என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President address"

    • நாம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்றால், ஏன் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்?.
    • அக்னிவீர் போன்ற திட்டம் ஏன்?. அரசி விலையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?.

    நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அப்போது பொருளாதாரம், எமர்ஜென்சி உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.

    இந்த நிலையில் மத்திய அரசு தயார் செய்த ஸ்கிரிப்ட், பொய்கள் நிறைந்தது என எதிர்க்கட்சிகள் பதில் அளித்துள்ளனர்.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

    நான் கூறுவது இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது குறித்தது. இது விவசாயிகளை வளப்படுத்தியதா? நாம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்றால், ஏன் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்?. அக்னிவீர் போன்ற திட்டம் ஏன்?. அரசி விலையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?.

    முதலீடு இருந்தால் நாம் அதிக வளர்ச்சியை பார்க்க முடியும். தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்க முடியாது. இது நமது எண்ணிக்கையை மேம்படுத்தலாம் ஆனால் விவசாயிகள், ஏழைகள் மற்றும் மிகவும் சுரண்டப்பட்டவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது. எமர்ஜென்சியின் போது ஜெயிலில் இருந்தவர்களுக்கு பாஜக என்ன செய்தது?. சமாஜ்வாடி அவர்களுக்கு மரியாதை கொடுத்தது, பென்சன் வழங்கியது.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா

    அரசால் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்-ஐ ஜனாதிபதி படித்துள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லை என்பதை பாஜக இன்னும் உணரவில்லை. பாஜக 303-ல் இருந்து 240-க்கு வந்ததை உணராததுதான் அரசின் பிரச்சனை. 303 மெஜாரிட்டி அடிப்படையில் இந்த உரை தயார்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான், அரசாங்கம் உண்மையில் மெஜாரிட்டி இல்லாமல் இருக்கும்போது தெளிவான பெரும்பான்மை அரசாங்கம் இருப்பதாக அவர் கூறினார் (இநதிய மக்கள் நிலையான அரசை தனி மெஜாரிட்டியுடன் 3-வது முறையாக தேர்ந்தெடுத்துள்ளதாக உலகம் பார்க்கிறது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்).

    காங்கிரஸ் தலைவர் தரிக் அன்வர்

    பழைய உரைகளில் கொஞ்சம் மாற்றம் செய்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று நிகழ்த்தப்பட்ட ஜனாதிபதி உரையில் புதிதாக ஏதும் இல்லை. எமர்ஜென்சிக்குப் பிறகு ஏராளமான தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை.

    • வேலையின்மை பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடி தவறிவிட்டார்.
    • வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.

    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் கூறப்பட்ட விஷயங்களையே இந்த முறையும் குடியரசுத் தலைவர் உரையில் கிட்டத்தட்டக் கேட்டேன். குடியரசுத் தலைவரின் உரை இப்படி இருந்திருக்கக் கூடாது.

    நாட்டின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. உற்பத்தி துறையில் இந்தியா பின் தங்கியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சனை.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து தெளிவான பதிலை அளிக்கவில்லை. வேலையின்மை பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடி தவறிவிட்டார். வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இளைஞர்களுக்கு எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

    • பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது
    • இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.

    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரதமர் கொண்டு வந்தார். அது நல்ல யோசனை என்று நினைக்கிறேன். 2014-ல் 15.3% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, இன்று 12.6% ஆகக் குறைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் உற்பத்தியில் இது தான் மிக குறைவானதாகும். இதற்காக நான் பிரதமரைக் குறை கூறவில்லை, அவர் முயற்சிக்கவில்லை என்று கூறுவது நியாயமாக இருக்காது. பிரதமர் முயற்சி செய்தார் ஆனால் அவர் தோல்வியடைந்தார் என்று என்னால் கூற முடியும்

    சீனா இந்த இடத்தில் இந்தியாவை விட குறைந்தது 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளது. சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் ஆகியவற்றில் வேலை செய்து வருகிறது. நாம் பின்தங்கியுள்ளோம்.

    உற்பத்தி துறையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவுக்கு சென்று விட்டன. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. செல்போனின் அனைத்து பாகங்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் அசம்பிள் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது.

    இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது

    இந்தியாவும் உற்பத்தியில் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தால், அமெரிக்க அதிபரின் பதிவியேற்பு விழாவிற்கு நமது பிரதமரை அழைக்க வேண்டும் என்பதற்காக நாம் நமது வெளியுறவு அமைச்சரை அனுப்ப மாட்டோம். மாறாக அமெரிக்க அதிபர் இங்கு வந்து நமது பிரதமரை அழைத்திருப்பார்" என்று தெரிவித்தார்.

    ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே "வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து இப்படி பேசக் கூடாது" என அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார்.

    • இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார்.
    • இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் நேற்று கூடியது.

    அப்போது, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "சீனா இந்த இடத்தில் இந்தியாவை விட குறைந்தது 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளது. சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் ஆகியவற்றில் வேலை செய்து வருகிறது. நாம் பின்தங்கியுள்ளோம்.

    உற்பத்தி துறையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவுக்கு சென்று விட்டன. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. செல்போனின் அனைத்து பாகங்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் அசம்பிள் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது.

    இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது" என்று தெரிவித்தார்.

    ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே "வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து இப்படி பேசக் கூடாது. ராகுல் காந்தி பொய் பேசுகிறார் என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி கூறிய கருத்துக்களுக்கு உரிய ஆதாரங்களை வழங்கவில்லை என்றால், அவர் மீது உரிமை மீறல் நோட்டிஸ் வழங்க பாஜக எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×