என் மலர்
நீங்கள் தேடியது "Radhika"
- தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
திருப்பதி:
பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.
திருமணத்தில் கலந்து கொள்ள தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. முக்கிய பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் வெங்கடேஷ் நரசைய்யா அல்லூரி (வயது 26) மற்றும் முகமது ரஃபி ஷேக் (28) ஆகியோர் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
சந்தேகத்திற்கு இடமாக இருவரும் சுற்றி திரிந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர்களை பிடித்து வெளியே அனுப்பினர்.
வெளியே சென்ற இருவரும் மீண்டும் யாருக்கும் தெரியாமல் மண்டபத்திற்குள் நுழைந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள் 2 வாலிபர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரவன் செல்ல அச்சப்பட்டு ஓட்டல் அறைக்கு சென்று உடை மாற்றினேன்.
- ஆண்கள் யாரும் நடிகைகளுக்கு ஆதரவாக பேசவில்லை.
பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைப்பட உலகம் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
நடிகைகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு, இயக்குனர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது:
* மலையாள திரையுலகில் நடிகைகளின் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
* கேரவனில் கேமரா பொருத்தி நடிகைகள் உடை மாற்றும் வீடியோவை ஆண்கள் ரசித்ததை பார்த்தேன்.
* கேரவன் செல்ல அச்சப்பட்டு ஓட்டல் அறைக்கு சென்று உடை மாற்றினேன்.
* திரையுலக சிஸ்டமே சரியாக இல்லை.
*ஆண்கள் யாரும் நடிகைகளுக்கு ஆதரவாக பேசவில்லை
* நடிகைகளின் அறை கதவை தட்டும் நிலை பல திரையுலகிலும் உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஒரு மலையாள படப்பிடிப்பின்போது அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
- ராதிகா சரத்குமாரின் பேட்டி திரை உலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை:
மலையாள திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பாலியல் வன்முறைகள் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகிலும் உள்ளது.
ஒரு மலையாள படப்பிடிப்பின்போது அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதுபற்றி கூட்டத்தில் தமிழ் தெரிந்த ஒருவரிடம் விசாரித்தபோது கேரவனில் ரகசியமாக கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இதையடுத்து கேரவன் ஆட்களை அழைத்து கேரவனுக்குள் கேமரா வந்தால் செருப்பால் அடிப்பேன் என எச்சரித்தேன். தொடர்ந்து நான் கேரவனை பயன்படுத்துவதில்லை. ஓட்டலுக்கு சென்று விடுவேன் என கூறினார்.
ராதிகா சரத்குமாரின் பேட்டி திரை உலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
தொடர்ந்து கேரவனுக்குள் ரகசிய கேமரா பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பிய ராதிகாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ராதிகாவை தொலைபேசியில் கேரள போலீசார் தொடர்பு கொண்டு கேரவனுக்குள் ரகசிய கேமரா பயன்படுத்தப்பட்ட சம்பவம் பற்றி விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ராதிகா.
- இவர் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் 'கொலை', 'லவ் டுடே', 'சந்திரமுகி -2' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சிவகுமார் குடும்பத்துடன் ராதிகா
இந்நிலையில், ராதிகா சரத்குமார் தீபாவளி பண்டிகையை நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இவர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நேற்று மாலை தீபாவளியை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராதிகா பகிர்ந்துள்ளார்.
- ஷெரோ 2022-க்கான விருதுகள் வழங்கும் விழாவில் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
- இவ்விழாவில் நடிகை ராதிகா இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் கூறினார்.
ஷெரோ 2022-க்கான விருதுகள் வழங்கும் விழாவில் சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், ஷெரோ ஹோம் புட் நிறுவனர் ஜெயஸ்ரீ, திலக் வெங்கடசாமி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் ஆகியோர் இணைந்து வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனை படைத்த திருமதி நித்யாவிற்கு குயின் விருதை வழங்கினர்
.

ராதிகா
இந்த விழாவில் வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனை புரிந்த 50க்கும் மேற்பட்ட பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை ராதிகா பேசியதாகவது, நானும் சுகாசினியும் 42 ஆண்டுகள் தோழிகளாக இருக்கிறோம். சுகாசினி மிகவும் பொறுமைசாலி, ஆனால் தான் பொறுமையாக இருக்க மாட்டேன்.

ராதிகா
திறமையான பெண்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தன்னை அழைத்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் போன்ற பிரபலங்களுக்கு பாராட்டுக்கள் விருதுகள் கிடைப்பது பெரிதல்ல. வீட்டிலேயே உணவு தயாரிக்கும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்குவது உண்மையில் பாராட்டுக்குரியது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பிரபலங்களாக உருவாக முடியாது இருந்தாலும் அனைவரும் இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ராணியாக இருப்பது மகிழ்ச்சி என்றார்.

Super happy to announce that the super talented @aditiraohydari will be singing her debut Tamil song in my music for @vasantabalan sirs #jail .. it’s a duet with me ... the song is called #காத்தோடு#kathhodu .. can’t wait for u guys to hear it ✨💫 pic.twitter.com/hT6SdO1von
— G.V.Prakash Kumar (@gvprakash) December 5, 2018
Shoot of @vasantabalan sirs #jail wrapped ... thanks sir for the fantastic script ... waiting for it to unveil soon ... 💫✨💫 pic.twitter.com/zzJXxtab8P
— G.V.Prakash Kumar (@gvprakash) September 29, 2018
Here goes the first look of my next with dir @vasantabalan sir ... #jail#ஜெயில் .. going to be a very important film ... produced by krikes pic.twitter.com/BndeiycbnS
— G.V.Prakash Kumar (@gvprakash) August 3, 2018
Meet #Karuna from #jail friends #ஜெயில்@vasantabalanpic.twitter.com/sqNesIPdbp
— G.V.Prakash Kumar (@gvprakash) August 3, 2018

