என் மலர்
நீங்கள் தேடியது "Prizes for Students"
- நிகழ்ச்சியில் சேதுக்குவாய்த்தான் ஊராட்சி தலைவர் சுதா சீனிவாசன் தலைமை தாங்கினார்.
- அறக்கட்டளையின் நிறுவன தலைவர் தங்கவேல்பூபதி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
ஆத்தூர்:
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சேதுக்குவாய்த்தான் ஊராட்சியும், ராஜபதி லெட்சுமணபெருமாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் சேதுக்குவாய்த்தான் ஊராட்சி தலைவர் சுதா சீனிவாசன் தலைமை தாங்கினார். சதாம் உசேன் வரவேற்றார். குருகாட்டூர் ஊராட்சிமன்ற தலைவரும், ஊராட்சி ஒன்றியசெயலருமான ராணி ராஜ்குமார் தொகுப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் தங்கவேல்பூபதி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மேலாத்தூர் ஊராட்சி தலைவரும், ஆழ்வைகிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சதிஷ்குமார் மற்றும் ராஜபதி ஊராட்சி தலைவர் சவுந்திரராஜன், சேதுக்குவாய்த்தான் முன்னாள் ஊராட்சிதலைவர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மோகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
விழாவில் அனைத்து வாா்டு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் குழுவினர், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வக்கீல் சீனிவாசன் நன்றி கூறினார்.