என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "press meet"
- 2015-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்...' படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா நடித்திருந்தார்.
- மலையாள படங்களில் தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
2015-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்...' படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து 'நானும் ரவுடிதான்', 'மிருதன்', 'விஸ்வாசம்' ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான 'புட்டபொம்மா' படத்தில் கதாநாயகியாக அனிகா அறிமுகம் ஆனார். மலையாள படங்களில் தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். மலையாளத்தில் 'சின்ன நயன்தாரா' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் அனிகா, அவ்வப்போது தனது கலக்கல் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இதற்கு ரசிகர்கள் ஆதரவான கருத்தை தெரிவித்தனர். இன்னும் சிலர் கடுமையாக விமர்சித்து அவதூறு பதிவுகள் வெளியிட்டனர். ஆடைக்கு எதிராக வரும் மோசமான கமெண்ட்டுகளுக்கு அனிகா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "எனக்கு ஸ்டைலான ஆடைகள் அணிவது பிடிக்கும். கவர்ச்சியான உடைகள் அணிவது என்பது எனது தனிப்பட்ட விஷயம்.
ஆனால், என்ன உடை அணிந்தாலும் விமர்சிக்கிறார்கள். தவறாக பேசுகிறார்கள். இது என்னை மிகவும் பாதிக்கிறது. நானும் ஒரு மனுஷிதான். சினிமாவில் இருக்கும் பெண்கள்தான் பெரிய அளவில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள்'' என்றார். இவர் தற்பொழுது ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் மே 24 ஆம் தேதி வெளிவர இருக்கும் பி.டி சார் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.
- அர்ஜூன் தாஸ் நடித்த ரசவாதி திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்பொழுது….
என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப்பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து, எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள். என் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான் அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய இந்தப்பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களும் எனக்காக சிறப்பான பாத்திரங்கள் தந்துள்ளார்கள். அதற்குக் காரணமும் நீங்கள் தான் அதற்கும் நன்றி என்றார்.
அதைதொடர்ந்து இயக்குநர் சாந்தகுமார் உடன் வேலை பார்த்தது அட்டகாச அனுபவம். மௌனகுரு எனக்கு பிடித்த படம். அவர் கூப்பிட்ட போது சந்தோசமாக இருந்தது. கதை எனக்கு பிடித்திருந்தது. அவர் படத்தில் நடிப்பது உண்மையில் எனக்கு பெருமை. படத்தைப் பொறுத்தவரையில் ஒரு டாக்டர் ஓய்வுக்காக ஒரு இடத்திற்கு செல்கிறார், அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. படம் பார்த்து நீங்கள் சொல்லுங்கள்.
நடிகராக இருப்பது மகிழ்ச்சியா ? இல்லை வேறு துறையில் விருப்பம் உள்ளதா? என்ற கேட்ட கேள்விக்கு
நடிகராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. திரைத்துறையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, கண்டிப்பாக இது தான் எனக்கு சந்தோசம்.
அர்ஜூன் தாஸ் நடித்த ரசவாதி திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'இங்க நான் தான் கிங்கு'. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ளது.
- 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும்.
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், 'இங்க நான் தான் கிங்கு'. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில் நடிகர் சந்தானம் பேசியதாவது…
'இங்க நான் தான் கிங்கு' படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார்.
அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றேன். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக இப்படத்தை எடுத்துள்ளார்.
சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார்.
தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார்.
என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். 'கட்டா குஸ்தி' படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள்.
90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி. என கூறினார்
தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. இதற்கு முன் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை போலவே இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது படத்தின் ப்ரொமோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் திமுக திமுக துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை எனவும், இறந்தவர்களின் பெயர்களில் ஓட்டுப்போட திட்டமிடப்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று டிடிவி தினகரனிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் கூறி, தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் இந்த தகவலை அமைச்சர்கள் தங்கமணி, முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனடியாக மறுத்தனர். அ.தி.மு.க.வுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டதாகவும், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் என்னை சந்தித்தது உண்மைதான் என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், செப்டம்பர் இறுதி வாரத்தில் டிடிவி தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு, தம்மை முதல்வராக ஆக்குவதற்கு ஓபிஎஸ் கூறியதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிப்பதற்காக இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 4 நாட்களுக்கு முன்பு, பாஜகவுடன் தாம் இணைந்து தமிழக அரசை கவிழ்க்க முயற்சித்ததாக தினகரன் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து தினகரன் என் மீது அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.
மேலும், ஆர்.கே நகரில் பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதுபோல், கட்சியில் தினகரனின் பொய் பிரச்சாரம் பலிக்காது என தெரிவித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் தினகரன் இவ்வாறு செய்துவருவாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷியாவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடந்து வருகிறது. அந்த வரிசையில் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபரும் சந்தித்து நட்பை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து இன்று இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச அமைப்புகளான சார்க் மாநாடு, பிரிக்ஸ் மாநாடு போன்றவற்றின் மூலம் ரஷ்யாவும், இந்தியாவும் சமபலன்களை பெற்றுள்ளதாகவும், இவற்றின் மூலம் இருநாடுகளும் ஒற்றுமையை பேண முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கு பொருளாதார கூட்டத்துக்கு முக்கிய விருந்தினராக பிரதமர் மோடியை மீண்டும் அழைப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு ரஷ்யா உதவி செய்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதி அளித்துள்ளார். #VladimirPutin #PMModi #PutininIndia
திருவாரூர் மாவட்டத்தில் முக அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவுடன் தம்மை இணைத்து பேசுவது வெறும் வதந்தியே என்றும், கருணாநிதியின் கொள்கைகளை முழுமையாக தாம் கடைபிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மத்திய மாநில அரசுகளை விமர்சித்த முக அழகிரி, தற்போது அரசியல் எங்கு நடக்கிறது? போராட்டங்கள் மட்டுமே நடக்கிறது என தெரிவித்துள்ளார். திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாகவும், தாம் தேர்தலில் போட்டியிட்டால் அனைவரும் ஆதரவு தருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தனிக்கட்சி தொடங்குவீர்களா? என்ற நிரூபர்களின் கேள்விக்கு, தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். #MKAlagiri
தஞ்சையில் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் புதிய சாலைகள் அமைப்பதற்காக விரைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன என்றும், தமிழகத்தில் புதிய சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் கூறினார்.
மேலும், கிழக்கு கடற்கரை பகுதியில் அமையும் ரெயில்பாதை திட்டத்தினை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அப்போது அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பள்ளி மாணவர்கள் வகுப்புகளை கட் அடிப்பது போன்று சட்டசபையை கட் அடிக்கும் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், கர்நாடகா சென்று அவர்களின் கூட்டணி ஆட்சியில் இருப்பவர்களிடம் குறைந்தபட்சம் உறுப்பினர் பட்டியலை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், இதுகுறித்து ஸ்டாலினிடமோ, காங்கிரஸ் கட்சியினரிடமோ யாரும் எந்த கேள்வியும் ஏன் எழுப்பவில்லை? எனவும் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். #radhakrishnan #stalin
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்