search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்   நாளை தொடங்குகிறது
    X

    கோப்புபடம்.

    செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை தொடங்குகிறது

    • ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனா 2021-22 திட்டத்தின் கீழ் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
    • இலவச தடுப்பூசி முகாமில் தங்களது நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், செல்லப்பிராணிகளுக்கு வெறிநோயைத் தடுக்கும் வகையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை 5-ந்தேதி முதல் நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், ராஷ்ட்ரீய கிருஷி விகாஸ் யோஜனா 2021-22 திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவமனைகளில் செல்ல பிராணிகளுக்கு வெறிநோயினை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இந்த இலவச தடுப்பூசி முகாமில் தங்களது நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    முகாம் நடைபெறும் இடங்கள்:

    திருப்பூா் பன்முக மருத்துவமனையில் நாளை 5-ந் தேதியும், குடிமங்கலம் கால்நடை மருத்துவமனையில் 14 ந் தேதியும் காங்கயம் கால்நடை மருத்துவனையில் 21-ந் தேதியும், தாராபுரம் கால்நடை மருத்துவமனையில் 28-ந் தேதியும், உடுமலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஜனவரி 11ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    அதேபோல, பல்லடம் கால்நடை மருத்துவமனையில் ஜனவரி 19 -ந் தேதியும், பேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவமனையில் ஜனவரி 25 ந் தேதியும், பொங்கலூா் கால்நடை மருத்துவமனையில் பிப்ரவரி 1 ந் தேதியும், உடுமலை கால்நடை பன்முக மருத்துவமனையில் பிப்ரவரி 8 ந் தேதியும், தாராபுரம் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிப்ரவரி 15 ந் தேதியும், திருப்பூா் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிப்ரவரி 22 ந் தேதியும், முத்தூா் கால்நடை மருத்துவனையில் பிப்ரவரி 28 ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    Next Story
    ×