என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rabies vaccination"
- நாய் வளர்ப்பவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
- நாய்களுக்கு குடற்புழு நீக்கத்துக்கான ஊசியும் போடப்பட்டது.
சென்னை:
சென்னையில் சிறுவர்-சிறுமிகளை தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் விரட்டி கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை 2 நாய்கள் கடித்து குதறின.
கடந்த 1-ந்தேதி புழலில் 12 வயது சிறுவன் மற்றும் கே.கே.நகரில் 16 வயது சிறுவன் ஆகியோரை நாய்கள் கடித்தன. இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.
இதையடுத்து தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இதற்காக மெரினா கடற்கரையில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணியில் நாய் பிடிப்பவர்கள் 15 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 2 வண்டிகளில் அந்த நாய்கள் பிடிக்கப்பட்டன.
இதில் 26 செல்லப் பிராணிகள் உள்பட 132 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நாய்களுக்கு குடற்புழு நீக்கத்துக்கான ஊசியும் போடப்பட்டது. இதற்காக செல்லப் பிராணிகளை வளர்ப்ப வர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை அங்கு கொண்டு வந்திருந்தனர்.
வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்வதற்கும், அதை வளர்ப்பதற்கான அனுமதியை பெறுவதற்கும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் என்பதால் நாய் வளர்ப்பவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
கடந்த மே மாதம் முதல் இதுவரை நாய் வளர்ப்பதற்காக 4,345 உரிமங்களை சென்னை மாநகராட்சி ஆன்லைன் மூலம் வழங்கியுள்ளது. மேலும் 2,196 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 9,700 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
- திண்டுக்கல் நகரில் நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது.
- நகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரில் நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். நாய்கள் துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் நோய் தாக்கிய நாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் செபாஸ்டின் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, முகமது ஹனிபா, ரெங்கராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் நகரில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆர்.வி.நகர், முகமதியாபுரம், பேகம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தடை ஆப்ரேஷன் திட்டம் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ள ப்படவில்லை. இதனால் நகர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் பெருகி உள்ளது. கருத்தடை ஆபரேஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மேலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களுக்கு அடையாள மை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிராணிகள் நலச் சங்க செயலாளர் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
- உலக வெறிநோய் தினத்தையொட்டி தடுப்பூசி முகாம் நடந்தது.
- தலைமை மருத்துவர் சரவணன் தலைமை தாங்கினார்.
மதுரை
உலக வெறிநோய் தினத்தையொட்டி தல்லாகுளம் கால்நடை மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமை மதுரை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார் தொடங்கி வைத்தார். மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன் தலைமை தாங்கினார்.
கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துராமன், விஜயகுமார், அறிவழகன், முத்துராம், பயிற்சி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுதாகரன், சண்முகத்தாய், நிர்மலா, கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் நடந்தன.
- இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி அழகுமணிகண்டன் தொடங்கி வைத்தார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கீழச்சீவல்பட்டியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி அழகுமணிகண்டன் தொடங்கி வைத்தார்.
முகாமில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டு மாத்திரை வழங்கினர். இதில் காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம், சிவகங்கை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ராம்குமார், கால்நடை மருத்துவர்கள் பிரதீப், அருண், ஸ்ரீநாத், செல்வநாயகி, ரஞ்சிதா, கால்நடை அலுவலக ஊழியர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவக் குழுவினரால் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- செல்ல பிராணிகள் வளர்ப்போரும், பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
- கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளனர்.
குண்டடம் :
குண்டடம் வட்டாரம் பேட்டை , காளி பாளையம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- திருப்பூர் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் ராஷ்ட்ரிய கிருமி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாளை (புதன்கிழமை) குண்டடம் சமுதாய நலக் கூடம் அருகே காலை 9 மணி முதல் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் குழு கலந்து கொண்டு வெறிநாய் தடுப்பூசி போடுதல் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
இறைச்சிக்கூடங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே செல்ல பிராணிகள் வளர்ப்போரும், பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி முகாம் பல்லடம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திருப்பூர் கால்நடை பராமரிப்பு துறை துணைஇயக்குநர் ராமசாமி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் (பொறுப்பு) வெங்கடேசன், நோய் புலனாய்வு உதவி இயக்குநர் கவுசல்யா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம் கால்நடை மருத்துவர் உமாசங்கர் வரவேற்றார். முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வளர்ப்பு பிராணிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி, நகர மன்ற உறுப்பினர்கள் ராஜசேகர், ஈஸ்வரமூர்த்தி, வசந்தாமணி தங்கவேல், தண்டபாணி, ம.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம்,பல்லடம் அரசு மருத்துவர் ரமேஷ் குமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாய், பூனை உள்ளிட்ட 38 செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
- நாட்டு ரக நாய்களையும், சிலர் விலை உயர்ந்த நாய்களையும் , பூனை, ஆடுகளையும் கொண்டு வந்தனர்.
திருப்பூர் :
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப்பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் நடந்தது. முகாமை கலெக்டர் எஸ்.வினீத் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் சிலர் நாட்டு ரக நாய்களையும், சிலர் விலை உயர்ந்த நாய்களையும் கொண்டு வந்திருந்தனர். இதேபோல் சிலர் பூனை, ஆடுகளையும் கொண்டு வந்தனர்.
இந்த முகாமில், நாய், பூனை உள்ளிட்ட 38 செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. இதே–போல் 9 தெருநாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் கருத்தடை அறுவை சிகிச்சையும் மேற்கொண்டனர். இது தவிர இந்த முகாமில் சாதாரண தடுப்பூசி போடுதல், மற்றும் வழக்கமான பல்வகை நோய்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர்(பொறுப்பு)சக்திவேல் பாண்டியன், திருப்பூர் கோட்ட உதவி இயக்குனர் வெங்கடேசன், தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெறிநோயின் அறிகுறி மற்றும் சிகிச்சை குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:-
வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் 100 சதவீத உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வாகும். இதில் கொடூர வகை நோய் பாதிப்பு கொண்ட நாய்க்கு உமிழ் நீர் அதிகம் சுரந்து நுரையுடன் வழியும். உணவு உட்கொள்ளாது. கீழ் தாடை தாழ்ந்து வாய்மூட முடியாமல் இருக்கும். நாக்கு தாமிர நிறத்தில் பழுத்த அல்லது கொழுந்து மா இலை போன்றிருக்கும். எதிர்வரும் நபர்கள், விலங்–குகளை கடித்துக்கொண்டே ஓடும்.
மனிதர்களுக்கு வெறி நாய் கடித்து விட்டால் கடித்த நாளிலிருந்து 3,7,14,28 ஆகிய நாட்களில் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும். நாய் கடித்த உடன் கடிபட்ட இடத்தை தண்ணீர் ஊற்றி வழிந்தோடும்படி கழுவ வேண்டும். கார்பாலிக் அமிலம் கலந்த சோப்பு போட்டு கழுவுதல், டிஞ்சர், அயோடின் பஞ்சில் நனைத்து காயத்தில் வைத்தல் போன்றவைகளை செய்வதன் மூலம் காயத்தில் பரவும் வைரஸ் கிருமியின் எண்ணிக்கையை குறைக்கலாம். அதற்கடுத்து மருத்துவரை அணுகி தடுப்பூசி போட வேண்டும்.இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனா 2021-22 திட்டத்தின் கீழ் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
- இலவச தடுப்பூசி முகாமில் தங்களது நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், செல்லப்பிராணிகளுக்கு வெறிநோயைத் தடுக்கும் வகையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை 5-ந்தேதி முதல் நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனா 2021-22 திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவமனைகளில் செல்ல பிராணிகளுக்கு வெறிநோயினை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இந்த இலவச தடுப்பூசி முகாமில் தங்களது நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்:
திருப்பூா் பன்முக மருத்துவமனையில் நாளை 5-ந் தேதியும், குடிமங்கலம் கால்நடை மருத்துவமனையில் 14 ந் தேதியும் காங்கயம் கால்நடை மருத்துவனையில் 21-ந் தேதியும், தாராபுரம் கால்நடை மருத்துவமனையில் 28-ந் தேதியும், உடுமலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஜனவரி 11ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.
அதேபோல, பல்லடம் கால்நடை மருத்துவமனையில் ஜனவரி 19 -ந் தேதியும், பேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவமனையில் ஜனவரி 25 ந் தேதியும், பொங்கலூா் கால்நடை மருத்துவமனையில் பிப்ரவரி 1 ந் தேதியும், உடுமலை கால்நடை பன்முக மருத்துவமனையில் பிப்ரவரி 8 ந் தேதியும், தாராபுரம் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிப்ரவரி 15 ந் தேதியும், திருப்பூா் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிப்ரவரி 22 ந் தேதியும், முத்தூா் கால்நடை மருத்துவனையில் பிப்ரவரி 28 ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்