search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puthumaipen project"

    • புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் 11-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
    • சமூக நல இயக்குநரக அலுவலகத்தை ெதாடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 5-ந்தேதி அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு அல்லது தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

    இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

    தற்போது, முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வலைத்தளத்தில் மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

    திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு அல்லது தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகள், மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் 11-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

    மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தை ெதாடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    ×