என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radhapuram"

    • நெல்லை மாவட்டத்தில் வறட்சி பகுதியான ராதாபுரம் தாலுகா பகுதிகளில் வேலிகள் மற்றும் சாலை யோர பகுதிகளில் பல்வேறு காட்டுச் செடிகள் இயற்கையாகவே வளர்வதுண்டு.
    • இவற்றில் ஒரு சில செடி வகைகள் அருகிலுள்ள மரங்களை பாதுகாப்பாக பற்றிக் கொண்டு வளர்கின்றன.

    பணகுடி:

    நெல்லை மாவட்டத்தில் வறட்சி பகுதியான ராதா புரம் தாலுகா பகுதிகளில் வேலிகள் மற்றும் சாலை யோர பகுதி களில் பல்வேறு காட்டுச் செடிகள் இயற்கை யாகவே வளர்வதுண்டு.

    செங்காந்தாள் மலர்கள்

    இவற்றில் ஒரு சில செடி வகைகள் அருகிலுள்ள மரங்களை பாதுகாப்பாக பற்றிக் கொண்டு வளர்கி ன்றன. ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் மட்டுமே பூக்கும் செங்காந்தாள் மலர்கள் கார்த்திகை பூ என்று அழைக்கப்படுவதுடன், தமிழக மாநில மலர் என போற்றப்படுகிறது.

    இப்பூக்கள் புற்றுநோய்க்கு மருந்தாக இருப்பது முக்கியத்துவமாகும். அரியவகை மூலிகை செடி யாகவும் கருதப்படுகிறது. தற்போது ராதாபுரம் தாலுகா பகுதிகளில் பணகுடி, கூடங்குளம், வடக்கன்குளம், பழவூர், சமூகரெங்கபுரம், பணகுடி உட்பட பல்வேறு கிராமப்புற சாலைகளில் செங்காந்தாள் மலர்கள் பூத்துள்ளன.

    ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் இந்த மலர்களை அரசு தொடர் நடவடிக்கையின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது பல்வேறு சமூக அமைப்பு களின் வேண்டுகோளாக இருக்கிறது.

    தற்போது மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதி யான பணகுடி பகுதிகளில் செங்காந்தாள் மலர்கள் அதிகமான அளவில் பூத்துள்ளன. மருத்துவ குணம் கொண்ட செங்காந்தாள் செடிகளை முறையாக வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லக்கூடிய சாலை 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
    • ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லக்கூடிய சாலை 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது. சீலாத்திகுளம் பகுதிகளில் கல்குவாரிகள் அதிக அளவில் இயங்கி வருவதால் இந்த சாலை வழியாக அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று வருகிறது. இதனால் ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் இந்த சாலை வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது இரவு நேரங்களில் செல்லக்கூடிய வெளியூர் வாகனங்கள் சாலைகளில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகிறது. ஆகவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சேதம் அடைந்த சாலையை செப்பனிட வேண்டுமென ராதாபுரம் பாரதீய ஜனதா கட்சியின் தெற்கு ஒன்றிய ஊடகப்பிரிவு தலைவர் ராதை காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ராதாபுரம் தாலுகாவைச் சேர்ந்த ஆவரைகுளம்,செட்டிகுளம் ஆகிய கிராமங்களில் திருவாவடு துறை ஆதீனத்திற்கு பாத்தியப் பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களும் மற்றும் குடியிருப்பு புஞ்சை நிலங்களும் உள்ளன.
    • பல லட்ச ரூபாய் செலவில் சீரமைத்து, சமப்படுத்தி, திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் தாலுகாவில் திருவாவடுதுறை ஆதீன இடங்களை ஏற்கனவே வசித்தவர்களுக்கு உரிமம் வழங்கி குத்தகை வசூலிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.

    கலெக்டருக்கு மனு

    இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராதாபுரம் தாலுகாவைச் சேர்ந்த ஆவரைகுளம், கடம்பன்குளம், பழவூர், மதகனேரி, சவுந்தர லிங்கபுரம், ஊரல்வாய் மொழி, ஊரல்வாய்மொழி காலனி, சண்முகபுரம், அடங்கார் குளம், மேலக்கிளாக்குளம், கீழக்கிளாக்குளம், செட்டிகுளம் ஆகிய கிராமங்களில் திருவாவடு துறை ஆதீனத்திற்கு பாத்தியப் பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களும் மற்றும் குடியிருப்பு புஞ்சை நிலங்களும் உள்ளன.

    இந்த நிலங்களில் பல நூறு ஆண்டுகளாக அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்கள் திருவாவடுதுறை ஆதீன நிலத்தில் குடியிருப்போர் குத்தகை உரிமம் பெற்று தங்களது சொந்த உழைப்பின் மூலமும், பல லட்ச ரூபாய் செலவு செய்து வீடுகள் அமைத்து மின் இணைப்புகள் பெற்றும், ஆண்டாண்டு காலமாக குடியிருந்தும் வருகிறார்கள்.

    இதுபோல் விவசாயிகள் ஆதீனத்திலிருந்து குத்தகை உரிமம் பெற்று நிலத்தை தங்களது சொந்த உழைப்பின் மூலமும், பல லட்ச ரூபாய் செலவில் சீரமைத்து, சமப்படுத்தி, திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு குத்தகை பெற்று அனுபவித்து வருபவர்கள் காலம் சென்று விட்டால் அவர்களது வாரிசுதாரர் யாரேனும் ஒருவர் குடியிருப்புகளில் குடியிருந்து வருவார், நிலங்களில் விவசாயம் செய்து வருவார்.

    இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று தவறாக எடுத்துக் கொண்டு சிலர் அப்புறப்படுத்தியும், அப்புறப்படுத்த முயற்சித்தும், அவர்கள் குத்தகை செலுத்த முயன் றாலும் அவர்களுக்கு குத்தகைக்கு கொடுக்கா மலும், மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரி களின் கவனத்திற்கு தெரியபடுத்தாமலும், தன்னிச்சையாக செயல்பட்டு பிற நபர்களுக்கு குடியிருப்பு நிலங்களையும், விவசாய நிலங்களையும் மேற்படி நபர்கள் கூட்டாக பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ரூ. ஆயிரத்துக்கு மட்டும் ரசீது கொடுத்து விட்டு குடியிருப்போர்களையும், விவசாயிகளையும் அப்புறப்படுத்தி வருவதாக என்னிடம் பலபேர் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.

    நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அவ்வாறு அனுபவத்தில் இருப்பவர்களை அப்புறப்படுத்தியிருந்தால் மீண்டும் அதே குடியிருப்புகளிலும், அதே விவசாய நிலத்திலும் மீண்டும் அனுமதிக்க வேண்டுவதோடு, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் மேற்படி நபர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதுபோல் அவர்களது வாரிசுதாரர்களுக்கும், அனுபவத்தில் இருந்தவர் களுக்கும் திருவாவடுதுறை ஆதீனமும், மாவட்ட வருவாய்த்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து வெளிப் படை யாக அறிவித்து குத்தகையை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

    விதிகளுக்கு உட்பட்டு

    மேலும் எனது தலைமை யிலும், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் முன்னிலையிலும் கடந்த 24.12.2022 அன்று ராதாபுரம் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து நடந்த சமாதானக் கூட்டத்தில் எடுத்த முடிவுபடி தற்போது நிலம் அல்லது வீடு யார் அனுபவத்தில் உள்ளதோ அவர்களுக்கு மேற்படி நிலங்களை முறையான விசாரணையின் படி அரசு விதிகளுக்கு உட்பட்டு குத்தகை வழங்க வேண்டும்.

    நிலங்களின் நிலை எவ்வாறு உள்ளதோ அதே நிலை தொடர வேண்டுமென முடிவு செய்யப் பட்டதை செயல் படுத்த வேண்டுகிறேன்.மேற்படி விஷயங்களில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தி மேற்படி கிராமங்களில் வாழ்கின்ற குடியிருப்போர்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர் களது வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதோடு, இந்த அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கின்ற நன்மதிப்புக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராதாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துகுறிச்சி, இளையநயினார்குளம், சிதம்பராபுரம், திருவம்பலாபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளது.
    • தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பலை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா ஊடக பிரிவு ராதை காமராஜ் தெரிவித்துள்ளார்.

    பணகுடி:

    ராதாபுரம் போலீஸ் நிலைய எல்ைலைக்குட்பட்ட ஆத்துகுறிச்சி, இளையநயினார்குளம், சிதம்பராபுரம், திருவம்பலா புரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளது.

    மின் வயர் திருட்டு

    இந்த தோட்டங்களை குறிவைத்து பல மாதங்களாக மின் வயர் மற்றும் மின் மோட்டார்களை ஒரு கும்பல் திருடி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துக்குறிச்சி ஊருக்கு அருகே உள்ள தோட்டத்தில் திருட்டு கும்பல் மீண்டும் கைவரிசை காட்டி உள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பலை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா ஊடக பிரிவு ராதை காமராஜ் தெரிவித்துள்ளார்.

    • ராதாபுரம் தாலுகா தனக்கார்குளம் பஞ்சாயத்து கோலியான் குளத்தில் பாரம்பரியமிக்க இயற்கை விவசாய பயிற்சி கண்காட்சி நடந்தது.
    • இயற்கை உணவு தயாரிக்கும் முறை குறித்து பயிற்சியில் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    பணகுடி:

    ராதாபுரம் தாலுகா தனக்கார்குளம் பஞ்சாயத்து கோலியான் குளத்தில் பாரம்பரியமிக்க இயற்கை விவசாய பயிற்சி கண்காட்சி நடந்தது. இதில் இயற்கை விவசாய அமைப்பினர், பசுமை இயக்கம், ராதாபுரம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம், ஜெய் பீம் பொதுநல இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் இணைந்து கண்காட்சியை நடத்தினர். கண்காட்சியில் இயற்கை சார்ந்த பண்டைய காலத்தில் மூதாதையர்கள் பயன்படுத்திய உணவுப் பொருட்கள், தானிய வகைகள் இடம் பெற்றிருந்தன. அரிசி ரகங்களில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, குட வாழை, காட்டு யானம், தூய மல்லி, சொர்ணம் சூரி, குதிரைவாலி, சாமை போன்ற அரிசி ரகங்களை கண்காட்சியில் பங்கு பெற்ற பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

    குறிப்பாக தானிய வகைகள், நாட்டு மருந்துகள், பழங்காலத்தில் வீடுகளில் பயன்படுத்திய உபயோகப் பொருட்கள், தேன் கலந்த பருப்பு வகைகள், செவ்வாழை பழ அல்வா போன்றவை கண்காட்சியில் வெகுவாக கவர்ந்தது. சிரட்டை, ஓலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் வியப்படைய செய்தன. இயற்கை உணவு தயாரிக்கும் முறை குறித்து பயிற்சியில் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இயற்கை வெல்லம், அவல் வகைகள், மரச்செக்கு தேங்காய் எண்ணையில் தயாரிக்க ப்பட்ட மகா தச கவ்யம் சோப்பு சோப்பு என இடம் பெற்றிருந்த பொருட்களை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கிச் சென்றனர்.

    முக்கிய அங்கமாக பல வகையான மரக்கன்றுகள் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்தது. மண் பாண்டங்கள், தானியங் களில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்ப னையை அலங்க ரித்தது. மூலிகைகளால் தயாரான பல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முக்கியத்துவமாக இருந்தது. பெண்கள் மத்தியில் எதை வாங்குவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்ததுடன் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள், ஓலைப் பொருட்கள் என கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஏராளமான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    • நாகேந்திரன் குடும்பத்துடன் குலசை கோவிலுக்கு சென்றுள்ளார்.
    • ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆதிச்சை பிள்ளை மகன் நாகேந்திரன் (வயது 48).

    பாலத்தில் மோதி கவிழ்ந்தது

    ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 18-ந் தேதி குடும்பத்துடன் குலசை கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மதியம் ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

    ராதாபுரம் அருகே உள்ள பெத்தரங்கபுரம் ஊருக்கு கிழக்கே உள்ள பாலத்தில் சென்றபோது ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் நாகேந்திரன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரது குடும்பத்தினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனிடையே அந்த வழியாக சென்றவர்கள் விபத்து நடந்ததை பார்த்து ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • புத்தேரி என்னும் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது.
    • போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் இருக்கன்துறை ஊராட்சி புத்தேரி என்னும் கிராமத்தில் அரசு அனுமதி பெற்ற தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது.

    கல்குவாரி

    இதில் நேற்று முன்தினம் கல்குவாரியில் கற்களை தகர்க்க சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களை பயன்படுத்தியதாக தெரிகிறது.

    இதனால் அந்தப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் கற்கள் வெடித்து சிதறியதில் சுடலை மற்றும் இசக்கியப்பன் என்பவரது வீட்டின் மேற்கூறையும் மற்றும் வீட்டின் பக்கவாட்டின் சிமெண்ட் பூச்சிகள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

    வாழைகள சேதம்

    மேலும் கல் குவாரிகளில் வெடித்து சிதறிய கற்கள் விவசாயிகள் பயிரிட்ட வாழைகள் மீது விழுந்துள்ளது. இதனால் வாழை பயிர்களும் சேதம் அடைந்துள்ளது.

    இதையறிந்த ஊர் பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஊரின் மையப் பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கஞ்சி காட்சியும் போராட்டம் நடத்தினர். நேற்று இரவு விடிய, விடிய நடைபெற்ற போராட்டம் இன்றும் தொடர்கிறது.

    சம்பவ இடத்திற்கு பாரதீய ஜனதா மாவட்ட பொருளாளர் செட்டிகுளம் பாலகிருஷ்ணன் சென்று ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், புத்தேரியில் கல் குவாரி அமைக்க ஆரம்பத்தில் இருந்து பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    போலீஸ் குவிப்பு

    கல்குவாரியால் இவ்வளவு விளைவுகள் நடந்த பின்பும் அதிகாரிகள் பொதுமக்களை வந்து சந்திக்கவில்லை. கல்குவாரியை மூடவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

    இதனால் புத்தேரி கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம் கிராமத்தில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது.
    • தனியாருக்கு சொந்தமான ஒரு காற்றா லையில் மர்மநபர்கள் சிலர் புகுந்து அங்கிருந்த காப்பர் வயர்களை திருடிச்சென்றனர்

    நெல்லை:

    ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம் கிராமத்தில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தனியாருக்கு சொந்தமான ஒரு காற்றா லையில் மர்மநபர்கள் சிலர் புகுந்து அங்கிருந்த காப்பர் வயர்களை திருடிச்சென்றனர்.

    இதுதொடர்பாக காற்றாலை நிறுவன மேலாளர் ஆறுமுகம் என்பவர் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காற்றாலையில் ெபாருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் 3 வாலிபர்கள் இரவு நேரத்தில் காற்றாலைக்குள் புகுந்த காட்சி பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

    • ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளைமாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நடந்தது.
    • ராதாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 43 கிளைகளிலும் பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளைமாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நடந்தது. வடக்கு ஒன்றியதலைவர் சக்திவேல்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி, திசையன்விளை பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் லிவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் ஆனந்த பாண்டி வரவேற்று பேசினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கட்டளை ஜோதி, மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் விவேகானந்தன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கோபால் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ராதாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 43 கிளைகளிலும் தலா 15 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திசையன்விளைவாரச்சந்தை வளாகத்தில் நவீன முறையில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்தில் ஏற்கனவே அங்கு கடை வைத்து உள்ளவர்களுக்கு தலா ஒரு கடை மட்டும் வழங்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • புனித ஆகத்தம்மாள் ஆலயம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • புனித ஆகத்தம்மாள் சப்பரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பணகுடி:

    ராதாபுரம் அருகே ரம்மதபுரம் புனித ஆகத்தம்மாள் ஆலயம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றாலயமாகும்.

    இங்கு ஆண்டுதோறும் 2 நாட்கள் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை இருதயசாமி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு புனித ஆகத்தம்மாள் ரத வீதிகளில் சப்பரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் பக்தர்கள் நேர்த்தி கடனாக உப்பு, மிளகு தூவியும் வழிபட்டனர். நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டார்லின் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் முத்தாரம்மன்கோவில் உள்ளது.
    • இந்த கோவிலின் உபயதாரராக அதே ஊரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் தங்கசாமி(வயது 30) இருந்து வருகிறார்.

    நெல்லை:

    ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் முத்தாரம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் உபயதாரராக அதே ஊரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் தங்கசாமி(வயது 30) இருந்து வருகிறார்.

    இவர் கடந்த 17-ந்தேதி கோவிலில் பூஜை முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு வீடு திரும்பிவிட்டார். அதன்பின்னர் நேற்று காலை கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

    மேலும் கோவில் கருவறையில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்கநகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தங்கசாமி பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
    • முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ராதாபுரம் யூனியனுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது .எனவே அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

    அதில், ''ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி வழங்கிட வேண்டும். முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ராதாபுரம் யூனியனுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது.

    எனவே அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அலெக்ஸ் அப்பாவு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்ய ப்பன், கனகராஜ், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், கல்லிடைக்குறிச்சி பேரூர் செயலாளர் இசக்கி பாண்டியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×