என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "rafale aircraft"
- வருகிற 17-ந் தேதி தொடங்கி மே மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.
- 4 விமானங்களும், பயிற்சி பெறும் ராணுவ வீரர்களும் பிரான்சு நாட்டிற்கு இன்று புறப்படுகிறார்கள்.
புதுடெல்லி:
பிரான்ஸ் நாட்டில் பன்னாட்டு போர் விமானங்களின் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி வருகிற 17-ந் தேதி தொடங்கி மே மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த பயிற்சி முகாமில் இந்தியாவின் ரபேல் போர் விமானங்கள் கலந்து கொள்கின்றன.
இதற்காக இரண்டு சி 17 மற்றும் இரண்டு ஐஎல்-78 ரக ரபேல் விமானங்கள் அனுப்பபடுகிறது. இந்த 4 விமானங்களும், பயிற்சி பெறும் ராணுவ வீரர்களும் பிரான்சு நாட்டிற்கு இன்று புறப்படுகிறார்கள்.
- ரபேல் போர் விமானம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
- வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல் போன்ற நவீன அம்சங்கள் இந்த விமானத்தில் உள்ளன.
புதுடெல்லி:
பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தன. விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவை முறைப்படி இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன.
அதன்பின்னர் ஒவ்வொரு தொகுப்பாக விமானங்கள் அனுப்பப்பட்டன. இதுவரை 35 விமானங்கள் வந்து சேர்ந்த நிலையில், இறுதிக்கட்டமாக 36வது ரபேல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.
அனைத்து ரபேல் விமானங்களும் வந்து சேர்ந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் "பேக் இஸ் கம்ப்ளீட்" என குறிப்பிட்டுள்ளது.
இந்த ரபேல் போர் விமானம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் இந்த விமானத்தில் உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று நடைபெற்ற ‘மக்களின் குரல்’ என்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஃபேல் போர் விமானம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி தயாரா? என சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது 526 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட போர் விமானம், தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு வாங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மோடி இந்திய மக்களுக்கு பிரதமராக பணியாற்றாமல், தொழிலதிபர்களுக்கு பிரதமராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் கிடைக்கும் லாபம் எதுவும் ஏழைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை ஏனெனில் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு உதவுவதிலேயே மும்முரமாக செயல்படுவதாக தெரிவித்த ராகுல் காந்தி, அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாகவும், இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய கொள்ளையில் மோடியும் கூட்டாளி எனவும் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleAircraftDeal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்