search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "R N Ravi"

    • மத்திய அரசின் பட்ஜெட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
    • ஜூலை 31 பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல.

    2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி பதிவிட்டுள்ளார்.

    ராஜ்பவனின் பதிவில், "வறியநிலை மக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிதிநிலை அறிக்கையை வழங்கிய பிரதமர் மோடி அவர்களுக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த முன்னோக்கு நிதிநிலை அறிக்கை, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளிப்பதுடன், மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதற்காகவும் இந்த பட்ஜெட்டை குறிப்பாகப் பாராட்டுகிறோம்.

    2047-ம் ஆண்டுக்குள் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான மற்றும் நிலையான தன்னிறைவு பாரதத்தை வளர்த்து, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகையின் இந்த பதிவை மதுரை எம்பி சு. வெங்கடேசன் விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரின் எக்ஸ் பதிவில், "அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆர். என்.ரவி. தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டை "முன்னோக்கு நிதிநிலை அறிக்கை" என்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர். ஜூலை 31 பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன.
    • அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.

    மாநாட்டில் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 48 துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் பெரும்பாலான துணை வேந்தர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன. மேலும் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமி யங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.


    இன்றைய முதல் நாள் மாநாட்டில் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வைத்திய சுப்பிரமணியம் எழுதிய நிறுவன மேம்பாட்டு திட்டம்- பல்கலைக்கழகங்களுக்கான தொலைநோக்கு ஆவணம், கட்டிட ஆராய்ச்சி சிறப்பு மற்றும் செயற்கை நுண்ண றிவு எதிர்காலம் குறித்து விளக்கப்பட்டது.

    மாநாட்டில் பங்கேற்ற துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றினர். யு.ஜி.சி. சி.ஐ.எஸ்.ஆர். தேர்வுகளில் தகுதி பெற்ற மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பெற்ற மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என். ரவி நேற்றுமுன்தினம் மாலை ஊட்டிக்கு வந்தார். வருகிற 30-ந் தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருக்கிறார். மாநாடு நிறைவுக்கு பின் 29-ந் தேதி கோத்தகிரி மற்றும் கோடநாடு காட்சி முனையை பார்வையிடுகிறார். பின்னர் 30-ந் தேதி ஊட்டியில் இருந்து சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

    • நாட்டிற்காக தன் வாழ்வை வாழ்ந்த ஏவுகணை நாயகன் அப்துல்கலாம்.
    • அப்துல்கலாம் வகித்த உயர் பதவி இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.

    சென்னை எம்.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அதன் அடியில் வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களை வடிவமைப்பதில் எம்.ஐ.டி. சிறப்பான சேவையை வழங்கி வருகிறது என்றும், வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கலாமை எம்.ஐ.டி.நிறுவனம் உருவாக்கியது பாராட்டுக்குரியது என்றும் கூறினார். 


    மேலும் அவர்  பேசுகையில் கூறியுள்ளதாவது:  நாட்டிற்காக தன் வாழ்வை வாழ்ந்த ஏவுகணை நாயகன் அப்துல்கலாம். சாதிக்க வானமே எல்லை என்ற அவரது எண்ணங்களே இளைஞர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது. அப்துல்கலாம் வகித்த உயர் பதவி இளைஞர்களுக்கு உண்மையான உத்வேகம் அளிக்கிறது.

    சிறந்த தலைவரான அவர், எளிமையானவராகவும், பணிவானவராகவும் இருந்தார். நமது நாட்டை நன்கு புரிந்து கொண்டு அதன் பாரம்பரியத்தையும் பெருமையையும் நிலை நிறுத்தினார், நவீன இந்தியாவை அவர் உருவாக்கினார். இவ்வாறு ஆளுநர் தெரிவித்தார்.

    கூட்டு புலனாய்வுக்குழு தலைவராக பதவி வகித்து வரும் ஆர்.என்.ரவியை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. #RNRavi #DeputyNSA
    புதுடெல்லி:

    ஐ.பி.எஸ் அதிகாரியாக தனது பணியை துவக்கிய ஆர்.எம்.ரவி தற்போது கூட்டு புலனாய்வுக்குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். நாகலாந்துக்கான தேசிய சோசலிச குழுவின் அரசு பிரதிநிதியாகவும் செயல்படுகிறார்.

    இந்நிலையில் தற்போது தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அவரை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை தேர்வுக்குழு ஒருமனதாக அளித்துள்ளது. தற்போது அஜித் டோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RNRavi #DeputyNSA
    ×