search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private Bar"

    • பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் 10-க்கும் மேற்பட்ட மதுக்கடை கள் இயங்கி வருகிறது.
    • மது பிரியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு செல்கின்றனர்

    புதுச்சேரி:

    பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் 10-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகிறது.

    இங்கு தினமும் புதுவை மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த மது பிரியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் மது அருந்திவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சோரியாங்குப்பம் தனியார் மதுக்கடையில் உள்ள கேண்டீன் கீற்றுக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    கீற்றுக் கொட்டகை எரிவதை கண்ட மதுக்கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பாகூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் காற்று பலமாக அடித்ததால் கீற்றுக்கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. சம்பவ இடத்திற்கு வந்த பாகூர் போலீசார் தீ விபத்து குறித்து மதுக்கடை ஊழியர்க ளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற பல்வேறு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யவும் திட்டமிட்டு ள்ளனர்.

    நள்ளிரவில் மதுக்கடையில் உள்ள கீற்றுக்கொட்டகை திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • உரிம நிபந்தனைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது.
    • இதனையடுத்து கலால் துறை அதிகாரிகள் தனியார் மது பாருக்கு சீல் வைத்தனர்.

    நத்தம்:

    நத்தம் கோவில்பட்டியில் தனியார் கிளப்பில் மதுபான பார் உள்ளது. அது தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி சட்டத்தின் கீழ் எப்.எல்.2 உரிமம் பெற்று செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு உரிம நிபந்தனைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில் தனியார் மதுபாரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து கலால்துறை ஆணையாளர் விஜயா, கலால் தாசில்தார் நவநீதகிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மதுபான பாரை பூட்டி சீல் வைத்தனர்.

    • லாட்ஜ்களில் தங்குவதை விட செலவு குறைவு என்பதால் தற்போது இதுபோன்ற ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
    • வீடுகளில் தனியார் மது பார் நடத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் வழங்கி லைசென்ஸ் பெற்று கொள்ள வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்து உள்ளது.

    டேராடூன்:

    இந்தியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் அங்கு லாட்ஜில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.

    தற்போது சுற்றுலா தலங்களில் லாட்ஜ்களுக்கு மாற்றாக ஹோம் ஸ்டே தங்கும் வசதிகள் அதிகரித்து வருகிறது. இது சுற்றுலா தலங்களில் வசிப்போர் தங்கள் வீடுகளில் சுற்றுலா பயணிகள் தங்க ஒன்று அல்லது 2 அறைகளை ஒதுக்கி கொடுத்து அங்கே அவர்கள் விரும்பும் நாட்கள் வரை தங்கி செல்ல அனுமதிப்பார்கள்.

    இதற்காக விருந்தினர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையையும் பெற்று கொள்வார்கள். இது லாட்ஜ்களில் தங்குவதை விட செலவு குறைவு என்பதால் தற்போது இதுபோன்ற ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே தனிநபர்கள் பார் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    வீடுகளில் நடத்தப்படும் பார்களில் 60 லிட்டர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பானங்கள் வைத்து கொள்ளலாம். 9 லிட்டர் அளவுக்கு பீர் பாட்டில் வைத்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வீடுகளில் தனியார் மது பார் நடத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் வழங்கி லைசென்ஸ் பெற்று கொள்ள வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்து உள்ளது. இந்த லைசென்ஸ் பெறுவோர் வருமான வரி கட்டுவோராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    மேலும் மாநில கலால் துறைக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும் அறிவித்து உள்ளது.

    இது தவிர வீடுகளில் நடைபெறும் தனியார் மதுபார்களில் 21 வயதுக்கு குறைந்தோருக்கு எக்காரணம் கொண்டும் மதுபானம் வழங்க கூடாது. மிலிட்ரி மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. ஒரு பாக்ஸ் ஒயின் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது.

    மலைப்பாங்கான இந்த மாநிலத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கவே இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    ×