search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Relief Fund"

    • கொரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் மேற்கொண்டு அதில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன்.
    • தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன்.
    • தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று யாசகம் எடுத்து அதன் மூலம் சேரும் பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.

    ஈரோடு, ஏப். 17-

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன்(73) என்ற முதியவர் கையில் ரூ. 10,000 பணத்துடன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்குவதற்காக இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    இதுகுறித்து முதியவர் பூல் பாண்டியன் கூறியதாவது:-

    எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங் கிணறு பகுதி ஆகும். எனக்கு சிறுவயதிலிருந்தே பொது சேவையில் ஈடுபடுவது, பிறருக்கு உதவி செய்வது மிகவும் பிடிக்கும். 1980 ஆம் ஆண்டு பிழைப்பிற்காக மும்பை சென்றேன். அங்கு ஒரு அயன் கடையில் வேலை பார்த்தேன். பின்னர் அந்த வேலை ஒத்து வராததால் வேலையை விட்டு விட்டு அங்கு சிறு ஆண்டுகள் யாசகம் மேற்கொண்டேன்.

    அதன் பின்னர் 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தேன். கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பாபநாசம் போன்ற பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்தேன். அதில் சேர்ந்த பணத்தில் என்னால் முடிந்த உதவி செய்ய முடிவு செய்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.

    இதேபோல் கொரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் மேற்கொண்டு அதில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன். இதுவரை யாசகம் மூலம் சேர்ந்த பணத்தில் ரூ. 55 லட்சத்தை நிதி உதவியாக வழங்கி உள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 400 அரசு பள்ளிகளுக்கு சேர், மேஜைகள், ஆர்.ஓ. வாட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளேன்.

    தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு முதல் முதலாக வந்துள்ளேன். தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று யாசகம் எடுத்து அதன் மூலம் சேரும் பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    புதுக்கோட்டை வாணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ், பெரம்பலூர் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, கரூர் மஜரா ஓடையூரைச் சேர்ந்த சுப்பிரமணி, மதுரை கன்னியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பின்னியம்மாள், புதுக்கோட்டை ஆயிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள்.

    வேலூர் இந்திரா நகரைச் சேர்ந்த முருகன், சிவகங்கை தச்சவயல் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், கத்தாழம்பட்டு மதுரா நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், சேலம் கன்னங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், மதுரை முனிச்சாலை கிராமத்தைச் சேர்ந்த சரவண விக்னேஷ், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மனோ மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

    கொருக்குப்பேட்டை, அம்பேத்கார் நகரைச் சேர்ந்த செரிப் மகன் சிறுவன் ரியாசு, கடலூர் பி.என். பாளையத்தைச் சேர்ந்த துலுக்காணம் மகன் பக்கிரி ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 13 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy #ADMK
    ×