search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "qualification"

    • அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.
    • மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்திற்கு மாவட்ட காஜி நியமனம் செய்யப்பட உள்ளது. காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய சட்ட சாத்திரத்தில் புலமை பெற்றவர்கள் அல்லது அரபுக்கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவ னத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.

    காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோ ர்கள் மேற்கண்ட தகுதியுடை வர்களாக இருப்பின் விண்ண ப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் 30.11.2023-க்குள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், கூடுதல் விவரங்கள் தேவையெனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    சேலம், நாமக்கல் மாவட்ட பட்டதாரிகள் எழுதிய பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
    சேலம்:

    இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை  பட்டதாரி  பயோடெக்னாலஜி திறன் தேர்வு (GAT - B) மற்றும்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET) - 2022  அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கணினி வழி முறையில்  இந்தியா முழுவதும் 56 நகரங்களில் 23.04.2022 அன்று  தேர்வு நடத்தியது.  

     சமூக இடைவெளியை கடைபிடித்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு  தேர்வுகள் நடத்தப்பட்டன.

    பட்டதாரி பயோடெக்னாலஜி திறன் தேர்வுக்கு (GAT-B) 6359 பெண்களும், 3219 ஆண்களும்  என மொத்தம் 9578 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5722 பெண்கள்,  2955 ஆண்கள் என  8677 பேர் தேர்வு எழுதினர்.

    இதேபோல்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET)  எழுத பெண்கள்- 9448, ஆண்கள்- 4251 என 13699 பேர்  பதிவு செய்தனர். இதில் பெண்கள்- 8013,  ஆண்கள்- 3758 என மொத்தம் 11771 பேர் தேர்வு எழுதினார்கள். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் தேர்வில் எடுத்த  மதிப்பெண்கள்  தேசிய தேர்வு முகமை இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண், பாஸ்வேர்டு கொடுத்து  பார்க்கலாம்.  மேலும் ரேங்க் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேர்ச்சி பெற்றவர்கள்  மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையில்  முதுகலை படிப்பில் சேர அட்மிஷன் வழங்கப்படுகிறது. இதைத்தவிர   பயோடெக்னாலஜி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பங்கேற்று ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பயோடெக்னாலஜி ஆராய்ச்சியைத் தொடர உதவிகளும் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    சென்னையில் பள்ளி வாகனங்களை கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார். வருகிற 31-ந் தேதிக்குள் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந் தேதி திறக்கப்படுகிறது. பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக பள்ளி வாகனங்களில் செல்வதற்கு வசதியாக, பள்ளி வாகனங்கள் தகுதிச்சான்று பெறவேண்டும்.

    அதன்படி, சென்னையில் உள்ள 628 பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் திட்டமிட்டார். இந்த நிலையில், நேற்று கொளத்தூரில் உள்ள டி.ஆர்.ஜே.ஆஸ்பத்திரி அருகே 196 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்காக அணிவகுத்து நின்றன.

    அந்த வாகனங்களை சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகள் தரமானதாக இருக்கிறதா? அவசர வழி உள்ளதா? டிரைவர் முறையாக பயிற்சி பெற்றுள்ளாரா? என ஆய்வில் ஈடுபட்டார்.

    இந்த ஆய்வில் தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் ஆர்.ராஜேந்திரன், சென்னை வடமேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சி.ஸ்ரீதரன், சென்னை வடக்கு வட்டாரபோக்குவரத்து அலுவலர் க.அசோக்குமார் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் சண்முகம் மற்றும் வாகன ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

    ஆய்வு குறித்து கலெக்டர் வெ.அன்புச்செல்வன் கூறியதாவது:-



    பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்தும் வருகிற 31-ந் தேதிக்குள் தகுதிச்சான்று பெறவேண்டும். அதற்காக கூட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து பள்ளி வாகனங்களும் 31-ந் தேதிக்குள் தகுதி சான்று பெறாவிட்டால் அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எத்தனை மாணவர்களை ஏற்றவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன்படி தான் நடக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று 196 வாகனங்கள் ஆய்வுக்காக வந்தன. அவற்றில் 172 வாகனங்களில் அனைத்தும் சரியாக இருந்தன. அந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்றுகள் வழங்கப்பட்டது. மீதம் உள்ள 24 வாகனங்களில் உள்ள சில குறைகளை சரி செய்துவரும்படி கூறப்பட்டுள்ளது என்றார். #tamilnews
    ×