என் மலர்
நீங்கள் தேடியது "Prohibition of alcohol"
- தமிழகத்தில் அண்மைக் காலமாக கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
- திமுக தோ்தல் அறிக்கையின்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
திருப்பூர் :
இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பாலாஜி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் அண்மைக் காலமாக கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அண்மையில் கள்ளச்சாராயம் குடித்த 23 போ் உயிரிழந்துள்ளனா். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளிலும் போலி மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. போலி மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு காவல் துறையினா் 'சீல்' வைத்து வருகின்றனா். திமுக தோ்தல் அறிக்கையின்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்யவும், தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் கள் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரையில் விவசாயிகளிடம் இருந்து கள்ளை தமிழக அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.
- நவகிரக கோட்டை சிவன் ஆலயத்தில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை, 108 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
- மதுபானத்தால் இளைஞா்கள் குடித்து தங்களது வாழ வேண்டிய வாழ்க்கையை தொலைத்து கொண்டு உள்ளனா்.
பல்லடம் :
பல்லடம் சித்தம்பலம் கிராமத்தில் சிவபெருமானை மையமாக கொண்டு 27 நட்சத்திரங்கள், 9 அதி தேவதைகள், 9 நவகிரகங்கள்,108 சிவலிங்கங்கள், நவகிரக கணபதி உள்ளடங்கிய நவகிரக கோட்டை சிவன் ஆலயத்தில் மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை, 108 சங்காபிஷேகம், சோபகிருது ஆண்டு விழா, வருண மகா மந்திர வேள்வி, சிவநாம பஜனை ஆகியவை நடைபெற்றன. இவ்விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் அருளுரை நிகழ்த்தினாா்.
அதன் பின்னா் அவா் நிருபர்களிடம் கூறுகையில்-:தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்த மாநிலமாக நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் மதுபானத்தால் இளைஞா்கள் குடித்து தங்களது வாழ வேண்டிய வாழ்க்கையை தொலைத்து கொண்டு உள்ளனா். எதிா்கால தலைமுறையை கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். திராவிட பேரரசாக திகழும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நினைத்தால் இதனையும் செயல்படுத்தி காட்ட முடியும் என்றாா்.