என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "RadhaRavi"
- கடைசி தோட்டா படம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது.
- இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.
'லோக்கல் சரக்கு' படத்தை தொடர்ந்து ஆர்.வி.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்து தயாரிக்கும் படம் 'கடைசி தோட்டா'. அறிமுக இயக்குநர் நவீன் குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் டத்தோ ராதாரவி, வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீஜா ரவி, யாஷர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மோகன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நீலு குமார் வசனம் எழுதியிருக்கிறார். லோகேஷ்வர் படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சினேகன் மற்றும் பாலு பாடல்கள் எழுதியுள்ளனர். வேலண்டினா மற்றும் யுகேஷ் ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.
இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய டத்தோ ராதாராவி நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்றார். மேலும், அவர் அழைத்தால் அவரது கட்சியில் இணைய தயார் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "கடைசி தோட்டா ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர். ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கதையை இயக்குநர் நவீன் குமார் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார். படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது."
"இந்த படத்தில் நான் தான் நாயகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் நாயகன் அல்ல, கதையின் நாயகன். அனைவருக்கும் நல்ல கதாபாத்திரம் தான், ஆனால் கதை கரு என் பக்கம் இருப்பதால், என்னை நாயகன் என்று சொல்கிறார்கள். வனிதா விஜயகுமாருக்கும் சிறப்பான வேடம். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்."
"நடிகைகள் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், இதை நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன், ஆனால் அதை யாரும் கேட்பதில்லை. இந்த நிகழ்ச்சியில் கூட வனிதா கலந்துக்கொள்ளவில்லை என்பது படக்குழுவுக்கு வருத்தம் தான்."
"சினிமாவில் எனக்கு 50 வது ஆண்டு, நான் இதையும் தாண்டி நடித்துக் கொண்டிருப்பேன். நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். அவன் இறப்பு வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லாவா, அதேபோல் அவன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும், காட்சிகளும் அடிக்கடி ரசிகர்கள் கண் முன் வந்துக்கொண்டு தான் இருக்கும். அதனால், என்னுடைய நடிப்பு பயணம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும். தற்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பது வரவேற்க வேண்டியது தான். அவர் என்னை அழைத்தால் நிச்சயம் நான் அவருடன் இணைவேன்.," என்று தெரிவித்தார்.
விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஆண்டு பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக, நடிகர் ராதாரவி மீது புகார் எழுந்தது.
- இந்த புகாரில் நடிகர் ராதாரவி இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த சங்கீதா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக சேர்ந்து சினிமா டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற டப்பிங் சங்கத்தின் 35ஆவது ஆண்டு பேரவை கூட்டத்தின் போது, பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக, நடிகர் ராதாரவி மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின்னர் நடிகர் ராதாரவி, இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பெண் டப்பிங் கலைஞர் சங்கீதாவை ஆபாசமாக பேசி தாக்கிய புகாரில் நடிகர் ராதாரவி இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294 பி ஆபாசமாக பேசுதல், 323 சிறுகாயம் ஏற்படுத்துதல், 354 பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக வலம் வருபவர் ராதாரவி.
- ராதாரவி புதிய வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.
கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராதாரவி. கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்டிஸ் என பன்முகத்தன்மை கொண்ட ராதாரவி தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 500 படங்களுக்கு மேல் ராதாரவி பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ராதாரவி புதிய வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது. கோட் சூட் அணிந்து வில்லன் போன்று காட்சியளிக்கும் ராதாரவியின் புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
- தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படங்களை இயக்கிய ராகேஷ் இயக்கும் 'சாமானியன்' படத்தின் கதாநாயகனாக ராமராஜன் நடிக்கிறார்.
- இப்படத்தில் ராமராஜனுடன் இணைந்து ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த ராமராஜன் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய ராகேஷ் இயக்குகிறார். இதனை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.
இதன் கதாநாயகியாக நக்சா சரண் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது.
இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, 'பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் சென்றார்கள். ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்றான். அதேபோல இந்த ராமராஜன் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருக்கிறார். அப்படி வனவாசம் சென்று வந்தவர்கள் அனைவருமே அரசாண்டதுபோல, இவரும் நிச்சயமாக அரசாள்வார்.
இவர் நடித்த சோலை புஷ்பங்கள் படத்திலேயே நான் டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளேன். ஆனால் இப்போதுதான் முதன்முறையாக இவருடன் இணைந்து நடிக்கிறேன். இவர் எல்லாம் எதற்கு திரும்பவும் நடிக்க வருகிறார் என்று ராமராஜனை பார்த்து பலர் மீம்ஸ் போடுவதாக இங்கே சொன்னார்கள். நீங்கள் ஏன் சுவாசிக்க வேண்டும் என்று ஒருவரை பார்த்து கேள்வி கேட்பது எவ்வளவு அநாகரீகமான கேள்வியோ, ராமராஜனை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்பதும் அதுபோலத்தான்" என்றார்.
- நீண்ட இடைவேளைக்கு பிறகு ராமராஜன் மீண்டும் 'சாமானியன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.
- இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி படக் குறித்தும், ராமராஜன் குறித்தும் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி பெற்றன. 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'எங்க ஊரு காவல்காரன்', 'என்ன பெத்த ராசா', 'கரகாட்டக்காரன்', 'பாட்டுக்கு நான் அடிமை' போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படங்களாக பார்க்கப்பட்டு வருகின்றன.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய ராகேஷ் இயக்குகிறார். இதனை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இதன் கதாநாயகியாக நக்சா சரண் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் தயாராகிறது.
இப்படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் பேசிய ராதாரவி, "இது வேற ரூட்டில் போயிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரமோ என்னவோ ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்து விட்டார். நான் ராம.நாராயணன் இயக்கத்தில் பேய்வீடு படத்தில் நடித்த சமயத்திலேயே ராமராஜனை அந்தப்படத்தின் உதவி இயக்குனராக எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நீ நடிகன் ஆகிவிடுவாய் என்று சொன்னேன். அதன்பிறகு அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன்.
ராமராஜன் என்றைக்குமே ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை. அவரது படங்கள் அந்த இருவரின் படங்களை விட நன்றாக ஓடின அவ்வளவுதான். ஆனால் மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது. ஒருமுறை நடிகர் கமல் விமானநிலையத்தில் இவரை பார்த்துவிட்டு இவரது ஹேர்ஸ்டைல் ஒரிஜினல் தானா, இல்லை விக் வைத்திருக்கிறாரோ என்கிற சந்தேகத்தில் தொட்டு பார்த்தாராம். ஆனால் இப்போதும் அதேபோன்ற ஹேர்ஸ்டைலுடன் தான் காட்சியளிக்கிறார்.
அவருக்கு மனசு சுத்தம். அதனால் தான் முடி கொட்டவில்லை என்று நினைக்கிறேன். இயக்குநர் ராகேஷ் இதற்கு முன்பு இயக்கிய மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தில் கூப்பிட்டு ஒருநாள் மட்டும் வேலை கொடுத்தார். இப்போது கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி இந்த படத்தில் ஏழு நாட்கள் வேலை கொடுத்தார். எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் தியேட்டருக்கு வந்தால் செலவாகிறது என்று சொல்லக்கூடாது. படம் பார்க்க வந்தால் டிக்கெட் மட்டும் வாங்குங்கள். பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி நீங்களாக செலவை இழுத்துவிட்டுக்கொண்டு அதற்கு விலைவாசியை காரணம் காட்டாதீர்கள்" என்று பேசினார்.
.
📣 Our film #NenjamunduNermaiyunduOduRaja has been certified 'U'. A complete gala in theatres from June 14 🥳🎉🎊#NNORFromJune14@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @karthikvenu10 | @rio_raj | @KanchwalaShirin | @RjVigneshkanth | @DoneChannel1 | @SonyMusicSouthpic.twitter.com/3sAlQ2ohAM
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) May 24, 2019
ராதாரவி நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி ஒரு இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
‘தி.மு.கவில் இருந்து நீக்கி விட்டதாக சொன்னார்கள். நீங்கள் என்ன நீக்குவது, நானே விலகிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதுக்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன். அரசியலில் இதெல்லாம் சகஜம்.
ஆனால், கட்சி எனக்கு ஒரு ஷோ காஸ்ட் நோட்டீஸ் அனுப்பி, ‘உன் மேல் இந்த தப்பு இருக்கு. உன்னை ஏன் கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக்கூடாது’ன்னு கேட்டு இருக்கலாம். அது மட்டும்தான் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு சில கதாநாயகிகள் தவறான தொழில் செய்கிறார்கள் என்று அவர்கள் படத்துடன் செய்தி வந்தது. அப்போது அவர்களுக்காக வழக்கு போட்டு ஜெயித்து கொடுத்தேன். நடிகைகள் பற்றி ஒரு வார பத்திரிகையில் தொடர் வந்தபோது, நான், ரேவதி, வாசுகி அம்மா மூணு பேரும் போய் சண்டை போட்டு அந்த தொடரை நிறுத்தவில்லையா?
இதையெல்லாம் மறந்து விட்டார்கள். கடைசியாக ஒன்று சொல்கிறேன். நயன்தாராவை பற்றி நான் பேசியது அவர்களையும் அவர்களை கட்டிக்கப் போறவரையும் வருத்தப்பட செய்திருந்தால் அதற்கு நான் மனவருத்தப்படுகிறேன்.’
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #RadhaRavi #Nayanthara
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்