search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Procession for a distance of 1 km"

    • டிராக்டர்களுடன் பேரணி
    • 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொடர்ந்து 10-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கீழ்பென்னாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரில் கடந்த - 5-ந்தேதி முதல் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக விவசாயிகள் 250-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் 9-வது நாளான நேற்று 250-க்கும் மேற்பட்டவிவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 35-க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் வரை சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், செயலாளர் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன் என்கி்ற கோபி, கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன், அமைப்பு செயலாளர் நடராஜனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

    இந்த போராட்டத்தில் , இயற்கை வேளாண்மை விவசாயிகள் கீழ்பென்னாத்தூர் கோதண்டராமன், சிறுநாத்தூர் கிருஷ்ணன், சமூக ஆர்வலர்கள் ராஜாதோப்பு பலராமன், கனகராஜ், கார்த்திகேயன், சகாதேவன், கோவிந்தன், அர்ச்சுனன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கிருஷ்ணராஜ் (எ) குமார், அண்ணாநகர் சண்முகம், சுரேஷ், இந்திராநகர் சண்முகம், கணியாம்பூண்டி வரதராஜன், மகளிர் அணி நிர்வாகிகள், முன்னோடி விவசாயிகள் கீக்களூர் சுந்தரமூர்த்தி, சிறுநாத்தூர் பரந்தாமன், உதயகுமார், சுப்பிரமணியன், காமராஜ்நகர் சதாசிவம், அசோக்குமார், நாரியமங்கலம் க.சா.முருகன் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ×