என் மலர்
நீங்கள் தேடியது "rabri devi"
- நிதிஷ் குமார் பெண்களை அவமரியாதை செய்கிறார்.
- ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய நிதிஷ்குமார், "லாலு பிரசாத் ஊழல் புகாரில் சிக்கியபோது அவர் தனது மனைவியை முதல்வர் பதவியில் அமர்த்தினார்" என்று தெரிவித்தார்
இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண்களை அவமதித்ததாகக் கூறி, முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உட்பட ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராப்ரி தேவி, "நிதிஷ் குமார் 'பாங்கு' சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருகிறார். அவர் பெண்களை அவமரியாதை செய்கிறார். அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதையே அவரும் பேசுகிறார். அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களும் பாஜக தலைவர்களில் சிலரும் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லச் சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- ரெயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.
- 3 மாதங்களுக்கு முன்பு லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
புதுடெல்லி:
ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் 2004-2009 வரை மத்திய மந்திரியாக இருந்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அவர் மத்திய ரெயில்வே மந்திரியாக பணியாற்றினார்.
அப்போது இந்திய ரெயில்வேயில் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது. பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
ரெயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் வாங்கிய வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது.
இதற்கிடையே லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி உள்பட 14 பேர் இந்த வழக்கில் இன்று (15-ந்தேதி) ஆஜராக டெல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி கீதாஞ்சலி கோயல் கடந்த 27-ந்தேதி சம்மன் அனுப்பினார்.
இதை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜரானார். வீல் சேரில் அவர் கோர்ட்டுக்கு காலை 10 மணிக்கு வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு அவர் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சிகிச்சைக்கு பிறகு லாலு முதல் முறையாக கோர்ட்டு வந்தார்.
மனைவி ராப்ரிதேவி, மகள் மிசா பாரதி ஆகியோரும் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.
காலை 11 மணிக்கு தான் கோர்ட்டு நடவடிக்கைகள் தொடங்கியது. ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரிதேவி, மிசா பாரதி ஆகியோருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
ஜாமீன் பெற்றதால் லாலுவுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டது. அவர் கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஏற்கனவே பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து இருந்தார்.
இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் உதவியாளர் போலோ யாதவ் கடந்த ஜூலை மாதம் கைதாகி இருந்தார்.
- கடந்த ஜூலை 3-ந்தேதி சி.பி.ஐ. 2-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.
- வழக்கில் லாலுபிரசாத் யாதவ், ராப்ரிதேவி உள்ளிட்ட 14 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
புதுடெல்லி:
ரெயில்வே பணி வழங்குவதற்கு நிலத்தை லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தள நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பார்தி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் கடந்த ஜூலை 3-ந்தேதி சி.பி.ஐ. 2-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் லாலுபிரசாத் யாதவ், ராப்ரிதேவி உள்ளிட்ட 14 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் உள்ளிட்டோர் இன்று காலை டெல்லியில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்கள்.
ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரிதேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி கீதாஞ்சலி கோயல் உத்தரவிட்டார்.
- லல்லு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
- லல்லு மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, மகள் மிசா ஆகியோர் டெல்லி கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்
புதுடெல்லி:
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது சிலருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக லல்லு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் லல்லு மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, மகள் மிசா ஆகியோர் டெல்லி கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.
இந்த நிலையில் ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோருக்கு டெல்லி கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. வருகிற 28-ந் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
- சட்டசபை மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக ராப்ரி தேவி தேர்வு செய்யப்பட்டார்.
- சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் செயல்பட்டு வருகிறார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர்.
இதற்கிடையே, கடந்த மாதம் கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், திடீரென பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதா தள நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சட்டசபை மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரியும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி தேர்வு செய்யப்பட்டார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் செயல்பட்டு வருகிறார்.
- பெண்களுக்கு மாதற்தோறும் 2500 ரூபாய், மானிய விலை சிலிண்டர் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும்.
- 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்.
பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் (JDU) ஆட்சி அமைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக இருந்து வருகிறார்.
பீகார் மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், ராஷ்டிரிய கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி (தற்போது எதிர்க்கட்சி தலைவர்), கட்சித் தலைவர்களுடன் சட்டமன்றத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது "ஏழை பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்க வேண்டும். பெண்களுக்கு சமூக பாதுாப்பு வழங்க வேண்டும்" போன்றவை பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் "நிதிஷ் குமார் அரசு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாங்கள் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்" என்றார்.
இதற்கிடையே அவரது மகனும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், "என்.டி.ஏ. அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், இந்த வருடம் இறுதியில் நடைபெறும் தேர்தல் அவர்களுக்கு அரசுக்கு கடைசியாக இருக்கும். தேர்தலுக்குப் பிறகு நாங்கள் மக்களுக்கு தேவையானதை செய்வோம்" எனக் கூறியிருந்தார்.
பாட்னா:
ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரிதேவி நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை உள்ளது. எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்போதே அவர் இந்த நிபந்தனையைதான் முன் வைத்தார்.
2016-ம் ஆண்டு தொடக்கத்தில் தனது பிரதமர் ஆசையை அவர் லாலு பிரசாத்திடம் தெரிவித்தார். 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் தன்னை பிரதமர் வேட்பாளராக லாலு பிரசாத் யாதவ் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் நிதிஷ் குமாரின் திட்டத்தை லாலு பிரசாத் ஏற்கவில்லை. மற்ற கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி விட்டுதான் இதுபற்றி தெரிவிக்க முடியும். எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் ஒருமித்த முடிவுக்கு வரவேண்டும்.

நான் மட்டும் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று எனது கணவர் லாலு கூறினார். இதனால் அவர் மீது நிதிஷ் குமாருக்கு கோபம் ஏற்பட்டது. ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் இருந்த கூட்டணியை அவர் முறித்து கொண்டு விலகி சென்றதற்கு இதுதான் காரணமாகும்.
பிரதமர் பதவி மட்டுமின்றி நிதிஷ் குமாருக்கு இன்னொரு பேராசையும் இருந்தது. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியையும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியையும் இணைக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக அவர் பிரசாந்த் கிஷோரை தூது அனுப்பினார்.
5 தடவை பிசாந்த் கிஷோர் எங்களை சந்தித்து பேசினார். அப்போது கட்சிகளை இணைக்க தீவிரம் காட்டினார்கள். ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை. இதனால் நிதிஷ் குமாருக்கு எங்கள் மீது கோபம் ஏற்பட்டது.
இன்று எங்கள் குடும்பத்தில் இருந்து எனது மகன் தேஜ்பிரதாப் யாதவ் பிரிந்து சென்றுள்ளார். எங்கள் குடும்பத்துக்கு எதிராக எங்கள் மகனை வைத்து தூண்டி விடுகிறார்கள். எங்கள் குடும்பத்தை உடைக்க சதி நடக்கிறது.
பா.ஜனதா தலைவர்களும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களும் எங்கள் குடும்ப ஒற்றுமையை சீர் குலைக்க சகுணி வேலை செய்கிறார்கள். ஆனால் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக உள்ளது. அந்த ஒற்றுமையை என்றுமே யாராலும் எதுவும் செய்ய இயலாது.
எனது மகன்கள் தேஜஸ் வியாதவும், தேஜ்பிரதாப் யாதவும் வேறு வேறு அல்ல. அவர்கள் இருவரும் ஒன்றுதான். அவர்களை பிரிக்க நினைத்தால் தோல்வி தான் ஏற்படும்.
தேஜ்பிரதாப் எங்களை பிரிந்து இருப்பது தற்காலிகம் தான். விரைவில் அவர் எங்களை தேடி வருவார்.
இவ்வாறு ராப்ரிதேவி கூறினார். #Rabridevi #NitishKumar
பீகார் முன்னாள் முதல்- மந்திரியும் ராஷ்டீரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாகவும் பணியாற்றி இருந்தார்.
லாலுபிரசாத் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஓட்டல்களை இயக்க தனியாருக்கு ஒப்பந்தம் அளித்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்தது தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் லாலுவுக்கு கடந்த 19-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இதை 28-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. பொதுவான ஜாமின் மனு மீது இன்று (28-ந்தேதி) தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஜாமின் வழக்கு விசாரணைக்கு வந்தது. லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி டெல்லி சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டு நீதிபதி அருண்பரத்வாஜ் உத்தரவிட்டார்.
ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் பிணை தொகையும், அவர்கள் சார்பில் மற்றவர்கள் அதே பிணை தொகையும் வழங்க வேண்டும் என்று ஜாமின் உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார். கால்நடை தீவன வழக்கில் லாலு சிறை தண்டனை பெற்று தற்போது ஜெயிலில் உள்ளார். #IRCTCScam #LaluPrasadYadav
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளில் லாலு பிரசாத் தவிர மற்ற அனைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கினார். இந்த ஜாமீன் காலம் இன்று நிறைவடைந்ததையடுத்து, இன்று மீண்டும் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.
அப்போது, சிபிஐ வழக்கில் ராப்ரிதேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அமலாக்கத்துறை வழக்கில் பதில்மனு தாக்கல் செய்வதற்கு அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நிரந்தர ஜாமீன் வழங்கப்படவில்லை. நவம்பர் 19-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், நவம்பர் 19-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, லாலு பிரசாத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். லாலு பிரசாத் யாதவ் மற்றொரு வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #IRCTCScam #Lalu #RabriDevi #TejashwiYadav