறது. பா.ஜ.க. பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால், அப்போது ஏ டீம் யாரு, அது தி.மு.க. தான். அதனால் அதை ஒழிக்க வேண்டும்.

    5 நேரம் தொழும் இஸ்லாமிய மக்கள் தொழும் போது ஒருமுறை ஒரு நொடியில் எங்களுக்காக வெற்றி பெற துவா செய்யுங்கள் என்று கேட்டு கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.
    • நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரி த்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடந்து இருந்தாலும், ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.

    ஆளுங்கட்சியான தி.மு.க. வும், எதிர்கட்சியான அ.தி.மு.க.வும் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த ஒன்றி ணைகின்றன. அ.தி.மு.க வாக்காளர்களுக்கு கூடுதல் தொகை கொடுத்து, நீங்கள் தி.மு.க.விற்கு ஓட்டு போடா விட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து விடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர்.

    எங்களைக் கண்டு இவ்வ ளவு பயப்படுவார்கள் என்று நான் நினைக்க வில்லை. அ.தி.மு.க, பா.ஜ.க. வினர் சில உதிரிகளை வைத்து பெரியாரை விமர்சனம் செய்கின்றனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள். நாங்கள் உறுதியாய் தனித்து தேர்தல் களத்தில் நிற்கிறோம்.

    உதிரிகளை கூட்டணி சேர்த்து தி.மு.க நிற்கிறது. நாங்கள் பெரியரை விமர்சிக்கவோ, இழிவாகவோ பேசவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக பெரியார்தான் எங்கள் மொழியை, இனத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

    என் கருத்துக்கு எதிர் கருத்து கூறாமல் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். பெரியார் இல்லாமல் ஒன்றுமில்லை என்பது அவர்களின் கருத்து. பெரியாரால் ஒன்றுமில்லை என்பது எங்கள் கருத்து.

    தமிழரான எங்களுக்கு திராவிடன் என பெயர் வைக்க வேண்டாம். எந்த நேரத்தில் எந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார்.

    அதுபோல நான் இப்போது பெரியாரை விமர்சிக்கிறேன். சனாதனத்தை ஒழிப்பதாக சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி, ஆதிதிராவிடர்களோடு அமர்ந்து உணவருந்துவதாக ஒரு விளம்பரம் வருகிறது. இதுதான் உண்மையான சனாதானம் என்பதை உணர்ந்து உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தமிழர்கள். கோபம் வராவிட்டால் நீங்கள் திராவிடர்கள்.

    தமிழக மீனவர்கள் சுடப்படும்போது, நான் இந்த நாட்டு மீனவர் இல்லையா என்று கேட்டால் அது தமிழ் தேசியம். கச்சதீவை கொடுத்தது தான் என்றால் திராவிடம். கச்சத்தீவை திரும்ப எடுப்போம் என்றால் தமிழ்தேசியம். தமிழை சனியன் என்று இழித்து பேசுவது திராவிடம். தமிழ் எங்களுக்கு உயிர், முகம், முகவரி, மூச்சு, பேச்சு என்று பேசுவது தமிழ்தேசியம்.

    60 ஆண்டுகளாக இலவசங்களைக் கொடுத்து வாக்கை பறித்து மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏழையாய் வைத்திருப்பது திராவிடம்.

    தனக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றும் தற்சார்பு வாழ்க்கையைத் தருவது தமிழ் தேசியம். மதிப்புமிக்க வாக்குகளை விலைக்கு விற்கும் நாடும், மக்களும் உருப்படமாட்டார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகு தியில் நடப்பது கடுமையான போர். இந்த போரில், எங்க ளுக்கு கை கொடுப்பது தமிழர்களின் கடமை. ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். என் வீட்டைப்போல நாட்டை பார்த்துக் கொள்வோம். என் தாய் மண்ணை என்னை விட எவரும் நேசிக்க முடியாது.

    என் மொழி, இனத்தின் மீது பெரியாருக்கு ஏன் வன்மம்? என் தாய்மொழி தமிழை சனியன் என்று சொன்ன சனியனை ஒழிக்க வேண்டும். வள்ளளார், வைகுந்தரை விட பெரியார் என்ன சீர்திருத்தம் செய்து விட்டார்? எல்லா எலியும் எழுந்து வந்து ஒரு புலிக்கு முன்னாள் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    தாய்ப்பால் போல் தாய்மொழிக் கல்வி அவசி யம் என்றார் காந்தி. உன் மொழியை உலகின் மூத்த மொழியை அசிங்கமாக பேசினால் விட முடியுமா? வீட்டுக்கு தகப்பனை, நாட்டுக்கு தலைவனை கடன் வாங்க முடியாது. என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது.

    ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான். தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விட மாட்டேன். பெரியாரால் இந்த நிலத்தில் என்ன நடந்தது? சமூகநீதி, சாதி ஒழிப்பு, பெண்ணிய உரிமை இதெல்லாம் திராவிடத்தில் வெறும் சொல். தமிழ் தேசியத்தில் அது செயல்.

    பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது திராவிடம். இலங்கையில் போரை நிறுத்தவும், பிரபாகரன் உள்ளிட்டவர்களைக் காப்பாற்றவும் அமெரிக்கா விரும்பியது. ஆனால், காங்கிரஸ் குடும்பமும், தமிழக தலைவர்களும் அதனை விரும்பவில்லை.

    இலங்கை போரை விரைந்து முடிக்க அவர்கள் விரும்பினார்கள் என்று முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி சிவசங்கர மேனன் எழுதி இருக்கிறார்.

    பிரபாகரன் இருப்பது இவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாக இருக்கும் என்று கருதினார்கள். 13 கோடி தமிழ் சொந்தம் இருக்கும்போது, இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு கொடிய நிகழ்வு நடந்தது. பிரபாகரன் மகன் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பது தமிழக, இந்திய தலைவர்களுக்கு சொல்லப்பட்டது.

    ஆனால், பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என்று தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதனால் பாலச்சந்திரனைக் கொன்றார்கள். இதை மறந்து, கடந்து போக முடியுமா? இதற்கு காரணமானவர்களை வஞ்சம் வைத்து கருவருக்காமல் விடமாட்டேன்.

    பேரரசுகள் சாம்ராஜ்யங்களே வீழ்ந்துள்ள போது உங்களை வீழ்த்துவது எம்மாத்திரம்? வீழ்ந்து விட்டதால் தான் இப்போது காசு கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். சாதி பார்க்காமல் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளோம். ஈரோடு கிழக்கு மக்களுக்கு நான் யாருக்காக பேசுகிறேன் என்று தெரியும்.

    உதட்டில் இருந்து அல்ல, உள்ளத்தில் இருந்து பேசுகிறேன். உண்மையை, உரக்கப் பேசுவோம். உறுதியாக பேசு வோம். சத்தியத்தை சத்தமாக பேசுவோம். என்னை தோற்கடிக்க துடிக்கிறது திராவிடம். நான் வீழ்வது மகிழ்ச்சி என்றால் தி.மு.க. விற்கு வாக்களியுங்கள்.

    வீழ்ந்த தமிழினம் எழ வேண்டுமானால், தன்மானத்தோடு மக்கள் வாழ வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள். கட்சிகளை, தலைவர்களை நம்பியது போதும். ஒருமுறை எங்களை நம்புங்கள். எங்களின் வெற்றி தமிழ் பேரினத்தின் வெற்றி. மக்களின் வெற்றி. அரசியல் புரட்சிக்கான வெற்றி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாக்குக்கு பணம் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றனர்.
    • நாங்கள் பதவிக்கானவர்கள் அல்ல. உங்கள் உதவிக்கானவர்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டார். கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதன்முதலாக பெரியாரை எதிர்த்து அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா. கடவுள் இல்லை என்ற கொள்கையை கைவிட்டு, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்னவர். காங்கிரசார் வாக்கிற்கு பணம் கொடுத்த போது, தங்கத்தை யாராவது தவிட்டிற்கு விற்பார்களா என்று கேட்டவர் அண்ணா.

    அவருடைய பேரைச் சொல்லி கட்சி நடத்துபவர்கள், வாக்கினை விலைக்கு வாங்கிக் கொண்டு இருக்கின்றனர். அவதூறு, அசிங்கம், பழிவாங்கல், அடக்குமுறை இல்லாத நல்லாட்சி கொடுத்தவர் அண்ணா.

    அவர் அரசியல் தளத்திற்கு வந்த பிறகுதான், தமிழர்களின் இலக்கியம், வரலாறு அரசியல் மேடைகளில் பேசப்பட்டது. பணத்தை முன் நிறுத்தி அவர்கள் நிற்கும் போது நாங்கள் இனத்தை முன் நிறுத்தி நிற்கிறோம்.

    நாங்கள் பதவிக்கானவர்கள் அல்ல. உங்கள் உதவிக்கானவர்கள். மக்களை வைத்து பிழைக்க நாங்கள் கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களுக்கு உழைக்க ஆரம்பித்தோம். தொடர்ந்து தோல்வி வந்தாலும், உங்களை நம்பி நிற்கிறோம்.

    ஆதிக்குடி மக்களுக்கு சாதிச்சான்று கிடைக்க வில்லை. சமூகநீதி பேசிய திராவிடர்கள் எங்கே போனார்கள்? சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து இடப்பகிர்வை கொடுக்க இவர்கள் மறுக்கின்றனர்.

    சாதி வாரிக்கணக்கெடுப்பு எடுத்தால் நரிகளின் வேஷம் கலைந்து விடும். இதை யெல்லாம் தெரிந்தும் வாக்கினை விலைக்கு விற்கலாமா? இங்கு அரசு வழங்கும் கல்வி, மருத்துவம் எதுவும் தரமில்லை.

    இந்த அரசாங்கம் மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுத்து விட்டு தண்ணீரை விலைக்கு விற்கிறது. சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லாத நாட்டிற்கு எதற்கு 5000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்க வேண்டும். இத்தனை நாட்களாக நீங்கள் தலைவர்களை தேர்வு செய்யவில்லை. தரகர்களைத் தேர்வு செய்து வந்துள்ளீர்கள்.

    சாதி, மதம், சாராயம், திரைக்கவர்ச்சி, பணம் ஆகியவற்றைக் கொண்டு வாக்காளர்களை மயக்குகின்றனர். முதல்வர், துணை முதல்வர் உங்களை வந்து பார்க்கவில்லை. அவ்வளவுதான் உங்கள் மதிப்பு. உங்களுக்காக பேச எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இதற்கு முன்பு நடந்த இரு தேர்தல்களிலும், எந்த கூட்டணியும் இல்லாது, மக்களை நம்பி போட்டியிட்டோம்.

    மதுக்கடைகளுக்கு விடுமுறை என்றால் முன் கூட்டியே மதுவை வாங்கி வைக்க சிந்தனை செய்யும் நீங்கள், எதிர்கால சந்ததிக்கு குடிநீர், காற்று, கல்வி, உணவு போன்றவை இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

    தொடர்ந்து பலமுறை இந்த கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி விட்டீர்கள். வாக்கிற்கு பணம் கொடுத்தால் போதும் என்பதுதான் அவர்கள் நம்மீது வைத்திருக்கும் மதிப்பு.

    ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு நிதி தரவில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை யில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. இதை சொல்வதற்கு 40 எம்பிக்கள் எதற்காக? அதிக வருவாய் ஈட்டித்தரும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

    எனது வருவாயைப் பெற்று, எனக்கு நிதியைத்தர மறுக்கிறாய் என இந்த ஆட்சியாளர்கள் வரிகொடா இயக்கத்தை நடத்த முடியாதா? இவர்கள் அந்த முடிவை எடுக்க மாட்டார்கள்.

    ஆளுநர் நியமனம் செய்யும் துணைவேந்தர்க ளுக்கு ஆளுநர் ஊதியம் வழங்கட்டும். தமிழக அரசு நியமனம் செய்யும் துணை வேந்தர்களுக்கு மட்டும் தான் நாங்கள் சம்பளம் கொடுப்போம் என்று தமிழக அரசு சொல்ல முடியாதா? இவர்கள் கரை படிந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்பதால் இவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.

    நாம் தமிழர் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, அதிமுக, பாஜகவினரிடம் சென்று, 'நீங்கள் வாக்கு செலுத்தி சீமானை வளரவிட்டீர்கள் என்றால், அடுத்து உங்களுக்கு போட்டியாக வந்து விடுவார்' என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

    பெரியாரை விமர்சித்த சீமானுக்கு அதிக வாக்கு விழக்கூடாது என்பதால் நோட்டாவிற்கு போடுங்கள் என்று பிரசாரம் செய்கின்றனர்.

    பெரியார் என்ன செய்தார் என்று பேச ஒருவருக்கும் தைரியம் இல்லை. காசு கொடுத்து வாக்கினை வாங்குவதுதான் திராவிட மாடல். இப்போது நோட்டாவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொல்லும் திமுக, 234 தொகுதிகளில் நான் போட்டியிடும் போதும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு சொல்வார்களா?

    2026 பொதுத்தேர்தலில் நான் தனித்து போட்டியிடுவேன். ஆண்கள், பெண்களுக்கு நான் சம வாய்ப்பு கொடுப்பேன். உதயசூரியனுக்கு வாக்களித்தால் கருணாநிதி வீட்டில் வெளிச்சம் வரும். உன் வீட்டுக்கு வெளிச்சம் வராது. பழைய சின்னங்களை தூக்கி வீசி நாம் தமிழரை ஆதரியுங்கள். நாட்டை நாசமாக்கியவர்கள் மீது, உங்கள் கோபத்தை வெளிப்படுத்த, எங்களுக்கு வாக்கு செலுத்தி வெளிப்படுத்துங்கள்.

    வாக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல், லஞ்சத்திற்கு விதை ஊன்றப்படுகிறது. ஒரு முதலாளி 100 கோடி ரூபாய் முதலீடு செய்வது மக்கள் சேவை செய்ய வருவார்களா?

    நாங்கள் தெரு தெருவாக வந்து மக்களை சந்திக்கிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் ஏன் வந்து மக்களைச் சந்திக்கவில்லை. ஆட்சியின் சாதனையை சொல்ல ஒன்றுமில்லை. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற பயம் இருக்கிறது.

    வாக்குக்கு பணம் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றனர். பிரச்சாரத்திற்கு வராமல் வெற்றி பெறுவோம் என்று திமிருடன் இருக்கும் தி.மு.க. வை ஒழிக்க எங்களுக்கு வாக்களியுங்கள்.

    குடும்பத்தலைவிக்கு ஆயிரம் உதவித்தொகை கொடுத்து, அதனை டாஸ்மாக் மூலம் திரும்ப வாங்கிக் கொள்கின்றனர். மகளிர் உரிமைத் தொகைக்கு கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை என்று பெயர் வைக்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்து இதற்கு பணம் கொடுக்கின்றனரா?

    மகளிரை, மாணவியரை கையேந்த வைக்கத்தான் இவர்கள் திட்டம் போடுகி ன்றனர். பிச்சை எடுக்கும் திட்டத்திற்கு மட்டும் தமிழ் மகள் என்று ஏன் பெயர் வைக்கின்றீர்கள். திராவிட மகள் என்று வைக்க வேண்டியது தானே. ஒருநாள் திராவிட மாடலை, ஈயம், பித்தளை, பேரிச்சம் பழத்திற்கு போடும் நிலை யை வர வைப்பேன்.

    இந்த தேர்தல் கட்சி களுக்கான போட்டி யிட்டிலை. கருத்தியலுக்கான போட்டி. திராவிடக் கோட்பாட்டிற்கும், தமிழ் தேசிய கருத்துகள் மோதுகின்றன.

    உன் இனத்தை, வளத்தை பாதுகாக்க, தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். ஈரோடு கிழக்கில் நாம் தமிழருக்கு கிடைக்கும் வெற்றி மாற்றத்திற்கான, நல்ல அரசியலுக்கான மகத்தான தொடக்கமாக இருக்கட்டும். ஒற்றை விரலால் ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×