என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Promotional program"

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் மாணவர்களுக்கான ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடநத்து.
    • இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான ஊக்கமூட்டும் நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக சென்னை ''காட் இந்தியா டிரஸ்ட்'' முரளிஜி சுவாமி கலந்து கொண்டு பேசினார்.

    முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீராம் வரவேற்றார். சுவாமியின் சீடர்களான லலிதா, பவானி, சாந்தி, சந்திரபிரகாஷ் ஆகியோரும் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    ×