search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "proposal"

    • கடலூர் அரசு பாலிடெக்னிக்- மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்துகின்றன.
    • ஜனவரி 2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் வட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 4-வது வட்ட மாநாடு தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை வட்டத்துணைத்தலைவர்கிருஷ்ணமூர்த்தி ஏற்றினார். மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்ட துணைத்தலைவர்ராமதாஸ் வரவேற்புரை ஆற்றினார். வட்ட செயலாள ர்கல்யாணசுந்தரம் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.

    மாநாட்டை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் புருஷோத்தமன் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் அறிக்கையின் மீது விவாதத்தை வாழ்த்திஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் குருமூர்த்தி த ேபசினார். ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர்நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் காசிநாதன், குந்தைவேலு, மாவட்ட துணைத்தலைவர்கள் கருணாகரன், ஆதவன், சிவப்பிரகாசம், மாவட்ட இணைச்செயலாளர்கள் பாலு, பச்சையப்பன், வி.சுந்தர்ராஜன், வேளாண்மை துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர்.ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், ஆகியோர் பேசினார்கள்.

    மாநாட்டில் தீர்மானங்களை முன்மொழிந்து வட்ட துணைத்தலைவர்கள்பஷீர், சந்திரசேகரன். ரவிச்சந்திரன். வட்ட இணைச்செயலாளர் ஜோதி ஆகியோர் பேசினார்கள்.

    மாநாட்டில் புதிய வட்டக்கிளை நிர்வாகிகளாக தலைவராக பத்மநாபன். செயலாளராக ராமதாஸ். பொருளாளராக குலசேகர மணவாள ராமானுஜம், துணைத்தலைவர்களாக கிருஷ்ணமூர்த்தி, பஷீர், சந்திரசேகரன்ர, விச்சந்திரன், ராமசாமி. இணைச்செயலாளர்களாக ஜோதி, விஸ்வலிங்கம், முருகேசன்,அரிக்குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில செயலாளர்மனோகரன் பேசினார். வட்ட இணைச்செயலாளர்ரா மசாமி நன்றி கூறினார்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-ஜனவரி 2022 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்க வேண்டும்.

    கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைத்திட வேண்டும்.கடலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுவாக நகராட்சி கூட்டம் என்றாலே கூச்சல், குழப்பம் நிலவும். ஆனால் இந்த கூட்டத்தில் ஹாலிவுட் பட பாணியில் ஒரு திருமணமே நடந்து விட்டது. #CharlotteCouncil #MarriageProposal
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லோட் நகரில், நகராட்சி கூட்டம் நடந்தது. பொதுவாக நகராட்சி கூட்டம் என்றாலே கூச்சல், குழப்பம் நிலவும். ஆனால் இந்த கூட்டத்தில் ஹாலிவுட் பட பாணியில் ஒரு திருமணமே நடந்து விட்டது.

    இந்த நகராட்சி கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்த கவுன்சிலர் வைபவ் பஜாஜ், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கவுன்சிலர் டிம்பிள் ஆஜ்மெராவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

    அதை ஆஜ்மெராவும் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

    அதைத் தொடர்ந்து நகராட்சி கூட்டத்திலேயே சபையின் மையப்பகுதிக்கு வைபவ் பஜாஜ் வந்து முழங்காலில் நின்றவாறு ஆஜ்மெராவுக்கு மோதிரம் கொடுத்து திருமணம் செய்தார். திருமணம் முடித்த சூட்டோடு சூடாக அந்த தம்பதியர் அன்பு முத்தம் பரிமாறிக்கொண்டனர். சக கவுன்சிலர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுபற்றி டிம்பிள் ஆஜ்மெரா டுவிட்டரில் வேடிக்கையுடன், “சக கவுன்சிலர்களே, இந்த தீர்மானத்தில் யாருக்கேனும் ஆட்சேபம் இருக்கிறதா? ஏனென்றால் இரு தரப்பு ஒப்பந்தத்தில்தான் வைபவ் பஜாஜ் நம்பிக்கை வைத்து உள்ளார். முக்கியமான விஷயம், குடும்பம் சார்ந்த, அன்பான, கருணை உள்ள ஒரு வாழ்க்கைத்துணைவர் எனக்கு கிடைத்ததற்காக நன்றி செலுத்துகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.   #CharlotteCouncil #MarriageProposal
    கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக ‘சமையல் மானியம்’ என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஆயோக் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. #NitiAayog #CookingSubsidy
    புதுடெல்லி:

    சமையல் கியாஸ் (எல்.பி.ஜி.) இணைப்பு பெற்றிருப்போருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் சந்தை விலைக்கு சிலிண்டர்களை வாங்கிவிட்டு அதற்கான மானியத்தை வங்கி கணக்கில் பெற்று வருகின்றனர். இந்த மானியம் எல்.பி.ஜி. சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு (ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்) மட்டும் வழங்கப்படுகிறது.

    ஆனால் பல நகரங்களில் மக்கள் குழாய்கள் மூலம் கியாஸ் இணைப்பு (பி.என்.ஜி.) பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதைப்போல பலர் இயற்கை எரிவாயு மூலமும் சமையல் செய்து வருகின்றனர். இவர்களும் கியாஸ் மானியம் பெறும் வகையில் இந்த திட்டத்தை மாற்றியமைக்க அரசு பரிந்துரைத்து உள்ளது.

    இதற்காக கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக ‘சமையல் மானியம்’ என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பரிந்துரையை செயல்படுத்த நிதி ஆயோக் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இது குறித்து அந்த அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், ‘எல்.பி.ஜி. என்பது தனிப்பட்ட தயாரிப்பு. இதற்கு மட்டுமின்றி சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து எரிபொருளுக்கும் மானியம் வழங்க வேண்டும்’ என்றார். இந்த மாற்றம் ‘தேசிய எரிபொருள் கொள்கை 2030’-ல் இணைக்கப்படும் என தெரிகிறது.  #NitiAayog #CookingSubsidy #Tamilnews 
    நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம் வருகிறது. இதற்கான மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. #DamSafefyBill #Cabinet
    புதுடெல்லி:

    நமது நாட்டில் 5 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இந்த அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனை பெற்று இந்த சட்டம் இயற்றப்படுகிறது.



    இதற்கான மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும். மேலும், அணைகளை பாதுகாப்பதுடன், அந்த அணைகளின் மூலம் அடைகிற பலன்களை பாதுகாக்கவும் உதவும்.

    இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * அனைத்து அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.

    * அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு அமைக்கப்படும்.

    * அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

    * மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

    * டெல்லியில் பிரகதி மைதானத்தின் 3.7 ஏக்கர் நிலத்தில் தனியார் ஓட்டல் கட்டுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலை மறுசீரமைப்பு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

    * வேளாண் கல்வி பிரிவு, ஐ.சி.ஏ.ஆர். (இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்) இன்ஸ்டிடியூட்டுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 225 கோடியே 46 லட்சத்தில் 3 ஆண்டு செயல்திட்டம் தீட்டி செயல்படுத்த அனுமதி தரப்பட்டது.

    * எச்.டி.எப்.சி. வங்கி தனது வர்த்தக வளர்ச்சிக்காக ரூ. 24 ஆயிரம் கோடி நேரடி அன்னிய முதலீடு பெறுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போது வங்கித்துறையில் 72.62 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி உள்ளது. எச்.டி.எப்.சி. வங்கியைப் பொறுத்தமட்டில் இந்த வரம்பை கடந்து 74 சதவீத அன்னிய நேரடி முதலீடு பெற வழி வகுக்கிறது.  #DamSafefyBill #Cabinet #Tamilnews 
    சிவில் சர்வீசஸ் தகுதி பட்டியலை கருத்தில் கொள்ளாமல், தகுதியற்ற அளவுகோல்களை பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். தேர்வுசெய்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #Modi
    புதுடெல்லி:

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற உயர்பதவிகளில் தகுதியானவர்களை நியமிப்பதற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றம் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “மாணவர்களே, எழுங்கள். உங்கள் எதிர்காலத்துக்கு ஆபத்து. உங்களுக்கு உரியதை ஆர்.எஸ்.எஸ். பறித்துக்கொள்ள விரும்புகிறது. சிவில் சர்வீசஸ் தகுதி பட்டியலை கருத்தில் கொள்ளாமல், தகுதியற்ற அளவுகோல்களை பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். தேர்வுசெய்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க பிரதமர் திட்டமிட்டிருப்பதை கீழ்க்காணும் கடிதம் காட்டுகிறது” என குறிப்பிட்டு உள்ளார்.

    அத்துடன், சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் செய்ய உள்ள மாற்றம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரையை ஏற்று, மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தையும் ராகுல் காந்தி இணைத்து உள்ளார்.

    சிவில் சர்வீசஸ் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பவுண்டேசன் கோர்ஸ் மதிப்பெண்கள் இரண்டையும் சேர்த்து, அதன் அடிப்படையில்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற பணிகளையும், பணி ஒதுக்கீடுகளையும் செய்ய வேண்டும் என்ற பிரதமர் அலுவலக பரிந்துரையைத்தான் மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சகம் ஏற்று கடிதம் எழுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   #RahulGandhi #Modi
    ×