என் மலர்
நீங்கள் தேடியது "PT sir"
- விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
- இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார்.
2011 ஆம் ஆண்டு க்லப்புல மப்புல பாடலின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை ஹிப்ஹாப் ஆதி ஆரம்பித்தார்.
அதைதொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா என்ற ஆல்பம் பாடலை உருவாக்கினார். இந்த ஆல்பம் பாடல் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பின் பல தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடகராக பாடியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கவண், இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் நடித்தார். தற்பொழுது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் பிடி சார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடலான குட்டி பிசாசே வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குட்டிப் பிசாசே பாடல் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது.
- இந்த கதையை ஒப்புக்கொள்வார் என்று நினைக்கவே இல்லை.
ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் அடுத்த வாரம் (மே 24) வெளியாக இருக்கும் படம் பிடி சார். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை காத்திக் இயக்கியுள்ளார். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசும் போது, "நான்கு ஆண்டு இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது."
"இது உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை ஒப்புக்கொள்வார் என்று முதலில் நினைக்கவே இல்லை. ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார்."
"பிடி சார் மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2015-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்...' படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா நடித்திருந்தார்.
- மலையாள படங்களில் தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
2015-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்...' படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து 'நானும் ரவுடிதான்', 'மிருதன்', 'விஸ்வாசம்' ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான 'புட்டபொம்மா' படத்தில் கதாநாயகியாக அனிகா அறிமுகம் ஆனார். மலையாள படங்களில் தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். மலையாளத்தில் 'சின்ன நயன்தாரா' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் அனிகா, அவ்வப்போது தனது கலக்கல் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
இதற்கு ரசிகர்கள் ஆதரவான கருத்தை தெரிவித்தனர். இன்னும் சிலர் கடுமையாக விமர்சித்து அவதூறு பதிவுகள் வெளியிட்டனர். ஆடைக்கு எதிராக வரும் மோசமான கமெண்ட்டுகளுக்கு அனிகா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "எனக்கு ஸ்டைலான ஆடைகள் அணிவது பிடிக்கும். கவர்ச்சியான உடைகள் அணிவது என்பது எனது தனிப்பட்ட விஷயம்.
ஆனால், என்ன உடை அணிந்தாலும் விமர்சிக்கிறார்கள். தவறாக பேசுகிறார்கள். இது என்னை மிகவும் பாதிக்கிறது. நானும் ஒரு மனுஷிதான். சினிமாவில் இருக்கும் பெண்கள்தான் பெரிய அளவில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள்'' என்றார். இவர் தற்பொழுது ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் மே 24 ஆம் தேதி வெளிவர இருக்கும் பி.டி சார் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார்.
- காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கவண், இமைக்கா நொடிகள் போன்ற பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் நடித்தார். தற்பொழுது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் பிடி சார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தின் பாடலான குட்டி பிசாசே வீடியோ யூடியூபில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் . படத்தின் அடுத்த பாடலான நக்கல் புடிச்சவன் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் கடந்த மே மாதம் 24ம் தேதி வெளியான படம் பிடி சார்.
- 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது அரண்மனை 4.
தமிழ் திரையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மூன்று படங்கள் இன்று ஓடிடியில் வெளியானது.
அந்த வகையில், மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார், இயக்கத்தில் வெளியான 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' படம் ஒடிடியில் வெளியானது.
படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் கடந்த மே மாதம் 24ம் தேதி வெளியான படம் பிடி சார். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை காத்திக் இயக்கினார். இந்த படம் திரையரங்கு வெளியீட்டில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியானது.
மேலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 கடந்த மே மாதம் 3ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து, அரண்மனை 4 இன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
- மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் கைது.
- உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள புனித ஜான்போஸ்கோ பள்ளி மாணவியை நடுரோட்டில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடற் கல்வி ஆசிரியர் ஒருவர் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை கன்னங்களில் ஆக்ரோஷமாக அரைகிறார். பின்னர், தலையிலும் தாறுமாறாக அடித்து துன்புறுத்துவது பதிவாகியுள்ளது.
மாவட்ட அளவிளான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது கை கடிகாரத்தை மாணவி திருடியதாக கூறி ஆசிரியர் தாக்கியுள்ளார். ஆனால், கீழே கிடந்த கை கடிகாரத்தையே மாணவி எடுத்து கொடுத்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உடற்கல்வி ஆசிரியர் மாணவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பள்ளி மாணவியை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியான நிலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து ஓசூர் புனித ஜான்போஸ்கோ பள்ளி தாளாளர் உத்தரவிட்டுள்ளார்.
- சீனாவில் 1990 இல் 1.3% ஆக இருந்து மாணவர்களின் உடல் பருமன் விகிதம் 2022 இல் 15.2% ஆக உயர்ந்தது.
- உடல் பருமன் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பள்ளி குழந்தைகள் இடையே அதிகரித்துவரும் உடல் பருமனை தடுக்க உடற்கல்வி வகுப்பை முதன்மையான பாடங்களுள் ஒன்றாக சேர்க்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவில் மாணவர்களின் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. 1990 இல் 1.3% ஆக இருந்து மாணவர்களின் உடல் பருமன்விகிதம் 2022 இல் 15.2% ஆக உயர்ந்தது. இதனால் உடல் பருமன் சீனாவில் ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு உடல் பருமன் பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் சீனாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக ஒருநாளில் 2 மணி நேரமாவது உடற்கல்வி பாடத்திற்காக ஒதுக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, உடல் பருமன்பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
சீன மொழி ஆசிரியர், கணித ஆசிரியர், அறிவியல் ஆசிரியருக்கு இணையாக உடற்கல்வி ஆசிரியருக்கும் மரியாதையை தரவேண்டும் என்றும் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை பள்ளிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் சீனாவின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.