என் மலர்
நீங்கள் தேடியது "Prithvi Shaw"
- முதலில் பேட்டிங் செய்த விதர்பா 221 ரன்கள் குவித்தது.
- மும்பை 19.2 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.
இந்தியாவில் சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் விதர்பா- மும்பை அணிகள் மோதின. முதலில் விளையாடிய விதர்வா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.
பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ரகானே ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரித்வி ஷா 26 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார். ரகானே 45 பந்தில் 84 ரன்கள் விளாசினார்.
ஷிபம் டுபே 22 பந்தில் 37 ரன்களும், சூரயான்ஷ் ஷெட்ஜ் 12 பந்தில் 36 ரன்களும் அடிக்க மும்பை அணி 19.2 ஓவரில் 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
222 இலக்கை எட்டியதன் மூலம் டி20 நாக்அவுட் போட்டியில் அதிக ரன்களை துரத்திப்பிடித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக 2010-ல் நடைபெற்ற பைசல் பேங்க் டி20 கோப்பை (Faysal Bank T20 Cup 2010) கோப்பையில் கராச்சி அணி ராவல்பிண்டி அணிக்கெதிராக 210 ரன்களை சேஸிங் செய்தது.
- விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டது.
- இந்த அணியில் இந்திய வீரர் ரகானே, ப்ரித்விஷா ஆகியோர் இடம் பெறவில்லை.
விஜய் ஹசாரே கோப்பை வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 37 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த தொடருக்கான தமிழக அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 3 போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர் ரகானே, ப்ரித்விஷா ஆகியோர் இடம் பெறவில்லை.
இந்நிலையில் அணியில் இடம் கிடைக்காதது குறித்து பிரித்வி ஷா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், நான் இன்னும் என்ன எல்லாம் பார்க்க வேண்டும். நீங்களே சொல்லுங்கள் கடவுளே. 65 போட்டிகளில் விளையாடி 3399 ரன்கள் எடுத்துள்ளேன். ஸ்ட்ரைக் ரேட் 126, சராசரி 55.7 வைத்துள்ளேன். இது போதுமானதாக இல்லை. ஆனாலும் என் மேல் நம்பிக்கையை வைத்திருப்பேன். மக்கள் இன்னும் என்னை நம்புவார்கள் என்று நம்புகிறேன். காரணம் நான் நிச்சயமாக திரும்பி வருவேன்.. ஓம் சாய் ராம் என கூறியுள்ளார்.
- பிரித்வி ஷா வேண்டுமென்றே ஒன்றும் மும்பை அணியிலிருந்து நீக்கப்படவில்லை.
- அவருடைய செயல்கள்தான் அவரது நீக்கத்திற்கான மிக முக்கிய காரணம்.
மும்பை:
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியிலிருந்தும் உடல் தகுதி மற்றும் ஒழுங்கீனம் காரணமாக கழற்றிவிடப்பட்டார். இருப்பினும் அதற்கு அடுத்து நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அந்த தொடரில் அவரது செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. இதனால் எதிர்வரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்து அவர் கழற்றி விடப்பட்டுள்ளார்.
மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு "சொல்லு கடவுளே....நான் இன்னும் என்ன செய்ய வேண்டும். 65 இன்னிங்சில் 3,399 ரன்கள் (உள்நாட்டு ஒரு நாள் போட்டிகளில்) சராசரி 55.7 மற்றும் ஸ்டிரைக் ரேட் 126 வைத்துள்ளேன். ஆனாலும் நான் நல்ல ஆட்டக்காரன் இல்லையா?" என பிரித்வி ஷா தனது ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் பிரித்வி ஷா மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான உண்மையாக காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரித்வி ஷா வேண்டுமென்றே ஒன்றும் மும்பை அணியிலிருந்து நீக்கப்படவில்லை. அவருடைய செயல்கள்தான் அவரது நீக்கத்திற்கான மிக முக்கிய காரணம். பீல்டிங் செய்யும்போது பந்து அவருக்கு அருகில் வந்தால் கூட அதை பிடிப்பதற்கான முயற்சியை அவர் செய்வதில்லை. பேட்டிங்கிலும் பந்தை எட்டி அடிப்பதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்.
அவருடைய உடற்தகுதி, ஒழுக்கமின்மை, அணுகுமுறை எல்லாமே மிகவும் குறைவாக இருக்கிறது. இதுபோன்ற அலட்சியமான வீரரை அணியில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே நீக்கினோம். சமூக வலைதள பதிவுகள் மூலமோ, தேர்வாளர்களை திசை திருப்புவதன் மூலமோ மீண்டும் அவரை அணியில் இணைத்து விட முடியாது. ஆட்டத்தில் முன்னேற்றத்தை கொண்டுவர அவர் முயற்சி செய்ய வேண்டும் அதுதான் அவருக்கு நல்லது.
சையத் முஷ்டாக் அலி தொடரின்போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்பாடு செய்த மீட்டிங்குகளில் அவர் அமரவில்லை. அதேபோன்று நாங்கள் அவருக்காக ஏற்பாடு செய்த உடற்தகுதி மீட்டிங்குகளிலும் அவர் அமரவில்லை. இப்படி தொடர்ச்சியாக அனைவரையும் உதாசீனப்படுத்திவரும் அவரை இனி மாநில அணிக்காக விளையாட வைக்கக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தோம்" என்று கூறினார்.
ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி ஐதராபாத்தை வீழ்த்தி நாக்அவுட்டில் முதல்முறையாக வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினத்தில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது.
கப்தில் 19 பந்தில் 36 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), மணிஷ் பாண்டே 30 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 28 ரன்னும், விஜய் சங்கர் 11 பந்தில் 25 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
கீமா பால் 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், போல்ட், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 163 ரன் இலக்குடன் டெல்லி அணி ஆடியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 1 பந்து எஞ்சி இருந்த நிலையில் வெற்றி வெற்றது. அந்த அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரித்வி ஷா 38 பந்தில் 56 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ரிஷப் பந்த் 21 பந்தில் 49 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ரஷீத் கான் தலா 2விக்கெட்டும், தீபக் ஹூடா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பாஷில் தம்பி வீசிய 18-வது ஓவரில் ரிஷப் பந்த் 2 பவுண்டரி, 2 சிக்சர் அடித்து ஆட்டத்தை மாற்றி டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார்.
ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணி முதன் முறையாக நாக்அவுட்டில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் ஷிரேயாஷ் அய்யர் கூறியதாவது:-
கடைசி ஓவரில் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் உட்கார்ந்து அந்த ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அணியில் உள்ள ஒவ்வொருவரது முகத்திலும் மகிழ்ச்சியை கண்டேன். இதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வெற்றி பெற்ற பிறகு கொண்டாட்டம் தேவைதான்.
கப்திலின் அதிரடியான ஆட்டத்தால் ஐதராபாத் அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுக்கும் என்று கருதினோம். ஆனால் அமித் மிஸ்ரா பிரமாதமாக பந்து வீசினார். அனைவரது பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.

குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை அணி எதிர்கொள்கிறோம். அந்த அணியை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, ‘‘நாங்கள் கடினமான ஸ்கோரைதான் டெல்லி அணிக்கு நிர்ணயித்தோம். 162 ரன் என்பது வெற்றி பெறக்கூடிய இலக்குதான்.
ஒரு கட்டத்தில் நாங்கள் வலிமையான நிலையில் இருந்தோம். வார்னரும், பேர்ஸ்டோவும் இல்லாதது அணிக்கு பாதிப்பே. கடைசி நேரத்தில் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது என்றார். #ShreyasIyer #DCvsSRH
பயிற்சி கிரிக்கெட்டில் பீல்டிங்கின் போது இடது கணுக்காலில் காயமடைந்த இந்திய இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா முதலாவது டெஸ்டில் விளையாடவில்லை.
அவரது காயத்தன்மை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், ‘பிரித்வி ஷா காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். இப்போது நடக்கிறார். இந்த வார இறுதிக்குள் ஓட ஆரம்பித்து விட்டால், அது நல்ல அறிகுறியாக இருக்கும்.
2-வது டெஸ்டுக்கு முன்பாக அவரது காயம் எந்த அளவுக்கு குணமடைந்துள்ளது என்பதை பார்த்து அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வோம்’ என்றார். 19 வயதான பிரித்வி ஷா மெல்போர்னில் 26-ந்தேதி தொடங்கும் 3-வது டெஸ்டில் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது. #PrithviShaw #AUSvIND
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவனுடன், இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.
இந்த பயிற்சி ஆட்டம் நேற்றுமுன்தினத்தில் இருந்து சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா டீப் மிட்விக்கெட் திசையில் பவுண்டரி லைன் அருகில் ஜம்ப் செய்து கேட்ச் பிடிக்க துள்ளிய அவர், காலை கீழே வைக்கும்போது தடுமாறினார். இதனால் கணுக்காலில் காயம் அடைந்து வலியால் துடித்தார்.

இதையடுத்து, உடனடியாக மருத்துவ குழுவினரின் உதவியுடன் மைதானத்தை விட்டு பிரித்வி ஷா வெளியேறினார். அவரது காயம் குறித்து அறிய ஸ்கேன் செய்யப்பட இருக்கிறது. காயத்தில் இருந்து விரைவாக மீண்டுவதற்கான சிகிச்சையை மருத்துக்குழு மேற்கொண்டு வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவர், முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்து அசத்தினார். இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவருக்கு, ஆஸ்திரேலியாவில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சிட்னியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவருடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுக்க விரும்பினார். அவரும் சளைக்காமல் ரசிகர்களுக்கு போஸ் கொடுத்தார். பயிற்சி போட்டியின் நேற்றைய ஆட்டம் மழையா் தடைபட்டது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பிரித்வி ஷா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
Young @PrithviShaw already managing to grab eyeballs here in Australia. Fans throng at The SCG for a selfie and autograph from the rising Star of #TeamIndia 🌟😎👌🏻🤙🏻 pic.twitter.com/EvYwGgEMTU
— BCCI (@BCCI) November 29, 2018
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய லெவனுடன் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.
அதன்படி நேற்று சிட்னியில் தொடங்க இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய லெவன் ‘டாஸ்’ வென்று இந்திய அணியை முதலில் விளையாட அழைத்தது. பிரித்வி ஷாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் 3 ரன்னிலேயே வெளியேறினார்.
அடுத்து புஜாரா களம் வந்தார். இருவரும் ஆஸ்திரேலிய லெவன் பந்து வீச்சை விளாசி தள்ளினர். பிரித்வி ஷா 69 பந்தில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.
கேப்டன் விராட்கோலி 4-வது வீரராக ஆடினார். அவரும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் எடுத்தனர்.
புஜாரா 89 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி), விராட்கோலி 87 பந்தில் 64 ரன்னும் (7பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி 204 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரகானே- விகாரி ஜோடியும் சிறப்பாக ஆடியது.
ரகானே 56 ரன் எடுத்து ரிட்டயர்ட் அவுட்டானர். விகாரி 53 ரன்னும், ரோகித்சர்மா 40 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி 92 ஓவரில் 358 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலிய லெவன் முதல் இன்னிங்சை விளையாடியது. #AUSvIND #ViratKohli
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஆடும் லெவன் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘பிரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் எந்தவொரு அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தாலும் ரன்கள் குவிக்கலாம். அதன்மூலம் அணி வெற்றியை ருசிக்கும்.
ரோகித் சர்மா கட்டாயம் ஆடும் லெவன் அணியில் இடம்பெற வேண்டும். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் அடித்தவர் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாமல் வெளியே இருக்கக்கூடாது. இந்த கருத்தை நான் நீண்ட காலமாக தெரிவித்து வருகிறேன்’’ என்றார்.
இந்தியாவின் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார். அப்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. வருகின்ற நவம்பர் 1-ந்தேதி ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரித்வி ஷாவிற்கு இடம் கிடைக்கவில்லை. காயம் குணமடைந்து உடற்தகுதி பெற்றால் ரஞ்சி டிராபியில் விளையாடுவார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பிரித்வி ஷா ரஞ்சி டிராபியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் பிரித்வி ஷாவிற்கு இடமுண்டு. இந்நிலையில் இந்த காயம் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), 2. தவால் குல்கர்னி (துணைக் கேப்டன்), 3. சித்தேஷ் லாட், 4. ஜெய் பிஸ்ட்டா, 5. சுர்ய குமார் யாதவ், 6. குமார் யாதவ், 7. அஷாய் சர்தேசாய், 8. ஆதித்யா டரே, 9. ஏக்நாத் கெர்கார், 10. ஷவம் டுபே, 11. ஆகாஷ் பர்கர், 12. கர்ஷ் கோதாரி, 13. ஷாம்ஸ் முலானி, 14. அகில் ஹெர்வாத்கர், 15. துஷ்கர் தேஸ்பாண்டே, 16. ராய்ஸ்டன் தியாஸ்.
மற்றொரு இளம் வீரரான பிரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். தொடக்க வீரரான பிரித்வி ஷா ராஜ்கோட் டெஸ்டில் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஐதராபாத் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் விளாசினார். இரண்டு டெஸ்டிலும் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ஐதராபாத் டெஸ்டில் வேகப்பந்தில் தனி ஒருவராக நின்று அபாரமாக பந்து வீசி 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். இந்த மூன்று பேரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ராஜ்கோட் டெஸ்டில் சதம் அடித்த பிரித்வி ஷா 73-வது இடத்தை பிடித்திருந்தார். ஐதராபாத் டெஸ்டில் (70, 33 நாட்அவுட்) சிறப்பான விளையாடியதன் மூலம் 60-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் ரிஷப் பந்த் 111-வது இடத்தில் இருந்தார். தற்போது இரண்டு இன்னிங்சிலும் தலா 92 ரன்கள் அடிக்க தற்போது 62-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐதராபாத் டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய உமேஷ் யாதவ் 29-வது இடத்தில் இருந்து 25-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பும்ரா, முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முதல் 25 இடத்திற்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுடன் முடிந்த 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இளம் வீரரான பிரித்வி ஷா டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 154 பந்தில் 19 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 53 பந்தில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காலும் இருந்தார். மூன்று இன்னிங்சில் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
அறிமுக தொடரிலேயே ஆட்ட நாயகன் (முதல் டெஸ்ட்) மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்ற பிரித்வி ஷாவை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார்.

பிரித்வி ஷா குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘பிரித்வி ஷா கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர். அவர் மும்பை அணிக்காக 8 வயதில் இருந்தே விளையாடி கொண்டிருக்கிறார்.

அவர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். அவர் சில நேரம் சச்சினைப் போன்றும், சில நேரம் சேவாக் போன்று, ஆடுகளத்தில் விளையாடும்போது சில நேரத்தில் பிரையன் லாரா போன்றும் விளையாடுகிறார்.
தொழில் தர்மத்தை உணர்ந்து தலைநிமிர்ந்து நின்றால் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.’’ என்றார்.