என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Privates"
- ராமு நேற்று காலை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
- கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
கடலூர்:
பண்ருட்டி அருகே தி.மு.க.பிரமுகர் தந்தை கொலை யில் பஞ்சாயத்து தலைவியின் கணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்புரம் சென்னை சாலை யைசேர்ந்தவர் கவர்னர் என்ற ராமு (69).இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடைவைத்திருந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் ஆகிய 3 மகன்மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடன் இவரது மகன் புருஷோத்தமன், மருமகள் ஆகியோர் வசித்து வந்தனர். புருஷோத்தமன் தி.மு.க ஒன்றிய பிரதிநிதியாக இருந்து வருகிறார் .வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு படுத்திருந்த ராமு நேற்று காலை இவரது வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது பற்றி பண்ருட்டிபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன்,காடாம்புலியூர் ராஜ தாமரை பாண்டியன், நெல்லிக்குப்பம் சீனிவாசன், புதுப்பேட்டை நந்தகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலையான ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எல்.என்.புரம் பஞ்சாயத்து தலைவியின் கணவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். நேற்று இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
ராமு வீடு குட்டை புறம் போக்கு நிலத்தில் உள்ளது. எனவே ராமுவிற்கும் பஞ்சாயத்து தலைவரின் கணவருக்கும் இது தொடர்பாக முன் விரோதம் இருந்து அதன் காரணமாக ராமு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர். கொலை நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அப் பகுதியில் உள்ள பெரும்பாலான கண்காணிப்பு கேமிராக்கள் செயல்படாமல் உள்ளது தெரிய வந்தது. இதனால் போலீசார் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
- கத்திக்குத்து காயங்களுடன் பாலசுப்பிரமணியனின் உடல் கிடந்தது தெரியவந்தது.
- பாலசுப்பிரமணியனை கொன்ற கொலையாளிகள் யாரென்று தெரியவில்லை.
திருப்பூர்:
திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ பவா்காா்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 31). இவா் ரியல் எஸ்டேட் மற்றும் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். திருமணமான இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய், தந்தையருடன் தனியாக வசித்து வந்தாா்.
இந்தநிலையில் பாலசுப்பிரமணியனின் பெற்றோா் பழனி அருகே உள்ள கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். பின்னா் புதன்கிழமை காலை இருவரும் வீடு திரும்பினர்.அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததுடன், ரத்தக்கறை இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனர்.
மேலும் கத்திக்குத்து காயங்களுடன் பாலசுப்பிரமணியனின் உடல் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பின்னா் பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
பாலசுப்பிரமணியனை கொன்ற கொலையாளிகள் யாரென்று தெரியவில்லை. தொழில் போட்டி காரணமாக யாரேனும் பாலசுப்பிரமணியனை கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் கொலையாளிகளை பிடிக்க ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில்2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பாலசுப்பிரமணியன் செல்போனை கைப்பற்றி அவருடன் பேசியவர்கள் யார் யார், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக யார் யாருடன் பழக்கம் இருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்