என் மலர்
நீங்கள் தேடியது "private investigation"
- வாலிபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
- எதற்காக கொலை செய்யப்பட்டார்? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர்:
மானாமதுரையில் இருந்து விருதுநகர் மாவட் டம் புலியூரான் கிராமத்திற்கு இடையே செல்லும் ரெயில் தண்டவாள பகுதியில் தொட்டியங்குளம் என்ற இடத்தில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்தவரின் அருகில் சென்று பார்த்தபோது, அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. மாறாக அவரது உடலில் முகம் மற்றும் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன.
இதையடுத்து ரெயில்வே போலீசார் விருதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் மற்றும் போலீசார் வந்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். பிணமாக கிடந்த வாலிபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
இறந்து கிடந்தவர் சிவப்பு நிற சட்டை, பனியன் மற்றும் கைலி அணிந்திருந்தார். சம்பவம் தொடர்பாக புலி யூரான் கிராம நிர்வாக அலுவலர் பவானிதேவி விசாரணை நடத்தி புகார் அளித்தார். அதன்பேரில் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையுண்டவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார்? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது22 ). இவர் சொந்த வேலை காரணமாக விழுப்புரம் சென்று விட்டு கெடிலம் எஸ்.எஸ்.வி பள்ளி வளாகம் வளைவில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தகவல றிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தனி பிரிவு காவலர் மனோகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டு விபத்து ஏற்படுத்த வாகனத்தை தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறார்கள்.