என் மலர்
நீங்கள் தேடியது "Promenade"
- ஆதி ரத்தினேசுவரர் கோவில் சுவாமிகள் வீதி உலா நடந்தது.
- 18-ந்தேதி தேரோட்டமும் 19-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் உள்ள ராமநாதபுர சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேக வல்லி அம்மன் சமேத ஸ்ரீ ஆதிரத்தினேசுவரர் கோவில் பாண்டி 14-சிவதலங்களில் 8-வது தலமாக கருதப்படுகிறது.
வருண பகவானின் மகன் வாருணி என்பவர் துர்வாச முனிவரால் சாபத்துக்கு ள்ளாகி யானையின் உடலும் ஆட்டின் தலையும் பெற்று, இங்கு இறைவனை பூஜித்த பின் அந்த சாபம் விலகிய தால் ஆடானை என திரு சேர்ந்து திருவாடானை என பெயர் பெற்றது.
பாடல் பெற்ற தலமான இந்த ஊருக்கு பாரிஜாத வனம், வன்னி வனம், குருக்கத்தி வனம், வில்வ வனம், முக்திபுரம், ஆதிரத்தினேசுவரம், ஆடானை, மார்க்கண்டேய புரம், அகத்தீஸ்வரம், பதுமபுரம், கோமத்தீஸ்வரம், விஜயேச்சுரம் என 12 பெயர்கள் உள்ளது.
இங்கு வைகாசி விசாகத் திருவிழா கடந்த வைகாசி 10-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ந் திருவிழாவான இன்று ராமநாதபுர மன்னரின் மண்டப் படியாக வெள்ளி ரிஷப வாகனமும், திருஞான சம்பந்தரின் திருமுலைப் பால் உற்சவமும் தபசு மண்டபத்தில் நடைபெறு கிறது.
இதையொட்டி இன்று விநாயகர் எலி வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதிஉலா வந்தனர். வைகாசி 18-ந்தேதி தேரோட்டமும் 19-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.