என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab Kings"

    • இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் பஞ்சாப் கிங்சும் ஒன்று.
    • இரு அணிகளும் ஏறக்குறைய சரி சம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

    2022-ம் ஆண்டு அறிமுக தொடரிலேயே மகுடம் சூடிய குஜராத் அணி 2023-ம் ஆண்டில் 2-வது இடத்தை பிடித்தது. ஆனால் கடந்த சீசனில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது ஜோஸ் பட்லர், ரபடா, முகமது சிராஜ் வருகையால் அந்த அணி மேலும் வலுவடைந்துள்ளது. சமீபகாலமாக இங்கிலாந்து ஒரு நாள் போட்டி அணியில் ஜொலிக்காத ஜோஸ் பட்லர், ஐ.பி.எல். மூலம் இழந்த பார்மை மீட்கும் முனைப்புடன் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில்லும், சாய் சுதர்சனும் பேட்டிங் தூண்களாக உள்ளனர். ரஷித்கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள். உள்ளூர் சீதோஷ்ண நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

    இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் பஞ்சாப் கிங்சும் ஒன்று. இந்த சீசனில் நிறைய மாற்றங்களுடன் வந்திருக்கிறது. குறிப்பாக கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்றுத்தந்த ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26¾ கோடிக்கு எடுத்து அவரையே கேப்டனாக்கி இருக்கிறார்கள். அவரது வருகை பஞ்சாப் அணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    பேட்டிங்கில் இங்லிஸ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டெல்லி பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கிய பிரியான்ஷ் ஆர்யா ஆகியோரும், பந்து வீச்சில் மார்கோ யான்சென், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹலும் வலு சேர்க்கிறார்கள். இரு அணிகளும் ஏறக்குறைய சரி சம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகள் இதுவரை 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2-ல் பஞ்சாப்பும், 3-ல் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன. இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம். ஏனெனில் கடந்த ஆண்டு டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்னில் சுருண்ட குஜராத், சென்னைக்கு எதிராக 231 ரன்கள் திரட்டி ஆச்சரியப்படுத்தியது. ஆனால் சென்ற ஆண்டு இங்குநடந்த 8 ஆட்டங்களில் 6-ல் 2-வது பேட் செய்த அணியே வெற்றியை வசப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ரஷித்கான், சாய் கிஷோர், ககிசோ ரபடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மேக்ஸ்வெல், நேஹல் வதேரா அல்லது பிரியான்ஷ் ஆர்யா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங் சிங், மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என அறிவோம்.
    • பயிற்சியாளருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். 2025 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:

    வரும் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கவே விரும்புகிறேன்.

    இந்திய கிரிக்கெட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஐ.பி.எல். என்பதை ஏற்கனவே அறிவோம். ஐ.பி.எல்.லில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது மூன்றாவது இடத்தில் இருக்கும்.

    நான் அதில்தான் கவனம் செலுத்துகிறேன். இந்த முறை அந்த நிலை குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும். பயிற்சியாளர் என்னை அங்கீகரிக்கும் வரை அந்த எண்ணில் கவனம் செலுத்தப் போகிறேன்.

    நான் அவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் மைதானத்திலும், வெளியேயும் ஒவ்வொரு நபரைப் பற்றியும் எப்படி நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

    அவர் அனைவரையும் ஆதரிக்கிறார். சில இடங்களில் சீனியர்-ஜூனியர் கலாசாரம் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் நான் அவருடன் முதல் முறையாகப் பணியாற்றியபோது, நான் ஒரு சிறந்த வீரர் என்ற உணர்வை அவர் எனக்கு ஏற்படுத்தினார்.

    அவருடன் பணிபுரிவது நன்றாக இருக்கிறது. முடிவு இங்கும் அங்கும் சென்றாலும் அவரது மனம் ஊசலாடுவதில்லை. அவர் அதே வழியில் சிந்திக்கிறார். மேலும் அவர் வெற்றி பெற விரும்புகிறார்.

    கோப்பையை வெல்வதே முக்கியம். இதில் எந்த அழுத்தமும் இல்லை. இது ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.

    • 2019 முதல் 2021 வரை ஏற்கனவே பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்
    • ஆஸ்திரேலியாவின் பிராட் ஹடின் துணை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமைக்குரிய இவர், கடந்த 2019 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். கடந்த 2022 தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மார்க் வுட் என்பவரை பயிற்சியாளராக நியமித்தது.

    இந்த நிலையில், தற்போது 2023 சீசனில் வாசிம் ஜாபர் மீண்டும் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என பஞ்சாப் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹடின் துணை பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் அறிவித்தள்ளது.

    பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் உள்பட முக்கிய வீரர்களை ரிலீஸ் செய்தது. அந்த அணியிடம் தற்போது 32.20 கோடி ரூபாய் உள்ளது, மினி ஏலத்தின்போது தேவைப்பட்டால் மயங்க் அகர்வால் உள்பட ரிலீஸ் செய்ய வீரர்களை எடுத்துக் கொள்ள முடியும்.

    15 சீசனில் இதுவரை ஒரு முறை கூட பஞ்சாப் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. கடந்த முறை 6-வது இடத்தை பிடித்தது.

    • இதுவரை நடந்த 15 சீசனில் 14 கேப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
    • ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் அந்த அணியும் ஒன்று.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிக பட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை பட்டம் பெற்றுள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக கேப்டன்களை மாற்றிய அணியாக பஞ்சாப் புதுவிதமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுவரை நடந்த 15 சீசனில் 13 கேப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பஞ்சாப் அணியும் ஒன்று. இந்தாண்டு பஞ்சாப் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன்கள் பட்டியல்:-

    யுவராஜ் சிங் -இந்தியா

    குமார் சங்ககாரா -இலங்கை

    ஜெயவர்தனே -இலங்கை

    கில்கிறிஸ்ட் -ஆஸ்திரேலியா

    டேவிட் ஹசி -ஆஸ்திரேலியா

    பெய்லி -ஆஸ்திரேலியா

    சேவாக் - இந்தியா

    டேவிட் மில்லர் -தென் ஆப்பிரிக்கா

    முரளி விஜய் -இந்தியா

    மேக்ஸ்வெல் -ஆஸ்திரேலியா

    அஸ்வின் -இந்தியா

    கேஎல் ராகுல் - இந்தியா

    அகர்வால் -இந்தியா

    • ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகவும் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார்.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்தியாவின் ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் தான் நடப்பு சீசனில் அதிகம் ஏலத்துக்கு எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகவும் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.
    • ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவை 8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

    ஏற்கனவே, இந்தியாவின் ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் தான் நடப்பு சீசனில் அதிகம் ஏலத்துக்கு எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஞ்சாப் அணி வாங்கியதை புரிந்து கொண்ட ஏலதாரர் ஆச்சரியமுற்றார்.
    • பஞ்சாப் அணி 32 வயதான சஷான்க் சிங்-ஐ ஏலத்தில் எடுத்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களான பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இந்திய அணியில் இடம்பெறாத சஷான்க் சிங்-ஐ வெற்றகரமாக ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தில் எடுத்த பிறகு இருவரும் குழப்பமுற்ற நிலையில் காணப்பட்டனர்.

    நேற்று (டிசம்பர் 19) நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் அணி சஷான்க் சிங்-ஐ வாங்கும் திட்டத்தில் இல்லாதது தெரியவந்துள்ளது. அணியில் வாங்க நினைக்காத வீரர் ஒருவரை பஞ்சாப் அணி வாங்கியதை புரிந்து கொண்ட ஏலதாரர் மல்லிகா சாகர் ஆச்சரியமுற்றார்.

     


    சஷான்க் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள் இருந்த நிலையில், குழப்பத்தில் இருந்த பஞ்சாப் அணி 19 வயதான சஷான்க் சிங் என்ற வீரரை வாங்குவதற்கு பதிலாக 32 வயதான சஷான்க் சிங்-ஐ ஏலத்தில் எடுத்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக துவங்கியது. இந்த நிலையில், சஷான்க் சிங்-ஐ வாங்கியது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் அக்கவுண்ட்-இல் விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பான பதிவில், "சஷான்க் சிங்-ஐ வாங்க வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் இருந்தது. பட்டியலில் ஒரே பெயருடன் இரண்டு வீரர்கள் இருந்ததே குழப்பத்திற்கு காரணமாகி விட்டது. அவரை அணியில் எடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வெற்றிக்கு அவர் பங்களிப்பதை பார்க்க விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளது. 



    • சென்னைக்கு அணிக்கு சேப்பாக்கம், மும்பை அணிக்கு வான்கடே, பஞ்சாப் அணிக்கு மொகாலி, கொல்கத்தா அணிக்கு ஈடன் கார்டன் சொந்த மைதானங்களாக இருக்கிறது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஐ.பி.எல். சீசனில் சொந்த மைதானத்தை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    புதுடல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் 18 லீக் போட்டியில் விளையாடும். இதில் 9 ஆட்டங்கள் சொந்த மைதானத்திலும், 9 போட்டிகள் எதிர் அணிகளின் மைதானத்திலும் நடை பெறும்.

    சென்னைக்கு அணிக்கு சேப்பாக்கம், மும்பை அணிக்கு வான்கடே, பஞ்சாப் அணிக்கு மொகாலி, கொல்கத்தா அணிக்கு ஈடன் கார்டன் சொந்த மைதானங்களாக இருக்கிறது.

    இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஐ.பி.எல். சீசனில் சொந்த மைதானத்தை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மொகாலிக்கு பதில் பஞ்சாப் மாநிலம் முல்லான் பூரில் உள்ள மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச மைதானத்தை உள்ளூர் மைதானமாக மாற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. முல்லான்பூர் மைதானம் ரூ.230 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் சமீபத்தில் பார்வையிட்டு சென்றனர்.

    மொகாலியில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தை விட முல்லான்பூர் ஸ்டேடியம் அதிக இருக்கைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது
    • மும்பை, ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது

    இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியானது சென்னையில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்ஸியை பஞ்சாப் கிங்ஸ் அணி அறிமுகம் செய்தது.

    இதற்கு முன்னதாக, மும்பை, ஹைதராபாத் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    மொகாலி:

    ஐ.பி.எல்.போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    மொகாலியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கார் விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் 14 மாதங்களுக்கு பிறகு களம் இறங்குகிறார். முழு உடல் தகுதியுடன் இருக்கும் அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சீசனில் அவர் இல்லாத டெல்லி அணி 10-வது இடத்தை பிடித்தது. தற்போது ரிஷப் பண்ட் வருகையால் டெல்லி அணியின் செயல்பாடு மேம்பாடு அடையலாம். பஞ்சாப் அணி கடந்த சீசனில் 8-வது இடத்தை பிடித்தது. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன.

    இரு அணிகளும் 32 முறை மோதியுள்ளன. இதில் தலா 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 15 ரன்னில் வெற்றி பெற்றது.

    இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    சொந்த மண்ணில் கொல்கத்தா வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஐதராபாத் அணி வெல்லும் வகையிலும் சவால் கொடுத்து விளையாடும்.

    இரு அணிகளும் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு கடைசியாக மோதிய போட்டியில் கொல்கத்தா 5 ரன்னில் வெற்றி பெற்றது. 

    • குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 1-ல் தோல்வி அடைந்துள்ளது.
    • பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் தோல்வியும் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 17-வது லீக் போட்டியில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 1-ல் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் தோல்வியும் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

    • அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.
    • குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் பவர்பிளேயில் சிறப்பாக ரன்களை சேர்த்தனர்.

    பவர் பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 22 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 35 ரன்னிலும் ராசா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ஜிதேஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்தது. ரஷித்கான் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசிய ஜிதேஷ் சர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.

    அடுத்து வந்த அசுதோஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி பஞ்சாப் வெற்றிக்கு போராடினர். இறுதியில் 12 பந்துக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். 19-வது ஓவரில் இந்த ஜோடி 18 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தர்ஷன் நல்கண்டே வீசினார். முதல் பந்தில் அசுதோஷ் சர்மா கேட்ச் ஆனார். அடுத்த பந்தை அகல பந்தாக வீசினார். 3-வது பந்தில் ஹர்ப்ரீத் 1 ரன் எடுத்தார்.

    இதனால் கடைசி 3 பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஷஷாங்க் சிங் பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அடுத்த பந்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.

    இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ×