என் மலர்
நீங்கள் தேடியது "Public oppossed"
- போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது
- மாடுகள் பிடிக்கும் பணி தொடரும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.
மாடுகள் ஏலம்
எனவே பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் டவுன், மேலப்பாளையம், பாளை போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடை யூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளனர்.
இதற்கு பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதே நிலை தொடர்ந்தால் மாடுகள் ஏலம் விடப்படும்.மாடுகள் பிடிக்கும் பணி தொடரும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பூங்காவில் அடைப்பு
அதன்படி இன்று நெல்லை வி.எம். சத்திரம் பகுதியில் இரவு நேரங்களில் சாலைகளில் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பரணி நகர் மாநகராட்சி பூங்காவிற்குள் அடைத்து வைத்தனர். இதற்கு பரணி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரூ.1.50 லட்சம் வரை செலவு செய்து மூலிகைச் செடி, கொடிகள் வளர்த்து வந்ததாகவும், மாடுகளை அடைத்ததால் செடி, கொடிகள் சேதம் அடைவதாகவும் அவர்கள் புகார் கூறினர். உடனடியாக பூங்காவிற்குள் கட்டப்பட்டு இருந்த மாடுகளை வெளி யேற்ற வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.