search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "progress track"

    • கால்பந்து, கிரிக்கெட் பேட், பந்து, ஷூக்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • உடல் மனம் இரண்டும் நேர்கோட்டில் சென்று, மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.

    கடலூர்:

    விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வருவது வழக்கம். இங்கு கால்பந்து, கிரிக்கெட், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர்.இந்நிலையில் இன்று காலை உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக அரசு பள்ளி மைதானத்திற்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் வந்தார். அப்போது கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சியில் ஈடுபட்ட 20-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களிடையே பேசினார்.

    அவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், மாணவ ர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய கால்பந்து, கிரிக்கெட் பேட், பந்து, ஷூக்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இது பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் கூறும்போது, விளை யாட்டில் ஈடுபடும்போது உடல் மனம் இரண்டும் நேர்கோட்டில் சென்று, மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். அதனால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கினேன் என தெரிவித்தார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தமிழ்நாடு போலீஸ் துறை ஆக்கப்பூர்வமான உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்தார். அப்போது தனிப்பிரிவு போலீசார் பாலமுருகன், சீனு, ராமு, ஜனா, மணிகண்டன் உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.

    ×