search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Road"

    பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தை ச் சேர்ந்த சுமார் 150- க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேலூர் கிராம எல்லையில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நாங்கள் நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்நிலையில் எங்களது விவசாய நிலங்களுக்கு செல்லும் பொது பாதையை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் ஏரியில் ஒத்தையடி பாதையில் வந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் பொதுப் பாதையை அகற்றவில்லை என்றால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாகவும் மனுவில் கூறியுள்ளனர்.

    • பொதுபாதையின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • இதனால் ஆத்திரமடைந்த 25 பெண்கள் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர்-ஓட்டப்பிடாரம் ரோட்டில் சோனியா நகர் தெருவில் பொது பாதையை தனிநபர் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தத் தெருவின் மேல் பகுதியில் உள்ளவர்கள் வேறு பாதையில் சுற்றி வந்து தங்கள் வீடுகளுக்கு சென்று வந்தனர். அடைக்கப்பட்ட பொது பாதையின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே ஆத்திரமடைந்த 25 பெண்கள் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். பாதை ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்ட மனுவை தாலுகா அலுவலகத்தில் கொடுத்தனர். இதனை அடுத்து தாசில்தார் பொறுப்பு, பிரபு போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அடைக்கப்பட்ட பாதை நிலவியல் பாதை என்பதை அறிந்து பாதையை அகற்ற உத்தரவிட்டார்

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் சிவபாலன் சம்பந்தப் பட்டவர்களிடம் பேசி அடைக்கப்பட்ட பாதை அகற்றப்பட்டது. இப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செய லாளர் தட்சிணா மூர்த்தி தலைமையில் நடந்தது. பேச்சு வார்த்தை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×