search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public safety"

    • மக்களின் பாதுகாப்பு-நம்பிக்கைக்கு உரிய அரசாக தி.மு.க. இல்லை என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டினார்.
    • இதனால் பால் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலா ளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கட்சியினருக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கேடாக உள்ளது. காவல் நிலையத்தில் சென்று தாக்கும் சம்பவம் தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது. இந்த அரசு மக்களின் பாதுகாப்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய அரசாக இல்லை.

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பின்பு தமிழகத்தில் புதிய தடுப்பணைகள் மற்றும் புதிய திட்டங்கள் ஏதும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் வைகை அணை, குண்டாறு சீரமைத்தல் உள்ளிட்ட எந்த ஒரு புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை.

    ஆவின் நிறுவனமும் மக்களுக்கு தேவையான பால் பொருட்களை வழங்குவதில் சிரமப்படுகிறது. இதனால் பால் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமிழக அரசிடம் வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கும் எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பகுதி துணைச்செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் பொன்.முருகன், நாகரத்தினம், பாலமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பிரீபெய்டு மின்சார மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு புதுவை அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதை புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
    • புதுவை அரசு மக்கள் விரோத அரசு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பிரீபெய்டு மின்சார மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு புதுவை அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதை புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே புதுவை மாநில மின் ஊழியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு கட்சிகள், பல்வேறு சமுதாய நல அமைப்புகள் மின்துறை தனியார் மயமாக்கலை வைத்து பல கட்ட போராட்ட ங்களை நடத்தி இந்த புதுவை மாநில அரசிற்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துள்ளன.

    மீண்டும் இதுபோன்று மக்கள் விரோத பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை நடை முறைப்படுத்த துடிக்கும் இந்த புதுவை அரசு மக்கள் விரோத அரசு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

    ஏதோ சில தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்ப தற்காக மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையின் அறிகுறியாக இந்த திட்டம் உள்ளது. எந்த ஒரு தனி மனிதனும், தனியார் நிறுவன ங்களும் பெரும்பாலும் மின்கட்டண பாக்கிகள் வைப்பது கிடையாது.

    ஆனால் புதுவை அரசும் அதை சார்ந்த அரசு நிறுவனங்களும் தான் பல கோடி கணக்கில் மின்சார பாக்கி வைத்துள்ளனர். ஆனால் புதுவை மாநில மக்கள் ஏதோ மின் கட்டண பாக்கி வைத்துள்ளதால் தான் நஷ்டத்தில் மின்சார த்துறை இயங்குவது போல் ஒரு மாயமான தோற்ற த்தை உருவாக்க இந்த புதுவை அரசு முயற்சி வருகிறது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஏற்கனவே பெட்ரோல் பொருட்கள் வரி உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு அதனுடன் சேர்ந்து குப்பை வரி, ஜி.எஸ்.டி. வரி போன்ற எண்ணற்ற வரிச் சுமைகளை மக்கள் சுமந்து வருகின்றனர்.

    ஆனால் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக புதுவையில் உள்ள அனைத்து சாலைகளையும் தரமற்ற முறையில் மோசமான நிலையில் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில் மிகவும் அத்தியாவசியமான அடிப்படையான மின்சார தேவையை அனைத்து மக்களும் எளிமையான முறையில் முன்பு இருந்தது போல் பெற்று பயனடைய வேண்டும். எனவே இந்த பிரீபெய்டு மின் கட்டணத் திட்டத்தை உடனடியாக அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×